Published:Updated:

'2012 முதல் விவசாயத்துக்கு தடையற்ற மின்சாரம்'

சென்னை, ஆக.17,2011

தமிழகத்தில் மின் உற்பத்தி முழுமை அடைந்தவுடன் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் முதல் விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் தடங்கல் இன்றி மின்சாரம் வழங்கப்படும் என்று மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தார். ##~~##

தமிழக சட்டப்பேரவையில் இன்று ஒரே நாளில் 3 மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்றது.

எரிசக்தி துறை மானிய கோரிக்கையை இத்துறைக்கான அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தாக்கல் செய்தார். பின்னர் மானிய கோரிக்கை தொடர்பான உறுப்பினர்கள் விவாதம் நடைபெற்றது.

அப்போது அமைச்சர் விஸ்வநாதன் கூறுகையில், "தமிழகத்தில் வருகிற 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் முழுமையாக மின்சாரம் நமக்கு கிடைக்கும். அவ்வாறு மின்சாரம் கிடைத்தவுடன் விவசாயிகள் அனைவருக்கும் 24 மணி நேரமும் தடங்கல் இன்றி மும்முனை மின்சாரம் வழங்கப்படும்.

மின்சாரத் துறைக்கு தேவையான உபகரணங்கள் அனைத்தும் தற்போது வாங்கப்பட்டு வருகின்றன. காற்றாலை மூலம் உற்பத்தியாகும் அனைத்து மின்சாரம் முழுவதையும் பயன்படுத்திய தனியார் துறை மூலம் உரிய திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தின் மின் தேவை நிறைவடைந்ததும் மின் இணைப்புக் கோரி காத்திருக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் விரைவாக மின் இணைப்பு வழங்குவதற்குரிய நடவடிக்கையை அரசு மேற்கொள்ளும்," என்றார் அமைச்சர்.

தொழில் துறைக்கான மானிய கோரிக்கையை அமைச்சர் எம்.பி.வேலுமணி தாக்கல் செய்தார். சிறு மற்றும் குறு தொழில்கள் துணை மானிய கோரிக்கையை அமைச்சர் சி.சண்முகவேலு தாக்கல் செய்தார்.

அடுத்த கட்டுரைக்கு