Published:Updated:

இயற்கையுடன் கலந்த விவசாயிகளின் குரல்!

நம்மாழ்வார்
பிரீமியம் ஸ்டோரி
News
நம்மாழ்வார்

நினைவு

யற்கை விவசாயத்தில் நீண்ட அனுபவம் பெற்றவரும், பசுமை விகடனைத் தீவிரமாக நேசித்தவருமான ‘சிக்கல்’ அம்பலவாணன், உடல்நலக்குறைவால் கடந்த மே 30-ம் தேதி இரவு இயற்கை எய்தினார். நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் பகுதியைச் சேர்ந்தவர் அம்பலவாணன்.

தி.மு.க முன்னாள் மாவட்ட செயலாளரான இவர், விவசாயத்தில் தீவிர ஆர்வம் கொண்டவர். தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கித் தலைவர், வேளாண் விற்பனைக்குழுத் தலைவர், கோவையிலுள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக செனட் உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளை இவர் வகித்தபோது, விவசாயிகளின் நலன்களுக்காகக் குரல்கொடுத்தவர். கட்சிக் கூட்டங்களிலும்கூட, விவசாயிகளின் பிரச்னைகளைப் பற்றியே பேசுவார் என இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் நினைவுகூர்கிறார்கள்.

நாகை மாவட்டம், பாலையூரில் பசுமை விகடன் நடத்திய நம்மாழ்வாரின் ‘இனியெல்லாம் இயற்கையே’ நேரடி களப்பயிற்சியில் கலந்துகொண்டு பேசிய அம்பலவாணன்.
நாகை மாவட்டம், பாலையூரில் பசுமை விகடன் நடத்திய நம்மாழ்வாரின் ‘இனியெல்லாம் இயற்கையே’ நேரடி களப்பயிற்சியில் கலந்துகொண்டு பேசிய அம்பலவாணன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

6 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்த அம்பலவாணன், ரசாயன விவசாயத்தின் பாதிப்புகளை உணர்ந்ததால்,கடந்த 18 ஆண்டுகளாகத் தீவிர இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வந்தார். நாளடைவில் தனது அனுபவத்தால், இயற்கை விவசாய வல்லுநராகவும் உருவெடுத்து, தனது பண்ணையில் மற்ற விவசாயிகளுக்கு இயற்கை விவசாயப் பயிற்சியும் அளித்து வந்தார். தமிழக இயற்கை உழவர் இயக்கத்தின் தலைவராகவும் இருந்துவந்தார். இதற்கிடையே இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாருடன் நட்பு உருவாகி, அவருடன் சேர்ந்து பயணித்தார். நாகை மாவட்டம் பாலையூரில் பசுமை விகடன் நடத்திய நம்மாழ்வாரின் ‘இனியெல்லாம் இயற்கையே’ நேரடி களப்பயிற்சியில் கலந்துகொண்டு, தனது அனுபவத்தை விவசாயிகளுடன் பகிர்ந்துகொண்டார். டெல்டா மாவட்டங்களில் பசுமை விகடன் நடத்திய பல்வேறு நிகழ்ச்சிகளிலும் ஆர்வத்துடன் கலந்துகொள்வார்.

வயது மூப்படைந்த நிலையிலும்கூட, தனது இயற்கை விவசாய ஓட்டத்தை நிறுத்திக்கொள்ளவே இல்லை. அம்பலவாணனின் மகன் குமார், நம்மிடம் பேசியபோது “அப்பா, பசுமை விகடனோட தீவிர வாசகர். தன்னைச் சந்திக்கக்கூடிய நண்பர்கள், உறவினர்கள், ஊர்க்காரர்கள் என்று யாரைப் பார்த்தாலும் ‘பசுமை விகடன் படிங்க.. நிறைய விஷயம் இருக்கு’னு சொல்லிக்கிட்டே இருப்பார். இதுல வெளியாகக்கூடிய கட்டுரைகளையும் தொழில்நுட்பங்களையும் பத்தி எல்லார்கிட்டயும் ஆர்வத்தோடு பேசுவார். அப்பாவுக்கு 86 வயசு. உடம்பு முடியாமல், அஞ்சு மாசமா சிகிச்சையில் இருந்தப்பவும்கூட, பசுமை விகடன் படிக்கிறத நிறுத்தலை” என நெகிழ்வோடு நினைவுகூர்ந்தார்.