Published:Updated:

விதைப்பது முதல் விற்பனை வரை... வெங்காய விளைச்சல் எப்படி நடக்கிறது? #VikatanPhotoStory

வெங்காயம், சமையலில் மட்டுமல்ல; சிலமுறை இந்திய அரசியலிலும் தாக்கம் செலுத்தியிருக்கிறது. இது அப்படிப்பட்ட மற்றுமொரு தருணம். திடீரென உயர்ந்த வெங்காய விலைதான் தற்போது தேசிய அளவில் பேசப்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்நேரத்தில் வெங்காயம் குறித்து இன்னும் கொஞ்சம் விரிவாகத் தெரிந்துகொள்வோம்.

எப்போதாவது அதிகரிக்கும் வெங்காயத்தின் விலை, தேசத்தையே கலங்கடித்துவிடும். உலகிற்கே வெங்காயம் ஏற்றுமதி செய்த இந்தியா, தற்போது எகிப்து உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து வெங்காயம் இறக்குமதி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த இக்கட்டான சூழலில், விலையைக் கட்டுப்படுத்தும் வழி தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றன மத்திய-மாநில அரசுகள்.

தமிழகத்திலேயே பெரம்பலூர் மாவட்டத்தில்தான், அதிகளவு சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. பெரம்பலூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர் உள்ளிட்ட  ஒன்றியங்களில் உள்ள சுமார் 160-க்கும் மேற்பட்ட கிராமங்களில் திரும்பும் திசையெங்கும் வெங்காய வயல்களாகக் காட்சியளிக்கின்றன. இதேபோல் திருச்சி மாவட்டம், துறையூர்,மண்ணச்சநல்லூர் பகுதிகளிலும் வெங்காயம் பயிரிடப்படுகிறது.

பெரம்பலூர் மாவட்டத்தில் சுமார் 3500 ஹெக்டேர் மற்றும் திருச்சி துறையூர் பகுதிகளில் 1000 ஏக்கர் நிலங்களில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த மூன்று வருடங்களாக இந்தப் பகுதிகளில் சரியான மழையில்லை.

இந்த வருடம் நடவு துவங்கும்போது, போதியளவில் மழை பெய்ததால் கூடுதல் மகசூல் கிடைக்கும் எனச் சின்ன வெங்காய விவசாயிகள் எதிர்பார்த்தனர். ஆனால், அந்தக் கனவில் மண் விழுந்துள்ளது. தொடர் மழை காரணமாக, வெங்காயப் பயிர்களில் வேர் அழுகல் எனும் திருகல் நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது.

வழக்கமாக வைகாசி, ஆவணி, புரட்டாசி மற்றும் மாசி பட்டங்களில் சின்ன வெங்காயம் பயிரிடப்படுகிறது.

விதை வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. வெங்காய விலையேற்றத்தால், விதை வெங்காயமும் விலை கூடியுள்ளது. தற்போது ஏக்கருக்கு 500 முதல் 600 கிலோ விதை வெங்காயம் தேவைப்படுகிறது.

விதை வெங்காயம் மட்டுமல்ல; உழவு, களையெடுப்பு, ஆள்கூலி, உரம் என ஒரு ஏக்கர் வெங்காயம் பயிர் செய்வதற்கு 50,000 வரை செலவாகிறது.

பல்வேறு காரணங்களால், வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால், வெங்காய விவசாயிகள் வீட்டு பயன்பாட்டுக்கே வெளியில் பணம் கொடுத்து வெங்காயம் வாங்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

சின்ன வெங்காயம் விதைப்பு முதல் அறுவடை வரை கண்ணும் கருத்துமாக பயிரிட வேண்டும். கொஞ்சம் தவறினாலும் மொத்தமும் நாசமாகிவிடும். அதேபோல், அறுவடை செய்யப்பட்ட வெங்காயத்தை தனியாக பிரித்தெடுக்கும்போது, கவனமாக ஆய்தல்வேண்டும். இல்லையெனில் கையில் கத்தி பாய்ந்துவிடும்..

தற்போது, வெங்காயம் ஆய்தல் வேலை செய்யும் பெண்களுக்கு ஒரு மூட்டை வெங்காயத்தை ஆய்ந்து கொடுத்தால் 120 ரூபாய் கூலி. இதற்காக காலை முதலே பெண்கள் வேலை செய்கிறார்கள்.

``வழக்கமாக கிடைக்கும் வெங்காய விளைச்சல் இந்த வருடம் இல்லை. தொடர்ந்து, வெங்காய விளைச்சல் சரிந்ததால், வெங்காயத்தின் விலை இன்னும் கூடலாம்” என்கிறார்கள் விவசாயிகள்.

 கொள்முதல் செய்யப்பட்ட வெங்காயம் தற்போது கிலோ 200 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

``வெங்காயம் விலையில்லாமல் வயலில் கொட்டிய காலம்போய், தற்போது வெங்காயம் தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. ஆனால் வெங்காயம் இல்லை. நாங்கள் என்ன செய்வோம்" என்கிறார்கள் விவசாயிகள்

வெங்காயத்திலிருந்து பிரிக்கப்பட்ட பயிர்களை ஆடு மாடுகளுக்கு தீனியாகவும் போடுகிறார்கள்