Published:Updated:

காவிரி : குடியரசுத் தலைவரிடம் மனு கொடுத்த தமிழக விவசாயிகள்

காவிரி : குடியரசுத் தலைவரிடம் மனு கொடுத்த தமிழக விவசாயிகள்
காவிரி : குடியரசுத் தலைவரிடம் மனு கொடுத்த தமிழக விவசாயிகள்

காவிரி : குடியரசுத் தலைவரிடம் மனு கொடுத்த தமிழக விவசாயிகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

புதுடெல்லி: காவிரி விவகாரத்தில் தலையிடும்படி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை நேரில் சந்தித்து தமிழக விவசாயிகள்  கோரிக்கை மனு அளித்தனர்.

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி. ஆர். பாண்டியன் தலைமையில் பல்வேறு விவசாயப் பிரதிநிதிகள் கொண்ட குழு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை, டெல்லியில் உள்ள  குடியரசுத் தலைவர் மாளிகையில்  சந்தித்தனர். அப்போது காவிரி விவகாரத்தில் தலையிட்டு தங்களுக்கு ஆவண செய்யும்படி குடியரசுத் தலைவரை அவர்கள் கேட்டுக்கொண்டதோடு, அதுதொடர்பாக மனு ஒன்றையும் அளித்தனர்.

காவிரி ஆற்றின் மூலம் காவிரி டெல்டா மாவட்டங்கள் மட்டுமின்றி, 20 மாவட்டங்கள் பயன் அடைந்து வருகின்றன.  இந்நிலையில் சட்டத்துக்குப் புறம்பாகவும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முரணாகவும் மேகதாட்டூ, ராசிமணல் ஆகிய பகுதிகளில் புதிய அணைகள் கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது. இதனால் தமிழகத்துக்கு கிடைத்து வரக் கூடிய உபரி நீரும் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. 

காவிரி : குடியரசுத் தலைவரிடம் மனு கொடுத்த தமிழக விவசாயிகள்

இது தொடர்பாக தமிழக விவசாயிகள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், மத்திய அரசு இதுவரை செவி சாய்க்கவில்லை. காவிரி பிரச்னையில் விவசாயிகளையும்,   தமிழர்களின் வாழ்வாதாரத்தையும் காப்பாற்றும் நோக்கில், தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  அனைத்துக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, காவிரி மேலாண்மை வாரியத்தையும் காவேரி நீர் ஒழுங்குமுறை ஆணையத்தையும் அமைக்க வலியுறுத்தினர். இதன் பிறகும் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் காவிரியில் புதிய அணைகள் கட்டும் பணிகளை கர்நாடக அரசு தொடங்கியுள்ளது.  கர்நாடகத்தை சேர்ந்த மத்திய சட்டத் துறை அமைச்சர் சதானந்த கௌடா, மத்திய உரத்துறை அமைச்சர் அனந்தகுமார் ஆகியோர் புதிய அணைகள் கட்டுவதற்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இச்சூழலில் குடியரசு தலைவரை விவசாயப் பிரதிநிதிகள் சந்தித்தது முக்கியத்துவம் பெறுகிறது.

காவிரி : குடியரசுத் தலைவரிடம் மனு கொடுத்த தமிழக விவசாயிகள்

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறுகையில், “மேற்கண்ட பிரச்னைகளுடன் தமிழகத்தின் காவிரி நீர் பிடிப்புக் பகுதிகளில் கர்நாடக மாநில தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கலந்து வருகிறது.  தமிழக மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் கர்நாடக அரசு மேற்கொண்டு வரும் இச்செயல்களை தடுத்து நிறுத்துமாறும்.  இவ்விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறும் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் வலியுறுத்தி உள்ளோம்” எனத் தெரிவித்தார்.

குடியரசு தலைவருடனான 15 நிமிட நேர சந்திப்பு திருப்திகரமாக இருந்ததாக டெல்லி சென்ற விவசாயிகள் தெரிவித்தனர். ஜனாதிபதியை சென்ற விவசாயிகள் உபசரிக்கப்பட்டு, அவர்களுக்கு குடியரசுத் தலைவர் மாளிகை சுற்றிக் காண்பிக்கப்பட்டது. ஜனாதிபதியிடம் கோரிக்கைகள் வைத்த விவசாயிகள் இன்று தமிழகம் திரும்புகின்றனர்.

- த.க. தமிழ் பாரதன்
(மாணவப் பத்திரிகையாளர்)
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு