Published:Updated:

ஒரு கிலோ ரூ.1 லட்சம்... அஸ்ஸாமில் ஏலம் போன இயற்கை தேயிலை!

தேயிலைப் பறிப்பு

``அதிக விலைக்கு விற்பனையானது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இது அஸ்ஸாம் தேயிலைத் தொழில் புத்துயிர் பெற உதவியாக இருக்கும்." - தேயிலைத் தோட்டத்தின் உரிமையாளர் ராக்கி தத்தா.

ஒரு கிலோ ரூ.1 லட்சம்... அஸ்ஸாமில் ஏலம் போன இயற்கை தேயிலை!

``அதிக விலைக்கு விற்பனையானது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இது அஸ்ஸாம் தேயிலைத் தொழில் புத்துயிர் பெற உதவியாக இருக்கும்." - தேயிலைத் தோட்டத்தின் உரிமையாளர் ராக்கி தத்தா.

Published:Updated:
தேயிலைப் பறிப்பு

அஸ்ஸாம் தேயிலை எப்போதும் பிரபலமாகும். அஸ்ஸாம் தேயிலை உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அஸ்ஸாமில் உள்ள ஜோர்கட் தேயிலை ஏலம் விடும் மையத்தில் பபோஜன் இயற்கை தேயிலை ஏலத்துக்கு வந்தது. இத்தேயிலை பல அபூர்வமான குணங்களைக் கொண்டதாகும். இதனால் இத்தேயிலைக்கு எப்போதுமே அதிக வரவேற்பு இருக்கும். ஏலத்தில் ஒரு கிலோ பபோஜன் இயற்கை தேயிலை ஒரு லட்சம் ரூபாய் என்ற அளவில் ஏலம் போனது.

அஸ்ஸாம் தேயிலை நிறுவனம் ஒன்றுதான் இந்த விலை கொடுத்து இத்தேயிலையை விலைக்கு வாங்கியது. இத்தேயிலை இலைகள் செயின் முனையில் இரண்டாவது இலையில் பறிக்கப்படும். இந்தத் தேயிலை பிரகாசமான மஞ்சள் கலரில் மதுபான சுவை கொடுக்கும்.

அஸ்ஸாம் தேயிலைத் தோட்டம்
அஸ்ஸாம் தேயிலைத் தோட்டம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தத் தேயிலையை ஏலத்தில் எடுத்த கம்பெனியின் உரிமையாளர் பிஜித் சர்மா இது குறித்து கூறுகையில், ``அஸ்ஸாமில் இருந்து எங்களின் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேயிலையைக் கொடுக்க இந்த அபூர்வ ரக தேயிலை உதவும். இந்தத் தேயிலை மிகவும் அபூர்வமானது. உலகம் முழுவதும் பரவியிருக்கும் எங்களின் வாடிக்கையாளர்கள் புதிய ரகத்தின் சுவை மற்றும் மதிப்பைப் புரிந்துகொள்வார்கள்'' என்று தெரிவித்தார்.

இந்த அபூர்வ தேயிலையை விளைவித்த தேயிலை தோட்டத்தின் உரிமையாளர் ராக்கி தத்தா இது குறித்து கூறுகையில், ``இந்த அபூர்வ வகை தேயிலையில் ஒரு கிலோ மட்டுமே உற்பத்தி செய்கிறோம். இந்த அளவு அதிக விலைக்கு விற்பனையானது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இது அஸ்ஸாம் தேயிலைத் தொழில் புத்துயிர் பெற உதவியாக இருக்கும். வாடிக்கையாளர்களிடம் அதிக வரவேற்பு இருந்ததால் முதல் முறையாக இந்த பிரீமியம் தேயிலையை உற்பத்தி செய்திருக்கிறோம்'' என்று மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism