Published:Updated:

குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையை திறக்க டெல்டா விவசாயிகள் கோரிக்கை!

குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையை திறக்க டெல்டா விவசாயிகள் கோரிக்கை!
குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையை திறக்க டெல்டா விவசாயிகள் கோரிக்கை!

தஞ்சாவூர்: குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையின் நீரை திறக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு டெல்டா விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையை திறக்க டெல்டா விவசாயிகள் கோரிக்கை!

குறுவை சாகுபடிக்கு ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது வழக்கம். ஆனால், கடந்த 12 ஆம் தேதி போதுமான அளவு தண்ணீர் இல்லாததால் அணையை திறக்க முடியாத சூழல் இருந்தது. இதனால், இந்த ஆண்டும் குறுவை சாகுபடியை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டுவிடுமோ என தவித்தார்கள் விவசாயிகள். கடந்த மூன்று முறையும் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை பெய்து கிருஷ்ணராஜ சாகர், கபினி, ஹேமாவதி, ஹேரங்கி உள்ளிட்ட நான்கு அணைகளும் நிரம்பி, வெள்ள நீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால், இப்பொழுதே அணையை திறந்தால் குறுவை சாகுபடியை அணைத்து விவசாயிகளும் மேற்கொள்ள முடியும் என்கிறார் தமிழ் மாநில காங்கிரஸ் விவசாய அணி தலைவர் புலியூர் நாகராஜன்.

குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையை திறக்க டெல்டா விவசாயிகள் கோரிக்கை!

இதுகுறித்து மேலும் அவர் கூறும்போது, ''இந்த ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி வாக்கில் மேட்டூர் அணையில் 69 அடி தண்ணீர்தான் இருந்தது. மேலும், தென்மேற்கு பருவமழை பெய்யும் என்பதற்கான முகாந்திரமும் அப்போது இல்லை. இதனால், மேட்டூர் அணை திறக்காமல் இருந்தது சரியான நிலைப்பாடு. ஆனால், தற்பொழுது தென்மேற்கு பருவமழை வழக்கத்தைவிட அபரிமிதமாக பெய்துள்ளது. கர்நாடாகாவில் அணைகள் நிரம்பி மேட்டூருக்கு அதிகளவில் வெள்ளநீர் வந்தடைந்து கொண்டிருக்கிறது. தற்போது, அணையின் நீர்மட்டம் 80 அடியை தொட்டுவிட்டது. இன்னும் சில நாட்களில் 90 அடியை தொட்டுவிடும்.

அதனால், இப்போதே மேட்டூர் அணையை திறந்தால்தான் குறுவை சாகுபடியை மேற்கொள்ள முடியும். குறுவை சாகுபடி இந்த மாதத்தில் தொடங்கினால்தான் அக்டோபர் மாத அடைமழைக்கு, நெற்பயிர்களை பாதிப்புக்குள்ளாகாமல் காப்பாற்ற முடியும். இப்பொழுதுள்ள குறைவான அளவு தண்ணீரை திறந்தால், டெல்டா பகுதிகளின் வயல்களுக்கு நேரடியாக தண்ணீர் ஏறுவது சற்று சிரமமாகவே இருக்கும். ஆனாலும் கூட நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து போர்வெல்களில் தண்ணீர் நிறையும். இதனால், குறுவை சாகுபடி ஆரம்பக்கட்ட பணிகள் வெற்றிகரமாக நடைபெறும்.

இது ஒருபுறமிருக்க, மேட்டூர் அணையில் உள்ள தண்ணீரை இப்பொழுது நாம் பயன்படுத்தாவிட்டால், அடுத்த மாதங்களில் பெய்யும் மழைநீரை சேமிக்க முடியாமல் போய்விடும். அப்போது கர்நாடகம், தமிழகத்துக்கு தரவேண்டிய சட்டப்படியான தண்ணீரையும் நாம் பெற முடியாத சூழல் உருவாகிவிடும்" என்றார்.

கு.ராமகிருஷ்ணன்