Published:Updated:

`கொரோனா, ஒமிக்ரான்’ உருமாறும் வைரஸ் நோய்களுக்கு தீர்வளிக்கும் மூலிகை மருந்து!

பேராசிரியர் ஜெ.ஜெயகாந்தன்

மூலிகைத் தாவரங்களைக் கொண்டு ஆய்வு செய்ததில் "கபசுரக் குடிநீர், வெற்றிலை, கீழாநெல்லி கலந்த மூலிகை குடிநீரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு பயன்படுத்தலாம்," எனஅழகப்பா பல்கலைக்கழக உயிரி தகவலியல் துறை தலைவர் ஜெயகாந்தன் கூறியுள்ளார்.

`கொரோனா, ஒமிக்ரான்’ உருமாறும் வைரஸ் நோய்களுக்கு தீர்வளிக்கும் மூலிகை மருந்து!

மூலிகைத் தாவரங்களைக் கொண்டு ஆய்வு செய்ததில் "கபசுரக் குடிநீர், வெற்றிலை, கீழாநெல்லி கலந்த மூலிகை குடிநீரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு பயன்படுத்தலாம்," எனஅழகப்பா பல்கலைக்கழக உயிரி தகவலியல் துறை தலைவர் ஜெயகாந்தன் கூறியுள்ளார்.

Published:Updated:
பேராசிரியர் ஜெ.ஜெயகாந்தன்

உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா, ஒமிக்ரான் தாக்கம் குறைந்தாலும் முழுமையாக நம்மை விட்டு செல்லவில்லை. ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வந்தபோது, உயிர் பலி குறைவாகவே ஏற்படும் என காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக உயிரி தகவலியல் துறை தலைவர் ஜெயகாந்தன் கூறியிருந்தார்.

கீழாநெல்லி | மூலிகை
கீழாநெல்லி | மூலிகை

கொரோனா வைரஸின் ஸ்பைக் புரதத்தில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் நோய்த்தொடர்பு புரதங்களை அழிக்கும் மருந்துகள் குறித்து, மூலிகை தாவரங்களைக் கொண்டு ஆய்வு மாணவர்களுடன் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் "கபசுரக் குடிநீர், வெற்றிலை, கீழாநெல்லி கலந்த மூலிகை குடிநீரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு பயன்படுத்தலாம்," என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேராசிரியர் ஜெ.ஜெயகாந்தன் கூறுகையில்,

''ஒமைக்ரான் வைரஸ் கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்டது. உலகளவில் பல்வேறு ஆராய்ச்சிகளில் கிடைக்கப்பட்ட தரவுகளின் அடிப்படை மற்றும் உலக சுகாதார அமைப்பின் தரவுகளின் படி , 51 ஸ்பைக் புரதங்களில் ஏற்பட்ட மாற்றங்களை மட்டும் எடுத்துக்கொண்டு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.

கொரோனா பரவலுக்கு முக்கிய பங்காற்றும் ஸ்பைக் புரதம் 1.273 அமினோ அமிலங்களை கொண்டது. இந்த ஸ்பைக் புரதம் பல்வேறு வகையான மரபணு மாற்றங்களுக்கு உட்படும் தன்மை கொண்டது. இது 13 வகையான ஆல்பா,10 வகையான பீட்டா, 13 வகையான காமா, 15 வகையான டெல்டா, 35 வகையான ஒமைக்ரான் போன்ற புரத மாற்றங்கள் ஏற்பட்டு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

வெற்றிலை | மூலிகை
வெற்றிலை | மூலிகை
Photo: Gunaseelan.K / Vikatan

நோய் பரவலுக்கு முக்கிய பங்காற்றும் 'ஸ்பைக்' புரதம் 1,273 அமினோ அமிலங்களைக் கொண்டது. இந்தப் புரதம் பிணைப்பை உருவாக்கி வைரசின் மரபணுவை, மனித செல்லிற்குள் செலுத்துகிறது. ஆராய்ச்சியில் இந்த வகை வைரஸ் ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா மற்றும் ஒமிக்ரான் என்று உலக சுகாதார அமைப்பினால் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஒமிக்ரான் வகை நூற்றுக்கும் மேற்பட்ட துணை வகைகளாக உருமாறி நோய் தொற்றுப் பரவும் தன்மை மற்றும் வைரசின் எதிர்பாற்றல் திறன் காரணமாக உலக அளவில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றன.

கொரோனாவுக்கு எதிரான ஆற்றல் மிக்க மருந்துகளை உருவாக்குவதற்காக மூலிகை தாவரங்களைக் கொண்டு ஆய்வுகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்.

நிலவேம்புக் குடிநீர் குடிக்கும் மக்கள்
நிலவேம்புக் குடிநீர் குடிக்கும் மக்கள்

எப்.டி.ஏ., எனும் அமெரிக்க நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறையில் பயன்படுத்தப்படும் 'டெக்ஸாமீத்தாஸோன், அகாலாப்ருட்டினீப், நபாமோஸ்டாட்' மருந்துகளை காட்டிலும், இந்திய அரசின் ஆயுஷால் பரிந்துரைக்கப்பட்ட கீழாநெல்லி, வெற்றிலை மற்றும் கபசுர குடிநீரில் இருந்து மொத்தம் 42 சிறிய மூலக்கூறுகள் சேர்ந்த கலவைக் குடிநீர் வைரசுக்கு எதிராக ஆன்டி வைரசாக விளங்குகிறது. நோய் எதிர்ப்பாற்றலை அதிகரித்து சிறந்த முறையில் செயல்படுகிறது எனவும் கணினி பகுப்பாய்வின் மூலம் ஆராய்ச்சியில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த கலவை குடிநீரை அனைத்து விதமான நோயாளிகளும் பயன்படுத்தலாம். 42 சிறிய மருந்து மூலக்கூறுகளிலுள்ள 'செபுலாஜிக் ஆசிட், ஜெரனின், ரெபாண்டுசினிக் ஆசிட்' ஆகிய மருந்து மூலக்கூறுகளை கலவையாக எடுத்துக் கொண்டால் இந்த வைரசுக்கு எதிராக சிறப்பாக செயல்படும். இவை வைரஸ் மனித செல்லினுள் நுழைவதை தடுக்கிறது'' என தெரிவித்துள்ளார்.