'பாலம்' பட்டுப் புடவையில் ராம்ப்-வாக் ஷோ! | Palam Silks Fashion Show

வெளியிடப்பட்ட நேரம்: 12:50 (09/01/2016)

கடைசி தொடர்பு:15:25 (09/01/2016)

'பாலம்' பட்டுப் புடவையில் ராம்ப்-வாக் ஷோ!

ட்டுப் புடவை ஆடைகளின் தனி அடையாளமாக விளங்கும் பாலம் பட்டு நிறுவனத்தின் ராம்ப்-வாக் ஷோ "ஃபர்ஸ்ட் லுக் 2016" என்ற தலைப்பில், நேற்று (08-01-2016) சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தாஜ் ஹோட்டலில் நடைபெற்றது.

வண்ண விளக்குகளும் ஸ்பாட்-விளக்குகளும் ராம்ப்-வாக் மேடையை அலங்கரிக்க, முதலில் பாலம் பட்டு நிறுவனத்தின் உரிமையாளரான ஜெயஸ்ரீ ரவி சிறப்புரையாற்றினார். அப்போது அவர், ஒவ்வொரு நாளும் 20 புதிய மாடல்களை பாலம் நிறுவனம் வெளியிடுவதா தெரிவித்தார்.

அவரே தன் இரு மகள்களுடன் ராம்ப்-வாக் செய்து நிகழ்ச்சியை தொடக்கியும் வைத்தார்.

சூப்பர் சிங்கர் பிரபலம் பாவனா நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, கலகலப்பாக நகர்ந்தது. சிறப்பு விருந்தினர்களாக சினிமா மற்றும் அரசியல் வட்டத்திலிருந்து பெண்கள் பலரும் கலந்து கொண்டனர். அவர்களுள் கிருத்திகா உதயநிதி,  துர்கா ஸ்டாலின், ஒஜ்ஹா ரஜானி, லக்ஷ்மி ராகவேந்திரா முதலானோரும் அடங்குவர். அதன் பின், அமர்க்களமான இசையோடு ராம்ப்-வாக் தொடங்கியது.

ஒவ்வொரு மாதத்திற்கும் ஏற்ப, பட்டுப் புடைவகளின் டிஸைன்களுக்கு ஒவ்வொரு பெயர் வைத்திருந்தனர். உதாரணத்திற்கு, ரூபி ரெட் ரொமான்ஸ் (பிப்ரவரி), ஹோலி (மார்ச்), மேங்கோ டேங்கோ (ஏப்ரல்) என டிசம்பர் வரை டிஸைன்கள் நீண்டுகொண்டே போய், பார்வையாளர்களின் வரவேற்பை பெற்றுக் கொண்டே இருந்தது. பெண்கள் வண்ண வண்ண ஆடைகளில் அணிவகுத்து நின்று, பெண்களின் உள்ளத்தை கொள்ளை கொண்டனர். 

இது தவிர, இந்த ஆண்டு பாலம் பட்டு நிறுவனம்,  "சில்க்-லைன்16" என்ற தலைப்பில் செப்டம்பர் மாதம் இன்னொரு நிகழ்ச்சி நடத்தப் போவதாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

பாலம் நிறுவனம் தன் பட்டுப் புடவைகளின் வழியே பெண்களோடு கட்டிக் கொண்டுள்ள பாலம் கண்கூடே தெரிந்தது.

- மு.சித்தார்த்
படங்கள்: மா.பி.சித்தார்த்

(மாணவப் பத்திரிக்கையாளர்கள்)

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்