Published:Updated:

ஜல்லிக்கட்டு காளைகளோடு விளையாடும் 4 வயது மதுரை சிறுமி... வியக்கும் ஊர்மக்கள்!

ஜல்லிக்கட்டு காளையுடன் அபி
ஜல்லிக்கட்டு காளையுடன் அபி

சிலும்பும் காளைகள் அருகில் செல்வது, முத்தமிடுவது, கட்டித் தழுவுவது என்று நெருக்கமானவள், இப்போது தீவனம், பிஸ்கட், பேரீச்சம் பழம் என காலை உணவுகளை அவற்றுக்கு வழங்க ஆரம்பித்திருக்கிறாள்.

கிட்ட நெருங்கினால் முட்டிவிடுமோ என்று பெரியவர்களே அஞ்சும் ஜல்லிக்கட்டு காளைகளை அருகிலிருந்து பராமரிக்கத் தொடங்கியுள்ள 4 வயது சிறுமி, அனைவரையும் ஆச்சர்யப்பட வைக்கிறாள்.

தந்தையுடன் அபி
தந்தையுடன் அபி

பொங்கல் திருநாளை முன்னிட்டு அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட ஊர்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. தமிழர்களின் பண்பாட்டு விழுமியமாகவும் வீர விளையாட்டாகவும் விளங்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு மாடுபிடி வீரர்களும் காளை வளர்ப்போரும் தயாராகி வருகிறார்கள்.

ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்பதென்பது சாதாரண விஷயமல்ல. முழுமையான ஈடுபாடு உள்ளவர்களால்தான் அவற்றை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரமுடியும். தங்கள் குடும்பத்தில் ஓர் உறுப்பினராக நினைத்துத்தான் அதைப் பராமரிப்பார்கள்.

தற்போது ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்க காளைகளுக்கு பயிற்சி கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

காளையுடன் அபி
காளையுடன் அபி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்த வினோத்-இலக்கியா தம்பதி புகழ், தளபதி என இரண்டு காளைகளை வளர்த்து வருகிறார்கள்.

காளைகளுக்கு பயிற்சி அளிக்கும்போதும் அதற்கு உணவு கொடுக்கும்போதும் 4 வயதான தங்கள் மகள் அபியையும் உடன் வைத்துக்கொண்டே செய்வார்கள். அதனால், அபி காளைகளுடன் விளையாட ஆரம்பித்தாள்.

சிலும்பும் காளைகள் அருகில் செல்வது, அதற்கு முத்தமிடுவது, கட்டித் தழுவுவது என்று நெருக்கமானவள், தீவனம், பிஸ்கட், பேரீச்சம் பழம் என காலை உணவுகளை இப்போது அவற்றுக்கு வழங்க ஆரம்பித்திருக்கிறாள்.

ஜல்லிக்கட்டுக் காளைகளை பராமரிக்கும் 4 வயதுச் சிறுமி... வியக்கும் ஊர்மக்கள்! கிட்ட நெருங்கினால் முட்டிவிடுமோ என்று...

Posted by Aval Vikatan on Tuesday, January 5, 2021

பிறகு காளைகளை நடைப்பயிற்சி, மண் குத்தும் பயிற்சி, நீச்சல் பயிற்சிகளுக்கு அழைத்துச் செல்லும்போது தானும் கூடவே செல்கிறாள்.

ஆள்களைக் கண்டால் ஆக்ரோசம் காட்டும் காளைகள், குழந்தை அபியை பார்த்ததும் அடங்கிவிடுகின்றன.

காளையுடன் விளையாட்டு
காளையுடன் விளையாட்டு

இவ்விரு காளைகளும் பல ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று தங்கக் காசு, பீரோ, ஃபிரிட்ஜ் என பல்வேறு பரிசுகளை வாங்கிக் குவித்துள்ளன. தற்போது இவை இரண்டும் குழந்தை அபியுடன் செல்லமாக விளையாடுவதை ஊர் மக்கள் கண்டு வியக்கிறார்கள்.

அன்புக்கு அடிமையாகாத உயிர் எது?

அடுத்த கட்டுரைக்கு