Published:Updated:

44 காட்டுப் பன்றிகள் சுட்டு வேட்டை... காரணம் என்ன?

Wild boar ( pixabay )

துப்பாக்கி சுடும் உரிமம் பெற்ற சுமார் 25 பேர் பன்றிகளை சுட்டுக் கொல்லும் பணியில் ஈடுபட்டனர். பயிர்களை நாசம் செய்யும் பன்றிகளைக் கொல்ல அம்மாநில அரசு அனுமதி அளித்திருந்தது.

44 காட்டுப் பன்றிகள் சுட்டு வேட்டை... காரணம் என்ன?

துப்பாக்கி சுடும் உரிமம் பெற்ற சுமார் 25 பேர் பன்றிகளை சுட்டுக் கொல்லும் பணியில் ஈடுபட்டனர். பயிர்களை நாசம் செய்யும் பன்றிகளைக் கொல்ல அம்மாநில அரசு அனுமதி அளித்திருந்தது.

Published:Updated:
Wild boar ( pixabay )

விவசாய நிலங்களில் விளையும் பயிர்களை வனவிலங்குகள் புகுந்து சேதப்படுத்துவது அடிக்கடி நடந்து கொண்டு இருக்கும் பிரச்னை. குறிப்பாக, மலைப்பாங்கான பகுதிகளில் வனவிலங்குகளின் வருகை அதிகப்படியாக இருக்கும். குறிப்பாக காட்டுப்பன்றிகளின் வருகை நிலக்கடலை, பழப்பயிர்கள், நெல் என அனைத்து பயிர்களையும் சாப்பிட்டு சேதப்படுத்துவது வாடிக்கையாக உள்ளது.

கேரள மாநிலம், பாலக்காட்டில் உள்ளூர் விவசாயிகள் சாகுபடி செய்த பயிர்களைக் காட்டுப்பன்றிகள் சேதம் செய்து கொண்டிருந்தது. இந்நிலையில் பயிர்களை நாசம் செய்யும் பன்றிகளைக் கொல்ல அம்மாநில அரசு அனுமதி அளித்திருந்தது. 

Wild boar
Wild boar
pixabay

இதைத் தொடர்ந்து பாலக்காட்டில் உள்ள வல்லப்புழா, சலவரா மற்றும் குலக்கல்லூர் ஆகிய கிராம பஞ்சாயத்துகளில் இருந்து, துப்பாக்கி சுடும் உரிமம் பெற்ற சுமார் 25 பேர் காட்டுப் பன்றிகளை சுட்டுக் கொல்லும் பணியில் ஈடுபட்டனர். 

இவர்கள் இரண்டு வாரங்களுக்கு முன்பு 44 காட்டுப் பன்றிகளை ஷோரனூரில் சுட்டுக்கொன்றனர். இறந்த பன்றிகளின் சடலங்கள் உள்ளூர் பஞ்சாயத்துத் தலைவரின் தலைமையில் புதைத்தனர். 

gunshot
gunshot
pixabay

இந்த நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்திய கே.பி.ஷான் என்பவர்  கூறுகையில், ``காட்டுப் பன்றிகளைச் சுடும் இந்த நடவடிக்கையில் 25 பேர் ஈடுபட்டனர். இரண்டு வாரங்களுக்கு முன்பு, ஷோரனூரில் உரிமம் பெற்ற துப்பாக்கி சுடும் நபர்களால், சுமார் 41 காட்டுப் பன்றிகள் சுட்டுக் கொல்லப்பட்டன’’ என்று தெரிவித்தார்.

கேரளாவைப் போன்றே தமிழ்நாட்டிலும் வேளாண் பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை சுட்டுக் கொல்ல தமிழக அரசு அனுமதியளித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.