Published:Updated:

உணவு பதப்படுத்துதல் தொழிலுக்கு 35% மானியத்துடன் கடனுதவி!

PMFME ( PMFME )

பருப்பு, எண்ணெய், சிறுதானிய மதிப்பு கூட்டுதல், மாவு தயாரித்தல் தொழில்களுக்கு அதிகபட்சம் 30 லட்சம் ரூபாய் வரை கடன் பெறமுடியும் என்றும், இதில் 35% மானியமாக ரூ.10 லட்சம் பெறலாம்...

உணவு பதப்படுத்துதல் தொழிலுக்கு 35% மானியத்துடன் கடனுதவி!

பருப்பு, எண்ணெய், சிறுதானிய மதிப்பு கூட்டுதல், மாவு தயாரித்தல் தொழில்களுக்கு அதிகபட்சம் 30 லட்சம் ரூபாய் வரை கடன் பெறமுடியும் என்றும், இதில் 35% மானியமாக ரூ.10 லட்சம் பெறலாம்...

Published:Updated:
PMFME ( PMFME )

உணவு பதப்படுத்துதல் தொழில் தொடங்க மானியத்துடன் கடன் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உணவு பதப்படுத்துதல் தொழில்
உணவு பதப்படுத்துதல் தொழில்
Dinamaalai

மதுரையில் வேளாண் விற்பனை துறையின் கீழ் செயல்பட்டு வந்த உணவுப் பதப்படுத்துதல் தொழில் திட்டம், தற்போது மாவட்ட தொழில் மையத்தின் மூலமும் செயல்படுத்தப்படுகிறது. இந்நிலையில், பிரதமரின் உணவுப் பதப்படுத்துதலுக்கான குறுந்தொழில்கள் (பி.எம்.எப்.எம்.இ.,) நிறுவனத்தின் கீழ் உணவு பதப்படுத்துதல் தொழில் தொடங்க விண்ணபிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யார் யார் விண்ணப்பிக்கலாம்?

விண்ணப்பிப்பவர்கள் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் அவர்கள் விவசாயம் சார்ந்த உணவுப்பதப்படுத்துதல் தொழில்நுட்பத்தை கையாளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

துவரம் பருப்பு
துவரம் பருப்பு

மானியம் என்ன?

பருப்பு, எண்ணெய், சிறுதானிய மதிப்பு கூட்டுதல், மாவு தயாரித்தல் தொழில்களுக்கு அதிகபட்சம் 30 லட்சம் ரூபாய் வரை கடன் பெறமுடியும் என்றும், இதில் 35% மானியமாக ரூ.10 லட்சம் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு என்ன?

இத்தொழிலைத் தொடங்க வயது வரம்பு இல்லை. ஏற்கனவே தொழில் தொடங்கி நடத்தி வருபவர்கள் அதை விரிவாக்கம் செய்வதற்கும், புதிய யூனிட் தொடங்குவதற்கும் இந்த திட்டத்தின் மூலம் கடன் பெறலாம்

தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய்

மானியம் யாருக்கு கிடையாது?

ஒருமுறை இத்திட்டத்தின் மூலம் மானியம் பெற்றிருந்தால், மீண்டும் மானியம் வழங்கப்படமாட்டாது.

எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

உணவு பதப்படுத்துதல் தொழில் தொடங்க விரும்புபவர்கள், ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, மதுரை அழகர்கோவில் சாலையில் உள்ள மாவட்ட தொழில் மையத்தை அணுகலாம்.