Published:Updated:

விவசாயத்தை கருவறுக்கிறதா கருவேல மரங்கள்? - ஒரு அலசல் ரிப்போர்ட் #WhereIsMyGreenWorld

Vikatan Correspondent
விவசாயத்தை கருவறுக்கிறதா கருவேல மரங்கள்? - ஒரு அலசல் ரிப்போர்ட் #WhereIsMyGreenWorld
விவசாயத்தை கருவறுக்கிறதா கருவேல மரங்கள்? - ஒரு அலசல் ரிப்போர்ட் #WhereIsMyGreenWorld
விவசாயத்தை கருவறுக்கிறதா கருவேல மரங்கள்? - ஒரு அலசல் ரிப்போர்ட் #WhereIsMyGreenWorld

விளை நிலங்கள் எல்லாம் விலை நிலங்களாக மாறி கொண்டிருக்கும் வேலையில் தண்ணீர் பாய்ந்து ஓட வேண்டிய ஆற்று வழிகளும், கண்மாய் கரைகளும் கருவேல மரங்கள் நிறைந்த காடாக மாறியிருக்கிறது. இதன் விளைவாக  மழை மட்டுமல்ல, மண்ணுக்குள் இருக்கும் நீரும், விண்ணில் வீசும் காற்றில் உள்ள ஈரப் பதமும் காணாமல் போய் கொண்டிருக்கின்றன.

இந்த கொடிய நிகழ்விற்கு மூல காரணமாக இருப்பது தமிழகத்தின் பெரும்பான்மையான நிலப்பரப்புகளை ஆக்கிரமித்து இருக்கும் சாத்தான் மரம் எனப்படும் கருவேல மரம்தான். இந்த சாத்தானால் விளையும் கேடுகளையும், இவற்றை அழித்தொழிக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் நீண்ட நாட்களாகவே குரல்கள் எழுகின்றன.

சாத்தான் மரம் என சில நாடுகளால் அழைக்கப்படும் சீமை கருவேல மரத்தின் ஆங்கில பெயர் புரோஸோபிஸ் ஜுலிபுலோரா ( Prosopis juliflora ).

இது ஃபேபேஸி என்ற தாவர குடும்பத்தை சேர்ந்தது. நிலத்தின் மேல் பகுதியில் இருந்து 15 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய இந்த மரத்தின் வேர்கள், தண்ணீரை தேடி பூமிக்கு அடியில் 55 மீட்டர் வரை பாயும் தன்மை கொண்டது. பூமியின் கீழ் உள்ள தண்ணீரை மட்டுமல்லாது,  புவியின் மேற்பரப்பில் உள்ள வளிமண்டலத்தில் நிறைந்துள்ள காற்று மூலகங்களையும் உறிஞ்சி வளரும் தன்மை கொண்டது. மெக்சிகோ, தென் அமெரிக்கா, கரிபியன் தீவுகளை தாயகமாக கொண்ட கருவேல மரம்,  1876-ம் ஆண்டு அப்போதைய சென்னை மாகாணத்தின் தலைமை வனத்துறை தலைவராக இருந்த லெப்டினல். பெட்ரோன் என்பவர் மூலம் இந்தியாவிற்குள் முதன் முறையாக வேர்விட்டது.

விவசாயத்தை கருவறுக்கிறதா கருவேல மரங்கள்? - ஒரு அலசல் ரிப்போர்ட் #WhereIsMyGreenWorld


அப்போது துவங்கிய இந்த சாத்தானின் கோரப் பிடியில் இந்தியா, இலங்கை, சோமாலியா, எத்தியோபியா, செனகல் போன்ற நாடுகள் சிக்கின. அதன் விளைவாக இந்நாடுகளில் பெரும்பாலானவை மழை பொழிவு குறைந்து பாலை வனங்களாக மாறி கொண்டிருக்கின்றன. புல், பூண்டுகளை கூட வளர விடாத இந்த கருவேல மரங்களின் விஷ கரங்கள் 1960-களில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கும் நீண்டன.

இது குறித்து நம்மிடம் விவரித்த ராமநாதபுரத்தை தலைமையகமாக கொண்டு இயங்கி வரும் தரணி விவசாய ஆராய்ச்சி மற்றும் கிராமப்புற மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் முருகேசன் ‘‘நிலம், நீர், வெப்பம், காற்று, ஆகாசம் என சொல்லப்படும் 5 பௌதீககங்களின் (பஞ்ச பூதங்கள்) சமச்சீர் தன்மை பாதிப்படைவதற்கு கருவேல மரம் காரணமாக இருக்கிறது.

விவசாயத்தை கருவறுக்கிறதா கருவேல மரங்கள்? - ஒரு அலசல் ரிப்போர்ட் #WhereIsMyGreenWorld

இதனால் பல்லுயிர் பெருக்க சமநிலை வெகுவாக பாதிக்கப்படுகிறது. அதன் விளைவாக இயற்கை சீற்றம், பேரழிவு தரும் நோய்கள் ஏற்பட்டு மனித குலம் துயரத்தை சந்திக்கிறது. இப்படிபட்ட துயரத்தை தரக்கூடிய கருவேல மரங்கள்,  தமிழகத்தின் 4.5 லட்சம் ஹெக்டேர் நிலத்தில் பரவி கிடக்கிறது. இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் சுமார் 1.5 லட்சம் ஹெக்டேர் நிலத்தினை ஆக்கிரமித்து உள்ளது. கொடும் பஞ்சத்தில் சிக்கி தவித்த ஒன்றுபட்ட ராமநாதபுரம் மாவட்ட மக்களின் வாழ்க்கை தரத்தை காக்க உதவும் என்பதற்காகவும், தரிசாக கிடககும் நிலங்கள் பசுமையாக மாற்றம் அடையும் என்பதற்காகவும் இப்பகுதியில் இருந்த ஆற்றுபாதைகள், கண்மாய் கரைகளில் கருவேல மரத்தின் விதைகள் தூவப்பட்டன.

மக்களின் வாழ்வாதாரத்திற்காக தூவப்பட்ட இந்த மரத்தின் விதைகள் இன்று நீர் ஆதாரங்களையும், கண்மாய்களையும், ஆற்றுப் பகுதிகளையும் ஆக்கிரமித்துள்ளதன் மூலம் மக்களின் வாழ்க்கையை வெறுமை அடைய வைத்திருக்கிறது. இந்த மரங்கள் வளரும் இடங்களில் புற்கள் கூட வளருவதில்லை.

விவசாயத்தை கருவறுக்கிறதா கருவேல மரங்கள்? - ஒரு அலசல் ரிப்போர்ட் #WhereIsMyGreenWorld

புற்கள் வளராததால் மண் அரிமானம் ஏற்பட்டும், செடி கொடிகள் வளராததால் கால்நடைகளுக்கு தேவையான தீவனம் கிடைக்காமலும் போகிறது. இதனால் இயற்கை உரங்களை பூமிக்கு அளிக்க கூடிய கால்நடைகள் அருகி வருவதுடன் மண்ணும் வளம் இழந்து விடுகிறது. ஒரு பகுதியில் வளரக் கூடிய மரம், செடிகளை கொண்டே அப்பகுதியில் வாழும் மக்களின் குணநலன்களை அறிந்து கொள்ளலாம்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் நீக்கமற நிறைந்துள்ள கருவேலமரமானது, முட்களை உடைய பாலை நிலத்தாவரமாகும். இது வளர்ந்து இருக்கும் இடங்களில் வாழும் மக்களின் மனங்களில் வன்மத்தையும், குரூரத்தையும் வளர்ப்பதாக ஆய்வுகளின் முடிவுகளில் இருந்து தெரிய வருகிறது. இப்பகுதியில் நடக்கும் சாதி மோதல்களுக்கு கூட இந்த மரங்களின் தாக்கம்தான் காரணமோ என என்ன வைக்கிறது. அமெரிக்காவில் உள்ள தாவரவியல் துறையினர்,  வளரக் கூடாத நச்சு மரங்கள் பட்டியலில் கருவேல மரத்தை வைத்துள்ளனர்.

ஆனால் தமிழ்நாட்டில் சமீப காலமாகத்தான், கருவேல மரத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே வைகை ஆறு மற்றும் பிரதான நீர்நிலை பகுதிகளில் நீககமற நிறைந்திருக்கும் கருவேல மரங்களை அகற்றக் கோரி ஆனந்த்ராஜ் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில்,  கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஆரம்பத்தில் இதில் ஆர்வம் காட்டிய அதிகாரிகள், பின்னர் இதனை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டனர். இதனால் கருவேல மரங்கள் அகற்றப்பட்ட பகுதிகள் கூட மீண்டும் அவை வளர துவங்கிவிட்டது.

இந்தியாவில் உள்ள 120 கோடி மக்களின் உணவு தேவைகளை நிறைவேற்றக் கூடிய நிலையில் உள்ள விவசாயிகள்,  தற்கொலைக்கு தள்ளப்படும் அவலத்திற்கு வறட்சியை ஏற்படுத்தும் கருவேல மரங்களும் ஒரு காரணமாக உள்ளது. மனிதர்கள் மட்டுமல்ல, விலங்குகளுக்கும் இவை தீங்கை விளைவிக்கிறது. கருவேல மரங்கள் நிறைந்திருக்கும் பகுதிகளில் வாழும் கால்நடைகள், விலங்கினங்கள் கருவேல மரத்தின் இருந்து வெளியாகும் வெப்பத்தினால் மலட்டு தன்மையை அடையும் நிலையும் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால்தான் கேரள மாநிலத்தில் கருவேல மரத்தை அழிப்பதை அன்றாட கடமையாக கொண்டிருக்கிறார்கள்.

விவசாயத்தை கருவறுக்கிறதா கருவேல மரங்கள்? - ஒரு அலசல் ரிப்போர்ட் #WhereIsMyGreenWorld

இந்நிலையில் எங்களது ‘டேர் பவுன்டேஷன்’ மூலம் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி மைதானங்கள், ஆனைகுடி ஓடை பகுதி ஆகியவற்றில் நிறைந்திருந்த கருவேல மரங்களை அகற்றியிருககிறோம். இதே போல விவசாய நிலங்களில் உள்ள கருவேல மரங்களை அகற்றி சுத்தப்படுத்தும் பணியை இலவசமாக செய்து தர தயாராக இருககிறோம். பஞ்சாயத்து நிர்வாகங்களுக்கும் அதை சார்ந்த அதிகாரிகளுக்கும் வருமானத்தை தரும் இனமாக கருவேல மரங்கள் இருப்பதால், இதனை முற்றிலும் அகற்ற போதிய ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. கிராம பஞ்சாயத்துகளில் நடக்கும் கிராமசபை கூட்டங்களில் ‘கருவேல மரங்களை அழிகக வேண்டும்’ என தீர்மானங்கள் போடப்படுகிறது. ஆனால் அவற்றை செயல்படுத்த நிர்வாகத்தில் இருப்பவர்கள் முன்வருவதில்லை.

இந்த நிலை தொடர்ந்தால், பரவி வரும் கருவேல மரங்களால் காற்றின் ஈரப்பதம் உறிஞ்சப்பட்டு மழையே இல்லாத நிலை உருவாகிவிடும். இதனால் மீண்டும் வறண்ட, பின்தங்கிய மாவட்டம் என்ற நிலைககு ராமநாதபுரம் மாவட்டம் தள்ளப்படும்’’ என வருந்தினார்.

வருமானம் கிடைக்கிறது என்பதற்காக வாழ்க்கையை கரியாக்கும் கருவேல மரங்களை வளர்க்கும் மனநிலையில் இருந்து ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் மாறவேண்டும். அப்போதுதான் வளமான தலைமுறையினர் வருங்காலத்தில் உருவாவார்கள் என  கருவேல மரத்திற்கு எதிராக ஒரு குரல் எழுந்துள்ள நிலையில், கருவேல மரத்திற்கு ஆதரவான ஒரு குரலும் கேட்கத்தான் செய்கிறது.

விவசாயத்தை கருவறுக்கிறதா கருவேல மரங்கள்? - ஒரு அலசல் ரிப்போர்ட் #WhereIsMyGreenWorld

இது குறித்து நம்மிடம் பேசிய சுற்றுச்சூழல் மற்றும் மரம் வளர்ப்பு ஆர்வலர் மூங்கில் பாலசுப்பிரமணியன்,  ‘‘ சில காலங்களுக்கு முன் இது போலவே யூகலிப்டஸ் மரங்களை பற்றியும் தவறான புரிதல் இருந்தது. யூகலிப்டஸ் பற்றிய எதிர் மறையான கருத்துகள் எந்த ஆய்வு மூலமும் நிருபிக்கப்படவில்லை. இதே நிலைதான் தற்போது கருவேல மரங்களுக்கும் இருந்து வருகிறது. உண்மையில் கருவேல மரங்களால் சில பாதிப்புகள் இருந்தாலும் பல நன்மைகளையே அது தருகிறது. பொதுவாக நஞ்சை நிலத்தில் அறுவடைக்கு பின் அந்த நிலத்தை மூடாக்குதல் செய்ய வேண்டும் என்பார்கள்.

விவசாயத்தை கருவறுக்கிறதா கருவேல மரங்கள்? - ஒரு அலசல் ரிப்போர்ட் #WhereIsMyGreenWorld

காரணம் அந்த நிலத்தில் உள்ள நீர் உள்ளிட்ட ஆதாரங்கள் வெப்பத்தினால் ஆவியாகி வீணாகிவிடக் கூடாது என்பதால்தான். அதுபோலதான் தரிசு நிலங்கள், ஆறுகளின் கரையோரப் பகுதி நிலங்களை காக்கும் பணிகளில் கருவேல மரங்கள் முக்கிய பணி ஆற்றுகின்றன. இன்றைய நாகரிக உலகில் மாற்று எரிபொருளாக எரிவாயு உருளைகள் வீடுகளுக்குள் புகுந்து விட்டது.

இவை வருவதற்கு முன்னர் வரை கருவேல மரங்களே நம் வீடுகளில் பிரதான எரிபொருளாக பயன்பட்டு வந்தது. காடு வளர்ப்பு திட்டத்தில் வரும் 'எனர்ஜி ஃபாரஸ்ட்' செயல் திட்டத்தில் மரங்களை எரிபொருளாக கொண்டு தயாரிக்கப்படும் மின் உற்பத்தி நிலையங்களின் பிரதான கச்சா பொருளாக இருப்பது கருவேல மரங்கள்தான். காரணம் மற்ற மரங்களை வெட்ட கட்டுப்பாடுகள் இருப்பதால் இத்திட்டத்திற்கு கருவேல மரங்களே முக்கிய பங்கு வகிக்கின்றன. வறட்சியை தாண்டி வளரும் இந்த மரங்கள் மக்களுக்கான வருமானத்தை தரும் மரங்களாகவும் விளங்கி வருகிறது என்பதை கருவேல மர எதிர்ப்பாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்’’ என்றார்.

- கிருபாகரன், இரா.மோகன்
படங்கள்: உ.பாண்டி, கே.குணசீலன்