Published:Updated:

வீட்டு மொட்டை மாடியிலேயே நாற்றங்கால் அமைத்த விவசாயி; குவியும் பாராட்டு!

வீட்டு மாடியிலேயே நாற்றங்கால் வளர்ப்பது குறித்து யோசித்து அதற்கான நடவடிக்கையிலும் இறங்கி, தற்போது அதில் வெற்றியும் பெற்றுள்ளார் பாலமுருகன்.

கனமழையிலிருந்து சம்பா சாகுபடிக்கான நெல் நாற்றுக்களைப் பாதுகாப்பாக வளர்த்தெடுக்க, வீட்டின் மாடியில் நாற்றங்கால் அமைத்து நடவு செய்திருக்கும் விவசாயிக்கு பாராட்டுகள் குவிகின்றன.

மாடியில் நாற்றங்கால்
மாடியில் நாற்றங்கால்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா பெரம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர், விவசாயி பாலமுருகன். இயற்கை ஆர்வலரான இவர், தனக்குச் சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் நஞ்சில்லா பாரம்பர்ய நெல் ரகங்களான ஆத்தூர் கிச்சிலி சம்பா, தூயமல்லி, கறுப்புக்கவுனி போன்ற ரகங்களை இயற்கை முறையில் விளைவித்து வருகிறார்.

பொதுவாக, வயலில் நாற்றங்கால் அமைத்து, தண்ணீர் பாய்ச்சி, உழவு செய்து, நிலத்தை சமன்படுத்தி, அதில் விதை விதைத்து நாற்றங்கால் அமைப்பார்கள். இவற்றையெல்லாம் தவிர்த்து தனது வீட்டு மாடியிலேயே நாற்றங்கால் வளர்ப்பது குறித்து யோசித்து அதற்கான நடவடிக்கையிலும் இறங்கி, தற்போது அதில் வெற்றியும் பெற்றுள்ளார் பாலமுருகன்.

மாடியில் நாற்றங்கால்
மாடியில் நாற்றங்கால்
பலே பயிர் சாகுபடி; அசத்தும் சிங்கப்பூர் தம்பதி! | Pasumai Vikatan

இதுபற்றி பாலமுருகனிடம் பேசினோம்.

``முதற்கட்டமாக ஒன்றரை ஏக்கருக்கான ஆத்தூர் கிச்சிலி சம்பா, ஒன்றரை ஏக்கருக்கான தூயமல்லி விதை ரகங்களுக்கு மாடியிலேயே நாற்றங்கால் அமைக்க விரும்பினேன். சேறில்லா விவசாய முறையாக முற்றிலும் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினேன். இயந்திர நடவுக்கான நாற்றுகளை சேறுக்குப் பதிலாக கடுக்காய், தேங்காய் நார்க்கழிவு உரம், மரத்தூள் போன்றவற்றைக் கொண்டு ட்ரேயில் நெல் விதைகள் பரப்பி நாற்றுக்களை உருவாக்கினேன். நாற்றுகளுக்குத் தேவையான நீரைப் பூவாளி வைத்து பாய்ச்சினேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதனால் நாற்றுகள் 17 நாள்களில் வளர்ந்தன. நாற்றின் வேர்ப்பகுதி சேதமாகாமல், சேறும் சகதியும் இல்லாமல், அப்படியே எடுத்துச் சென்று நடவு செய்தேன். வயலில் நாற்றங்கால் அமைத்திருந்தால் மழையில் மூழ்கிவிடுமோ என்ற அச்சத்துடன் இருந்திருப்பேன். இதில் அந்த அச்சமில்லை. மேலும், வயலில் நாற்றங்கால் அமைக்கும் செலவைவிட, இதற்கு குறைந்த செலவே ஆனது.

நெல் ஈரப்பதம் விவகாரம்: `மத்திய குழுவின் ஆய்வே ஒரு நாடகம்தான்!' - கொந்தளிக்கும் விவசாயிகள்

இதற்கான கலப்பில்லா, முளைப்புத்திறன் அதிகமுள்ள நெல் ரகங்களை வீரசோழன் உழவன் உற்பத்தி நிறுவனம், ஐ.சி.ஐ.சி.ஐ பவுண்டேஷனுடன் இணைந்து வழங்கிவருகிறது. பாரம்பர்ய நெல் ரகங்களை பரவலாக்கம் செய்யும் முனைப்புடன், நெல் விதைகளை வழங்கி வரும் இவர்கள் அதை விலைக்குத் தருவதற்குப் பதிலாக, தரும் விதை நெல்லைவிட இரண்டு மடங்காகத் திரும்பப் பெற்று பாரம்பர்ய ரகங்களைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளனர். அவர்களிடம் விதைகள் வாங்கி நான் மட்டுமே அதை மாடியில் வளர்த்து நடவு செய்துள்ளேன். பயிர் நன்றாக உள்ளது. என் முயற்சியைப் பலரும் பாராட்டுகின்றனர். மகிழ்ச்சி" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு