Published:Updated:

ஆண்டுக்கு 7 லட்சம் வருமானம்... ஒருங்கிணைந்த கால்நடை பண்ணை!

கால்நடை வளர்ப்பு

ஒருங்கிணைந்த கால்நடை பண்ணையில் விவசாயம், ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, மாடு வளர்ப்பு என நான்கைந்து தொழில்கள் ஒன்றாக செய்யும் போது விளைச்சலோடு வருமானமும் அதிகரிக்கும். தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஒருங்கிணைந்த கால்நடை பண்ணையை வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர்.

ஆண்டுக்கு 7 லட்சம் வருமானம்... ஒருங்கிணைந்த கால்நடை பண்ணை!

ஒருங்கிணைந்த கால்நடை பண்ணையில் விவசாயம், ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, மாடு வளர்ப்பு என நான்கைந்து தொழில்கள் ஒன்றாக செய்யும் போது விளைச்சலோடு வருமானமும் அதிகரிக்கும். தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஒருங்கிணைந்த கால்நடை பண்ணையை வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர்.

Published:Updated:
கால்நடை வளர்ப்பு

விவசாயத்தோடு சேர்ந்து கால்நடை வளர்ப்பும் விவசாயிகளின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவுகிறது. பெரும்பான்மையான கிராம மக்களின் வாழ்வாதாரமாக கால்நடை வளர்ப்பு இருந்து வருகிறது. ஆக விவசாயமும் கால்நடை வளர்ப்பும் இணைந்து செய்வது தான் ஒருங்கிணைந்த கால்நடை பண்ணை.

முனைவர் பா.குமாரவேல்
முனைவர் பா.குமாரவேல்

பசுமை விகடன் கடந்த ஜூலை 2-ம் தேதி 'லாபத்துக்கு வழிகாட்டும் ஒருங்கிணைந்த கால்நடை பண்ணை' என்ற நேரலை நிகழ்ச்சியை நடத்தியது. இதில் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் முனைவர் பா.குமாரவேல் ஒருங்கிணைந்த கால்நடை பண்ணை பற்றிய பல தகவல்களையும் நுணுக்கங்களையும் பகிர்ந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பசுமை விகடன் நேரலையில்..

இந்த நேரலை நிகழ்ச்சி மாலை 6 மணி முதல் இரவு 7.30 மணி வரை ஜூம் மீட் வாயிலாக நடந்தது. இதில் விவசாயிகள் பலரும் ஆர்வமுடன் பங்கேற்றனர். பசுமை விகடன் டிஜிட்டல் வாசகர்களான உங்களுக்கு, நேரலையில் சிறுதுளி இதோ...

''ஒருங்கிணைந்த கால்நடை பண்ணையில் விவசாயம், ஆடு வளர்ப்பு, கோழி வளர்ப்பு, மாடு வளர்ப்பு என நான்கைந்து தொழில்கள் ஒன்றாக செய்யும் போது விளைச்சலோடு வருமானமும் அதிகரிக்கும்.

முனைவர் பா.குமாரவேல்
முனைவர் பா.குமாரவேல்

ஒருங்கிணைந்த கால்நடை பண்ணையில் நாம் வெளியிலிருந்து உரங்களையும் இடுபொருட்களையும் வாங்கும் அவசியம் இருக்காது. நமது பண்ணையில் கிடைக்கும் வேளாண் கழிவுகளையும், விலங்கு கழிவுகளையுமே பயிர் விளைச்சலுக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.

தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஒருங்கிணைந்த கால்நடை பண்ணையை வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர்.

சிந்தி, சாஹிவால், கிர் போன்ற மாட்டு இனங்கள் அதிக பால் கொடுக்கும். இந்த மாட்டினங்கள் வருடத்திற்கு 1,500-2000 கிலோ பால் உற்பத்தி செய்யும். இந்த மாடுகள் அதிகமாக வட மாநிலங்களில் காணப்படுகிறது. இந்த மாட்டினங்களை தமிழகம் வருவித்து அதிக லாபம் பெறலாம். மேலும் பால் கறக்க நவீன தொழில்நுட்பங்களும் வந்துவிட்டன.

வெற்றிகரமான மாட்டு பண்ணை நடத்த வேண்டுமானாலும் நிச்சயம் நாமே தீவன புல் உற்பத்தி செய்ய வேண்டும். அப்போதுதான் மாடுகளின் ஆரோக்கியத்தை காக்க முடியும். கலப்பு தீவனத்துடன் பசுந்தீவத்தையும் கலந்து கொடுத்தால், பால் உற்பத்தி சிறப்பாக இருக்கும்.

ஆடு வளர்ப்பு என்பது பண இயந்திரம் போன்றது, பணம் எப்போதும் கிடைத்து கொண்டே இருக்கும். மேலும் ஆடு வளர்ப்பில் அதிக பராமரிப்பு தேவைப்படாது. தமிழகத்தில் சிறந்த ஆட்டினங்கள் இருக்கிறது. 20 பெட்டை ஆடுகளுக்கு ஒரு நல்ல ஆரோக்கியமான கெடா இருந்தால் போதும் 8 மாதத்திற்கு ஒரு முறை 2 குட்டிகள் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.

நிகழ்ச்சியில்
நிகழ்ச்சியில்

வடகிழக்கு மாநிலங்கள் போல இப்பொழுது தமிழகத்திலும் வெண்பன்றி வளர்ப்பு அதிகரித்து வருகிறது. பன்றிகளின் கழிவுகள் மீன்களுக்கு தீனியாக அமைகிறது. புதிதாக பண்ணை அமைக்கும் போது 2 மாத குட்டி பன்றிகளை வாங்கி வளர்க்கலாம். இந்த குட்டி பன்றிகளை அரசு பல்கலைக்கழகத்தில் இருந்தே வாங்கி வளர்க்கலாம். வீட்டு கழிவுகள், காய்கறி கழிவுகள் போன்ற கழிவுகளையே உணவாக இட்டு ஆறே மாதத்தில் இந்த பன்றிகளை ரூ.9,000 முதல் 10,000 வரை விற்கலாம்.

ஒருங்கிணைந்த கால்நடை பண்ணையில் கோழி வளர்ப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. கோழி வளர்ப்பின் மூலம் தரமான இறைச்சி மற்றும் முட்டைகளை விற்று அதிக லாபம் பெறமுடியும். வான்கோழி, காடை போன்ற இதர கோழி வளர்ப்பின் மூலமும் வருமானத்தை பெருக்க முடியும். உதாரணமாக 200 சதுர அடியில் 1000 காடைகளை 35 நாட்கள் மட்டும் வளர்த்து நல்ல லாபத்திற்கு விற்க முடியும்.

மீன் பண்ணை அமைக்க அரசாங்கமே குட்டை அமைத்து தருகிறது. 1 ஏக்கர் பண்ணை குட்டையில் 2000-2500 மீன் குஞ்சுகள் வளர்க்கலாம். மீன்களுக்கு வேளாண் மற்றும் கால்நடை கழிவுகளேயே தீவனமாக அளிக்கலாம்.

மண்புழு உரம், பஞ்சகவ்யா, அமிர்த கரைசல், ஜீவாமிர்தம், கனஜீவாமிர்தம் ஆகிய இயற்கை உரங்களை ஒருங்கிணைந்த கால்நடை பண்ணை மூலம் நாமே உற்பத்தி செய்ய முடியும்.

ஆதாரம்
ஆதாரம்

நன்செய் நிலங்களில் விவசாயம், மீன் வளர்ப்பு, கோழி வளர்ப்பு, மாடு வளர்ப்பு, பன்றி வளர்ப்பு, வாத்து வளர்ப்பு, காளான் வளர்ப்பு ஆகியவைகளை ஒன்றாக செய்து ஒருங்கிணைந்த கால்நடை பண்ணையை அமைக்கலாம். தோட்டக்கால் நிலங்களில் விவசாயம், வான்கோழி வளர்ப்பு, கோழி வளர்ப்பு, மாடு வளர்ப்பு, பன்றி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு ஆகியவைகளை ஒன்றாகச் செய்து ஒருங்கிணைந்த கால்நடை பண்ணையை அமைக்கலாம்.

விவசாயிகளிடம் நடத்திய ஆய்வில் ஒருங்கிணைந்த கால்நடை பண்ணை மூலம், 2.5 ஏக்கர் நிலத்தில் ஆண்டுக்கு 7 லட்ச ரூபாய் வருமானம் பெற முடியும் என்று கண்டறிந்துள்ளோம். நான் செங்கல்பட்டு மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் தலைவராக இருந்த போது, விவசாயிகளை வல்லுநர்களாக மாற்றி பயிற்சி அளிக்க வைத்துள்ளேன்.

மேலும் ஆடு, மாடு வளர்ப்பு மூலம் கிடைக்கும் பால் மூலம் பன்னீர், தயிர், வெண்ணெய் போன்ற பொருட்களை உற்பத்தி செய்து விற்கலாம். இது போன்ற பல லாபங்களை ஒருங்கிணைந்த கால்நடை பண்ணை மூலம் பெறலாம். கறவை மாடு வளர்ப்பவர்கள் முக்கியமாக ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். கன்று குட்டிகளுக்கு குறித்த காலத்தில் குடற்புழு நீக்க மருத்து அளிக்க வேண்டும். மாடு சினையாக உள்ள போதே, குடற்புழு நீக்க மருந்து கொடுக்கும் நுட்பமும் இப்போது உள்ளது. இதன் மூலம் ஆரோக்கியமான கன்று வளர்ந்து கறவை மாடாக நமக்கும் பயன் கொடுக்கும்'' என்பது உள்ளிட்ட பல ஆலோசனைகளை வழங்கினார், முனைவர் பா.குமாரவேல்.