Published:Updated:

`மாங்கொட்டையில் இருக்கு அவ்ளோ விற்பனை வாய்ப்புகள்!' - விவசாயிகளை வெற்றிபெற வைக்கும் களப்பயிற்சி

இயற்கை விவசாயத்துல வெற்றி பெறுவதற்காகப் பல்வேறு விஷயங்களை இந்தப் பயிற்சியில கத்துக்கலாம் வாங்க!

`` `கற்றது கையளவு... கல்லாதது உலகளவு' என்பார்கள். விவசாயமும் அதில் விதிவிலக்கல்ல. விவசாயத்தில் கற்றுக்கொண்டே இருப்பவர்கள் வெற்றிகரமான விவசாயிகளாக இருக்கிறார்கள். விதைப்பு, பராமரிப்பு, அறுவடை மட்டுமே விவசாயம் இல்லை. அது பல நேரங்களில் நஷ்டத்தை ஏற்படுத்தி விடுகிறது. ஆனால், அறுவடையான பொருள்களை அப்படியே விற்பனை செய்யாமல் மதிப்புக்கூட்டியோ, சேமித்து வைத்தோ விற்பனை செய்யும்போது நிச்சய லாபம் பெறலாம்" என்கிறார் உதவி வேளாண் இயக்குநர் பிரபாகரன்.

பிரபாகரன்
பிரபாகரன்

சுமார் 30 ஆண்டுகளாக வேளாண் விற்பனை பிரிவில் பணியாற்றி வரும் பிரபாகரன், விற்பனை வாய்ப்புகள் பற்றி விவசாயிகளுக்குப் பயிற்சி அளிப்பதில் நிபுணத்துவம் வாய்ந்தவர்.

``நாம சாப்பிட்டுத் தூக்கிப் போடுற மாங்கொட்டையில இருக்குதுங்க, அத்தனை வியாபார வாய்ப்பு. மாங்கொட்டையை உடைச்சா உள்ள ஒரு பருப்பு இருக்கும். அதை அரைச்சு மாவு எடுக்கலாம். அந்த மாவுக்கு உலக சந்தையில நல்ல விலை கிடைக்குது. ஆனா, அதை நாம தூக்கிப் போட்டுட்டு போயிடுறோம். இது மாதிரிதான்ங்க, நம்ம கண்ணுக்கு முன்னாடி கொட்டிக்கிடக்குற வாய்ப்புகளை விட்டுட்டு வானத்துல அதைத் தேடிகிட்டு இருக்கோம்.

விவசாயத்துல அறுவடை பின்சார் தொழில்நுட்பம்னு ஒண்ணு இருக்கு. அதை நம்ம விவசாயிகள் ரொம்ப பேர் செய்யுறதில்ல. அதை வியாபாரிகள் செய்யுறாங்க. அதுனால விற்பனையை மட்டுமே செய்யுற அவங்க அதிக லாபம் அடையிறாங்க. ஆனா, அதைக் கஷ்டப்பட்டு உற்பத்தி செஞ்ச விவசாயிகள் நஷ்டத்துல தவிக்கிறாங்க. இந்த நிலைமை மாறணும். விவசாயிகளும் வியாபார நுணுக்கங்களைத் தெரிஞ்சிக்கணும்.

களப்பயிற்சி
களப்பயிற்சி

அதைச் சொல்லிக்கொடுக்க அரசாங்கம் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்திட்டு இருக்கு. அதை முதல்ல தெரிஞ்சுக்கணும். பிறகு, அதைச் செயல்படுத்த ஆரம்பிச்சாப் போதும்; நிச்சயமா விவசாயிகளோட வருமானம் ரெட்டிப்பாகும். விலை இல்லாத காய்கறிகளை வத்தல் ஆக்குறது, கூழ் ஆக்குறது மாதிரியான பல்வேறு தொழில் நுட்பங்கள் இருக்குது. அதே மாதிரி ஒரு விளைபொருளை எப்படி அறுவடை செய்யுறதுன்னு இருக்கு. நம்ம விவசாயிங்க பலபேர் அதுல தோத்துப் போயிடுறோம். முறையான அறுவடை இல்லைன்னா, பொருளோட தரம் குறைஞ்சிடும். உதாரணமா பழங்களை அறுவடை செய்யுறதுக்கு நாம என்ன செய்யுறோம். ஒண்ணு தொரட்டி வெச்சு பிடுங்குறோம். இல்லைன்னா மரத்தை உலுக்குறோம். இதுனால கீழே விழுகுற பழங்கள் அடிபடுது. அதோட தரம் போயிடுது. பழங்களைப் பறிக்கச் சின்ன சின்னக் கருவிகள் பல பயன்பாட்டுல இருக்கு. அதைப் பயன்படுத்தக் கத்துக்கணும்''

- இப்படி கிராமத்து விவசாயிகளும் புரிந்துகொள்ளும் வகையில் பயிற்சி வகுப்புகளில் பாடம் எடுப்பது பிரபாகரன் ஸ்டைல்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`அதெல்லாம் சரி... இங்க எதுக்கு பிரபாகரன் பற்றிச் சொல்றீங்க'ன்னு நீங்கக் கேக்குறது புரியுது. வர்ற சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாள்கள் (23, 24.10.2021) திருப்பூர்ல ஒரு பயிற்சி நடக்கப் போகுது. பசுமை விகடன் மற்றும் அறப்பொருள் வேளாணகம் இணைந்து இயற்கை விவசாயத்தில் வெற்றி பெறும் வழிகள் என்ற தலைப்புல ஒரு களப்பயிற்சியை நடத்தப் போறாங்க. அதுல, பிரபாகரனும் பேசப்போறாரு. அறுவடை பின்சார் தொழில்நுட்பம், மதிப்புக்கூட்டல் மற்றும் விற்பனை வாய்ப்பு குறித்து பிரபாகரன் பேசப் போறாரு. அதுக்காகத்தான் பிரபாகரனை அறிமுகப்படுத்தினோம்.

பயிற்சி விவரங்கள்
பயிற்சி விவரங்கள்

23-ம் தேதி காலை 10 மணிக்குத் தொடங்குற பயிற்சியில பூச்சியியல் வல்லுநர் செல்வம், நீர் மேலாண்மை நிபுணர் பிரிட்டோ ராஜ், தமிழ்நாடு வனக்கல்லூரி பேராசிரியர் பாலசுப்பிரமணியன், இயற்கை விவசாய சான்று அதிகாரி சுரேஷ், விதைகள் யோகநாதன் உள்ளிட்ட இன்னும் பல ஆளுமைகள் பயிற்சிக் கொடுக்கப் போறாங்க. இரண்டு நாள்கள் பண்ணையிலேயே தங்கி பயிற்சி எடுத்துக்கலாம். உணவு, தங்குமிடத்துக்காக 3,000 ரூபாய் பயிற்சிக் கட்டணம் செலுத்தணும். உங்களுக்கும் பயிற்சியில கலந்துக்க விருப்பம் இருந்தா கீழே இருக்க லிங்க் க்ளிக் பண்ணி உங்க வருகையைப் பதிவு செய்யுங்க மக்களே... இயற்கை விவசாயத்துல வெற்றி பெறுவதற்காகப் பல்வேறு விஷயங்களை இந்தப் பயிற்சியில கத்துக்கலாம் வாங்க!

https://bit.ly/farming-training

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு