Published:Updated:

33 சென்ட்... 400 கிலோ நிலக்கடலை!

நிலக்கடலைத் தோட்டத்தில் ஈசாக்
பிரீமியம் ஸ்டோரி
News
நிலக்கடலைத் தோட்டத்தில் ஈசாக்

மதிப்புக்கூட்டல்

விளையவைக்கும் விவசாய விளைபொருள்களைத் தங்கள் குடும்பத்தினருக்கு மட்டுமல்லாமல், உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கொடுத்து மகிழ்வார்கள் விவசாயிகள். அதெல்லாம் ஒரு காலம். தற்போது கிராமப்புற மக்களே அனைத்துத் தேவைகளுக்கும் அங்காடிகளை நம்பியிருக்க வேண்டிய நிலை. இதனால் ஆரோக்கியமற்ற உணவைச் சாப்பிட வேண்டிய சூழல் உருவாகிவிட்டது.

33 சென்ட்...  400 கிலோ நிலக்கடலை!

பசுமை விகடன் வருகைக்குப் பிறகு இதில் மாற்றம் நிகழத் தொடங்கியது. இயற்கை விவசாயத்தின் மீதான ஈர்ப்பின் காரணமாக, சொந்தத் தேவைக்காக உணவு உற்பத்தியில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதற்கு உதாரணமாகத் திகழ்கிறார் தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் அருகிலுள்ள முன்னையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஈசாக்.

இவர் மூன்று ஆண்டுகளாக நிலக்கடலை விவசாயம் செய்துவருகிறார். இத்துடன் நெல், வெங்காயம், பச்சைமிளகாய்ச் சாகுபடியையும் செய்கிறார். ஒரு பகல் பொழுதில் அவரைச் சந்தித்தோம். நிலக்கடலைத் தோட்டத்தைப் பார்வையிட்டுக்கொண்டிருந்த ஈசாக், உற்சாகமாகப் பேசத் தொடங்கினார். ‘‘பசுமை விகடன்தான் என்னை இயற்கை விவசாயத்துக்கு அழைச்சுகிட்டு வந்துச்சு.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
``வாடிக்கையாளர் ஒருத்தர், அடிக்கடி பசுமை விகடனைப் பற்றி நெகிழ்ந்து பேசிக்கிட்டு இருப்பார்.’’ ``எங்க குடும்பத்துக்குத் தேவையான எண்ணெயை நாங்களே தயார் செஞ்சிக்குறோம்.’’

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

‘முடிஞ்சவரைக்கும் நஞ்சில்லாத, ஆரோக்கியமான உணவை உற்பத்தி செஞ்சு எங்க குடும்பம் சாப்பிடணும்; உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கொடுக்கணும். இயற்கை விவசாயத்துலயும் வெற்றிகரமா விளைச்சல் எடுக்க முடியும்கிற நம்பிக்கையை இந்தப் பகுதி விவசாயிகள்கிட்ட ஏற்படுத்தணும்’ இதுதான் என்னோட முதன்மையான நோக்கம். பசுமை விகடன்தான் என் மனசுல இந்த எண்ணத்தை விதைச்சது” என நெகிழ்ச்சியோடு பேசிய ஈசாக், தன்னைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினார்.

நிலக்கடலைத் தோட்டத்தில் ஈசாக்
நிலக்கடலைத் தோட்டத்தில் ஈசாக்

‘‘என் அப்பா, தம்பிங்க எல்லாரும் தீவிர ரசாயன விவசாயிகள். நான் ஐ.டி.ஐ படிச்சிட்டு, திருவெறும்பூர்ல லாரி, கார்களுக்கான உதிரி பாகங்கள், இன்ஜின் ஆயில் மொத்த விற்பனை செய்யும் கடை நடத்திக்கிட்டு இருக்கேன். என் கடைக்கு வரும் வாடிக்கையாளர் ஒருத்தர் அடிக்கடி பசுமை விகடனைப் பற்றி நெகிழ்ந்து பேசிக்கிட்டே இருப்பார். ஆரம்பத்துல நான் அதைப் பெருசா எடுத்துக்கலை. பிறகு அதுல அப்படி என்னதான் இருக்குனு படிச்சுப் பார்க்கலாம்னு வாங்கிப் பார்த்தேன். படிக்கப் படிக்க எனக்கும் விவசாயம் செய்யணும்கிற எண்ணம் வந்துச்சு. என் குடும்பத்துக்குத் தேவையான உணவுப் பொருள்களை மட்டுமாவது இயற்கை முறையில் உற்பத்தி செய்யணுங்கற முடிவுக்கு வந்தேன். எங்க குடும்பத்துக்கு அஞ்சு ஏக்கர் நிலம் இருக்கு. அதுல ரெண்டு ஏக்கர் நிலத்தை மட்டும் என்னோட கட்டுப்பாட்டுல எடுத்து இயற்கை விவசாயம் செஞ்சுகிட்டு இருக்கேன்.

ஊடுபயிராக முருங்கை
ஊடுபயிராக முருங்கை

பசுமை விகடன்ல வரும் தொழில்நுட்பங்களைப் படிச்சு இடுபொருள்கள் தயார் செய்யக் கத்துக்கிட்டோம்.

‘‘இது செம்மண் பூமி. இதுல டி.எம்.வி.7 ரக நிலக்கடலை நல்லா விளையுது. அதைத்தான் நான் சாகுபடி செய்யறேன்.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

குருவாடிப்பட்டியைச் சேர்ந்த இயற்கை விவசாயி ஆசைத்தம்பியும் எனக்கு நிறைய ஆலோசனைகள சொல்லிக் கொடுத்திருக்கார். `விவசாயத் தொழிலாளர்கள் இயற்கை விவசாயத்துக்கு ஒத்துழைப்பு கொடுக்க மாட்டாங்க’னு ஒரு பொதுவான கருத்து இருக்கு. ஆனா, என்னோட நிலத்தைக் கவனிச்சிக்கற சேசுராஜ் இதுல தீவிர ஈடுபாடு கொண்டவர். அவரோட ஒத்துழைப்புனாலதான் என்னால வெற்றிகரமா இயற்கை விவசாயம் செய்ய முடியுது’’ என்றவர் சேசுராஜை அறிமுகப்படுத்தினார்.

வெங்காயம்
வெங்காயம்

தொடர்ந்து பேசியவர், ‘‘முதல்ல நல்ல மகசூல் கிடைச்சுது. போன வருஷம் அதே 33 சென்ட்ல 10 மூட்டை மகசூல் எடுத்தோம். ஒரு மூட்டைங்கறது 40 கிலோ. இதை நாங்க முழுமையா சொந்தத் தேவைக்குத்தான் பயன்படுத்திக்கிறோம். இந்த வருஷம் ஒரு ஏக்கர்ல நிலக்கடலை, 30 சென்ட்ல நெல், 4 சென்ட்ல சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் பயிர் பண்ணியிருக்கேன். 66 சென்ட்ல கோ-4 தீவனப்புல்லும் சாகுபடி செஞ்சிருக்கேன்” என்றவர் நிறைவாக,

மாடுகள்
மாடுகள்

‘‘உடல் ஆரோக்கியத்துக்குச் சமையல்ல பயன்படுத்தும் எண்ணெய் ரொம்ப முக்கியமானது. அது, ரசாயன உரம் போடாமல் விளைவிச்ச நிலக்கடலையிலிருந்து தயார் செஞ்ச எண்ணெயா இருந்தா இன்னும் நல்லது. எங்க குடும்பத்துக்குத் தேவையான எண்ணெயை நாங்களே தயார் செஞ்சிக்குறோம். போன வருஷம் 33 சென்ட்ல இருந்து கிடைச்ச 400 கிலோ நிலக்கடலை மூலமா 300 கிலோ பருப்பு கிடைச்சுது. இதை எண்ணெயாக ஆட்டினதுல 165 லிட்டர் எண்ணெய் கிடைச்சுது. இது செம்மண் பூமி. இதுல டி.எம்.வி.7 ரக நிலக்கடலை நல்லா விளையுது. அதைத்தான் நான் சாகுபடி செய்யறேன். இந்த வருஷம் ஒரு ஏக்கர்ல 30 மூட்டை மகசூல் எதிர்பார்க்கிறேன்” என்றபடி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு, ஈசாக், செல்போன்: 93452 29367

இயற்கை நிலக்கடலை!

சாக் தன் 33 சென்ட் நிலத்தில் செய்யும் நிலக்கடலைச் சாகுபடி தொழில்நுட்பம் பற்றிப் பகிர்ந்துகொண்ட தகவல்கள் இங்கே...

தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தில், இரண்டு டன் மாட்டு எரு, ஆட்டு எரு கலந்து போட்டு உழவு செய்ய வேண்டும். தலா 200 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி, சூடோமோனஸை மணலோடு கலந்து நிலத்தில் தூவ வேண்டும்.பிறகு விதைக்கடலையை விதைக்க வேண்டும்.

களைக்கொத்தால் தலா அரையடி, முக்கால் அடி இடைவெளியில் சிறிதாகக் குழி எடுத்து, குழிக்கு ஒரு விதை வீதம் போட்டு மூட வேண்டும். இதற்கு 17 கிலோ விதைக்கடலை தேவைப்படும். விதைப்பிலிருந்து 20-ம் நாள் களையெடுக்க வேண்டும். 25 மற்றும் 40-ம் நாள் 10 கிலோ கடலைப் பிண்ணாக்குடன் இரண்டரை கிலோ கடற்பாசி உரம் கலந்து தூவ வேண்டும். விதைப்பிலிருந்து 30, 45 மற்றும் 60-ம் நாள்களில் 52 லிட்டர் தண்ணீரில் 400 மி.லி மீன் அமிலம் கலந்து செடிகள்மீது தெளிக்க வேண்டும்.

`வருமுன் காப்போம்’ நடவடிக்கையாக, 15-30 நாள்களுக்குள் 75 லிட்டர் தண்ணீரில் இரண்டரை லிட்டர் மூலிகைப் பூச்சிவிரட்டி கலந்து தெளிக்க வேண்டும். இதனுடன் 50 கிராம் கற்பூரம் கலந்துகொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும். இதன் வாசனைக்குப் பூச்சிகள் அண்டாது. இது பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும் துணைபுரியும். பூச்சிகளை ஆரம்பநிலையிலேயே கட்டுப்படுத்த 4-5 இடங்களில் மஞ்சள் நிற ஒட்டும் அட்டைகளை அமைக்க வேண்டும். மண்ணின் தன்மைக்கு ஏற்ப, தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 90-ம் நாள் நிலக்கடலை அறுவடைக்குத் தயாராகிவிடும்.