Published:Updated:

``88 மரங்கள்ல மாச வருமானமா ரூ.88,000 கிடைக்குது!"- அத்திச் சாகுபடியில் அசத்தும் விவசாயி

அத்தி
அத்தி

அதிக மருத்துவ குணமும், அற்புதமான சுவையும் கொண்ட அத்திப்பழ விற்பனையில எந்தப் பிரச்னையும் இல்லை. பக்கத்து நகரங்கள்ல இருக்கிற பழக்கடைக்காரங்களே வாங்கிக்கிறாங்க.

ஒரு காலத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வளர்த்துவந்த அத்தியை தற்போது பல விவசாயிகள் ஊடுபயிராகவும் சாகுபடி செய்கிறார்கள். சிலர் தனிப்பயிராகவும் சாகுபடி செய்கிறார்கள். திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி ஜெகதீஷ், ஒரு ஏக்கர் நிலத்தில் அத்திச் சாகுபடி செய்துவருகிறார். திருப்பூர் மாவட்டம், உடுமலைப் பேட்டையிலிருந்து தென்மேற்கு திசையில் 26 கி.மீ பயணம் செய்தால் வருகிறது பொன்னாலம்மன் சோலை. அங்குதான் ஜெகதீஷின் தோட்டம் இருக்கிறது.

"இது ரசாயன வாடையே பார்க்காத பூமி. ஒரு ஏக்கர்ல அத்தி மரம் சாகுபடி செஞ்சிருக்கோம். ஒரு தடவை சேலம் ஏற்காடு மலைக்கு வேளாண் சுற்றுலா போயிருந்தோம். அங்கேயிருந்த அரசு பழப்பண்ணையில காய்ச்சுக் குலுங்கம் அத்தி மரங்களைப் பார்த்ததும் ஆச்சர்யப்பட்டேன். 'நம்ம பண்ணையிலயும் அத்தி மரம் சாகுபடி செய்யலாமே'னு யோசனை வந்தது. பழப்பண்ணையில இருந்த விஞ்ஞானிகள்கிட்ட அத்தி மரச் சாகுபடி பத்தி ஆலோசனை கேட்டேன். விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/39rsziI

``88 மரங்கள்ல மாச வருமானமா ரூ.88,000 கிடைக்குது!"- அத்திச் சாகுபடியில் அசத்தும் விவசாயி

'குளிர்ந்த காற்று வீசும் மிதமான தட்பவெப்பநிலையுள்ள பகுதிகளுக்கு ஏற்றச் சிறப்பான பயிர். உடுமலைப்பேட்டை பகுதி மிதமான தட்பவெப்ப நிலையுள்ள இடம். அங்கே தாராளமா அத்தி மரச் சாகுபடி செய்யலாம்'னு சொன்னாங்க. கூடவே சில தொழில்நுட்ப ஆலோசனைகளும் கொடுத்தாங்க. ஊருக்கு வந்ததும், வீட்ல பேசினேன். அவங்களும் ஆதரவும் ஊக்கமும் கொடுத்தாங்க. உடனே நடவுல இறங்கிட்டேன்'' என்றவர், அத்தியைப் பற்றிய விவரங்களைப் பகிர்ந்துகொண்டார்.

"ஏற்காடு, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்திலிருந்து ஒரு செடி 200 ரூபாய் விலையில வாங்கிட்டு வந்தேன். ஒரு ஏக்கர் ஆறு சென்ட் நிலத்துக்கு 88 செடிகள் தேவைபட்டுச்சு. நான் நடவு செஞ்சது 'திம்பா' என்ற ரகம். அத்தி மரத்துக்குத் தண்ணி அதிகம் தேவைப்படும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஒவ்வொரு செடிக்கும் 120 லிட்டர் தண்ணி கொடுக்கணும். தண்ணி சரியா கொடுக்கலைன்னா, செடிகள்ல இருக்கும் பிஞ்சுக உதிர்ந்து போகும். இலைகளும் செடியில தங்காது. இதுலதான் ரொம்ப கவனமா இருக்கணும். அக்கம் பக்கம் செழிப்பான வனப்பகுதியா இருக்கறதால இங்கே அத்தி செழிப்பா வளருது. நடவு செஞ்ச மூணாம் வருஷத்துல இருந்து காய்க்க ஆரம்பிக்கும். நாலாம் வருஷம் குடைபோலப் படரும் கிளைகளைக் கவாத்து செய்யணும். ஆரம்பத்துல செடியா இருந்தாலும் அஞ்சு வருஷ முடிவுல அது மரமாக வளர்ந்து 20 வருஷம் வரைக்கும் சிறப்பான மகசூலைக் கொடுக்கும்'' என்றவர் விற்பனை வாய்ப்புகள்குறித்துப் பேசினார்.

"அதிக மருத்துவ குணமும், அற்புதமான சுவையும் கொண்ட அத்திப்பழ விற்பனையில எந்தப் பிரச்னையும் இல்லை. பக்கத்து நகரங்கள்ல இருக்கிற பழக்கடைக்காரங்களே வாங்கிக்கிறாங்க. கடையில கிலோ 250 ரூபாய்க்கு விற்பனையாகுது. என்கிட்ட கிலோ 100 ரூபாய்னு வாங்கிக்கிறாங்க. ஒரு மரத்துல இருந்து மாசம் குறைஞ்சபட்சம் 1,000 ரூபாய் வருமானமாகக் கிடைக்கும். என்கிட்ட இருக்கும் 88 மரங்கள்ல இருந்து மாச வருமானமா 88,000 ரூபாய் கிடைக்குது.

``88 மரங்கள்ல மாச வருமானமா ரூ.88,000 கிடைக்குது!"- அத்திச் சாகுபடியில் அசத்தும் விவசாயி

வருஷம் முழுக்கக் காய்க்கும்; ஆனாலும் 10 மாசம்தான் சராசரி மகசூல் கிடைக்கும். ஒரு ஏக்கர் 6 சென்ட் நிலத்துல இருந்து வருஷத்துக்கு 8,88,000 ரூபாய் வருமானமாகக் கிடைக்கும். தினமும் ரெண்டு ஆள்கள் தேவைப்படும். ஆள்கூலி 300 ரூபாய். அதுக்கு மாசம் 18 ஆயிரம் ரூபாய் ஆகுது. பழங்களைக் கடைகளுக்குக் கொண்டுபோற போக்குவரத்துச் செலவு மாசம் 10 ஆயிரம் ரூபாய் ஆகிடுது. மண்புழு உரம், தொழுவுரம் இதர செலவுன்னு 10 ஆயிரம் ரூபாய் செலவாகிடும். மொத்தம் மாசத்துக்கு 38 ஆயிரம் ரூபாய் செலவு. செலவுபோக, 5,00,000 ரூபாய் லாபமாக நிக்கும்" என்றார்.

- அத்திச் சாகுபடி பற்றி ஜெகதீஷ் சொன்ன தகவல்கள் இங்கே பசுமை விகடன் இதழில் பாடமாக... > அள்ளிக்கொடுக்கும் அத்தி! - ஏக்கருக்கு ரூ. 8,00,000 வருமானம்! https://www.vikatan.com/news/agriculture/athi-cultivation-brings-8-lakhs-income-for-an-acre

* சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

வீடியோ வடிவில்...

அடுத்த கட்டுரைக்கு