Published:Updated:

விவசாயத்திலும் மாத வருமானம்! - புதியபாதை காட்டும் 'பல்பயன் வேளாண் காடு'!

இந்தப் பண்ணைத் திட்டம் சிறு குறு விவசாயிகளுக்கானது. எக்காரணம் கொண்டும் பண்ணையில் சம்பள ஆட்களை வைத்துப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது.

பல்பயன் வேளாண் காடு
பல்பயன் வேளாண் காடு

விவசாயிகளுக்கு மாத வருமானம் தரும் வகையில் 'பல்பயன் வேளாண் காடுகள்' என்கிற மாதிரிப் பண்ணை வடிவத்தை உருவாக்கியுள்ளார் கோயம்புத்தூர், மேட்டுப்பாளையத்தில் இயங்கிவரும் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் பார்த்திபன். இயற்கை எழில் கொஞ்சும் கல்லூரி வளாகத்தின் ஒரு பகுதியில் அமைந்துள்ள பல்பயன் வேளாண் காடுகளைப் பார்த்திபன் நமக்கு அறிமுகம் செய்துவைத்து விளக்கினார். விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2oGI43L

''பிற துறைகளில் உள்ளவர்கள் மாத ஊதியம் பெறுவதுபோல, விவசாயிகளும் பெற வேண்டும் என்கிற நோக்கில் இந்தப் பண்ணையை வடிவமைத்துள்ளேன். ஒரு ஏக்கர் பரப்பளவில் இதை அமைத்துள்ளோம். வெளியாட்களை வேலைக்கு வைத்துக்கொள் ளாமல், குடும்பத்தில் உள்ளவர்கள் மட்டுமே ஈடுபடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாகச் சிறு குறு விவசாயிகளுக்கு மிகவும் ஏற்றப் பண்ணைத்திட்டம் இது'' என்று முகவுரை கூறிய பார்த்திபன், பல்பயன் வேளாண் காடுகளின் வடிவமைப்பு மற்றும் பயிர் சாகுபடி விவரங்களை விளக்கினார்.

எக்காரணம் கொண்டும் பண்ணையில் சம்பள ஆட்களை வைத்துப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது.

"சதுரவடிவில் உள்ள ஒரு ஏக்கர் நிலத்திற்குள் படுக்கவைத்த வண்டிச்சக்கரம்போல் காட்சி தரும் வகையில், வட்ட வடிவ முறையில் அமைக்கப்பட்டிருக்கிறது இந்தப் பல்பயன் வேளாண் காடுகள் பண்ணை. நிலத்தின் மையத்தில் பத்தடிக்குப் பத்தடி அளவில் ஒரு சிறிய கொட்டகை அமைத்துக்கொள்ள வேண்டும். அங்கிருந்து நிலத்தின் நான்கு திசைகளிலும் நடந்து சென்று வரும் வகையில் பாதை அமைக்க வேண்டும். கொட்டகையை மையமாக வைத்து, வட்ட வடிவில் பயிர்களை நடவு செய்ய வேண்டும். ஒவ்வொரு வட்டமும், நடுவில் உள்ள பாதை காரணமாக நான்கு பாகங்களாக இருக்கும். கொட்டகையைச் சுற்றி ஆறு அடுக்குகளாக (வட்டங்களாக) பயிர்களை நடவு செய்வதுபோல் இந்தப் பண்ணை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பண்ணைத் திட்டம் சிறு குறு விவசாயிகளுக்கானது. எக்காரணம் கொண்டும் பண்ணையில் சம்பள ஆட்களை வைத்துப் பணிகளை மேற்கொள்ளக் கூடாது. குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே விவசாய வேலைகளைச் செய்ய வேண்டும். கண்டிப்பாக அனைத்துப் பயிர்களுக்கும் சொட்டுநீர்க் குழாய்கள் பொருத்தப்பட வேண்டும்.

பல்பயன் வேளாண் காடு
பல்பயன் வேளாண் காடு

மரங்கள் வளர்ந்ததும் சிறிய வனம்போல மாறிவிடும். பண்ணையின் தட்பவெட்ப சூழலால் மண்ணின் ஈரப்பதம் தொடர்ந்து காப்பாற்றப்படும். இதற்குக் குறைவான பாசனமே போதுமானது. தொடர்ந்து அனைத்து சிறு குறு விவசாயிகளுக்கும் பல்பயன் வேளாண் காடுகள் திட்டம் அரசாங்கத்தின் உதவியுடன் கொண்டு சேர்க்கப்படும்'' என்றார் மகிழ்ச்சியுடன்.

- இந்தப் பண்ணைத் திட்டத்தின் ஆறு அடுக்குகளை ஒவ்வொன்றாக முனைவர் பார்த்திபன் விவரித்ததையும், அவரது தொடர்பு எண்ணையும் பசுமை விகடன் இதழின் சிறப்புக் கட்டுரை வழியாக அறிய > https://www.vikatan.com/news/agriculture/innovative-farming-method-to-increase-profits

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் சிறப்புக் கட்டுரைகள்! > ரூ.200 மதிப்பிலான் ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய க்ளிக் செய்க... > http://bit.ly/2MuIi5Z |