Published:Updated:

தென்மேற்குப் பருவமழை எப்படி இருக்கும்?

முன்னறிவிப்பு

பிரீமியம் ஸ்டோரி
டப்பு ஆண்டின் தென்மேற்குப் பருவமழைக் காலத்துக்கான (ஜூன் முதல் செப்டம்பர் வரை) மழை பற்றிய முன்னறிவிப்பு செய்வதற்காக, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திலுள்ள பயிர் மேலாண்மை இயக்ககத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதற்காக மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பசிபிக் பெருங்கடலில் பூமத்தியரேகையை ஒட்டியிருக்கும் கடற்பகுதியின் மேற்பரப்பு நீரின் வெப்பநிலை மற்றும் தென் மண்டல காற்றழுத்தக் குறியீடு ஆகியவற்றை உபயோகித்து ஆஸ்திரேலியா நாட்டிலிருந்து பெறப்பட்ட மழை மனிதன் (Australian Rainfman International V4.3 Software) என்னும் கணினிக் கட்டமைப்பைக் கொண்டு, 2020-ம் ஆண்டுக்கான தென்மேற்குப் பருவமழை முன்னறிவிப்பு பெறப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் எதிர்பார்க்கப்படும் 60 சதவிகித வாய்ப்புக்கான மழையளவு கணக்கிடப்பட்டுள்ளது.

தென்மேற்குப் பருவமழை
தென்மேற்குப் பருவமழை

சராசரி மழையளவு எதிர் பார்க்கப்படும் மாவட்டங்கள்: திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி, அரியலூர், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், நாமக்கல் மற்றும் காஞ்சிபுரம்.

சராசரி மழையளவை ஒட்டி எதிர்பார்க்கப்படும் மாவட்டங்கள்: மதுரை, விருதுநகர், கரூர், சேலம், பெரம்பலூர், சென்னை மற்றும் திருவண்ணாமலை.

தென்மேற்குப் பருவமழை 
எப்படி இருக்கும்?

தகவல்:

வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம், பயிர்கள் மேலாண்மை இயக்ககம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம். கோயம்புத்தூர்-641 003.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு