Published:Updated:

மரபணு மாற்றுக் கடுகுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்; சுற்றுச்சூழல் அமைச்சகம் சொல்லும் பதில் இதுதான்!

மரபணு மாற்ற உணவு
News
மரபணு மாற்ற உணவு

இந்தியாவைப் பொறுத்தவரை கத்திரிக்காய் 6 முதல் 8 லட்சம் ஏக்கர்களில் விளைவிக்கப்படுகிறது. ஆனால், கடுகு 80 லட்சம் ஏக்கர்களில் விளைகிறது. மரபணு மாற்றப்பட்ட கத்திரிக்காய் பரிசோதித்த அளவுக்கு மரபணு மற்றப்பட்ட கடுகு பரிசோதிக்கவில்லை.

மரபணு மாற்றுக் கடுகுக்கு எதிரான குற்றச்சாட்டுகள்; சுற்றுச்சூழல் அமைச்சகம் சொல்லும் பதில் இதுதான்!

இந்தியாவைப் பொறுத்தவரை கத்திரிக்காய் 6 முதல் 8 லட்சம் ஏக்கர்களில் விளைவிக்கப்படுகிறது. ஆனால், கடுகு 80 லட்சம் ஏக்கர்களில் விளைகிறது. மரபணு மாற்றப்பட்ட கத்திரிக்காய் பரிசோதித்த அளவுக்கு மரபணு மற்றப்பட்ட கடுகு பரிசோதிக்கவில்லை.

Published:Updated:
மரபணு மாற்ற உணவு
News
மரபணு மாற்ற உணவு

உணவே மருந்து என்ற காலம் மறைந்து உணவே நஞ்சாகி நோய்களுடன் வாழ்ந்துகொண்டிருக்கிறோம், பூச்சிக்கொல்லிகள் பூச்சியைக் கொல்கிறதோ இல்லையோ ஆனால், பூச்சிக்கொல்லி தெளிக்கப்பட்ட உணவு நம்மைக் கொல்கிறது. செயற்கையான உரங்கள், பூச்சிக்கொல்லிகள் வரிசையில் மரபணு மாற்றப்பட்ட விதைகளும் இயற்கைக்கும் மக்களின் ஆரோக்கிய வாழ்வுக்கும் ஆபத்தானது.

கடுகு சாகுபடி
கடுகு சாகுபடி

Dhara mustard hybrid 11(DMH-1) என்னும் மரபணு மாற்றப்பட்ட கடுகில் பார்னேஸ், பார்ஸ்டார், பார் மரபணுக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இயல்பாகவே கடுகு தனக்குள்ளும், வெளியிலும் மகரந்தச் சேர்க்கை செய்யக்கூடிய தன்மை உடையது. பார்னேஸ் மரபணு கடுகில் ஆண் மலட்டுத்தன்மை ஏற்படுத்தும். தனக்குள் ஏற்படும் மகரந்தச் சேர்க்கை இதனால் தடைப்படும். வெளியில் நடக்கும் மகரந்தச் சேர்க்கை அதிகரித்து விளைச்சல் அதிகமாகும் என்று சொல்லப்படுகிறது. ஆனால், இந்த வகை கடுகுக்கு உலக வேளாண்மை அமைப்பு தடை செய்துள்ளது. மரபணு மாற்றுக் கடுகை வணிக ரீதியாக சாகுபடி செய்ய மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்குக் கீழ்வரும் மரபணு மதிப்பீட்டுக்குழு அனுமதித்துள்ளது. இதற்கு திரைப் பிரபலங்களும், சூழலியல் செயற்பாட்டாளர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மரபணு மாற்று விதைகளுக்கு எதிரான கூட்டணி (Coalition for a GM-Free India, a pan-Indian citizens platform) ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. ஆய்வறிக்கையில் மரபணு மாற்றப்பட்ட கடுகால் ஏற்படும் சாதக பாதகங்களைக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை கத்திரிக்காய் 6 முதல் 8 லட்சம் ஏக்கர்களில் விளைவிக்கப்படுகிறது. ஆனால், கடுகு 80 லட்சம் ஏக்கர்களில் விளைகிறது.

கடுகு சாகுபடி
கடுகு சாகுபடி

மரபணு மாற்றப்பட்ட கத்திரிக்காய் பரிசோதித்த அளவுக்கு மரபணு மற்றப்பட்ட கடுகு பரிசோதிக்கவில்லை. மரபணு மதிப்பீட்டுக்குழுவால் உருவாக்கப்பட்ட நிபுணர்குழுவில் மருத்துவத்துறையில் உள்ளவர்கள் யாரும் இல்லை. மரபணு மாற்றப்பட்ட கடுகுக்கு மரபணு மதிப்பீட்டுக்குழுவின் 147 கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. ஆனால், இந்தக் கூட்டத்தில் ஐசிஎம்ஆர் பிரதிநிதியாக ஒருவர்கூட பங்கேற்கவில்லை. உச்ச நீதி மன்றம் மரபணு மாற்றப்பட்ட கடுகை தடை செய்வதற்கான காரணங்களை ஆராய்வதற்குத் தொழில்நுட்ப நிபுணர் குழு ( technical execute committee) அமைத்துள்ளது. இக்குழுவில் அரசு தரப்பிலும் பங்குதாரர்களும் மரபணு விஞ்ஞானிகளும் அடங்குவர். இதனால் இக்குழு எடுக்கும் முடிவுகள் ஒரு தலைப்பட்சமாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

மரபணு மாற்றப்பட்ட கடுகை பரிசோதிப்பதற்கான நெறிமுறைகளும் வகுக்கப்படவில்லை. 2008-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் ஓர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அனைத்து விளைபொருள்களின் உணவுப்பாதுகாப்பு (bio safety) தகவல் GEAC வலைதளத்தில் பதிவேற்ற வேண்டும். ஆனால், இதுவரை மரபணு மாற்றப்பட்ட கடுகுக்கு உயிர்பாதுகாப்பு தகவல் பதிவேற்றம் செய்யப்படவில்லை. சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மரபணு மதிப்பீட்டுக்குழு (genetic engineering appraisal committee) மரபணு ஒப்புதல் குழுவிலிருந்து (genetic engineering approval committee) பெயர் மாற்றப்பட்டுள்ளது. அதனால் மரபணு மாற்றப்பட்ட கடுகுக்கு அனுமதி அளிக்க மதிப்பீட்டுக்குழுவுக்கு தகுதியில்லை.

கடுகு
கடுகு
News18

மரபணு மதிப்பீட்டுக்குழு மரபணு மாற்றப்பட்ட கடுகு குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அதே போல் பயிர் மேம்பாட்டளரும் சில ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். ஆனால், பயிர்மேம்பாட்டாளருக்கு ஆய்வுகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பாகத் தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அறச்சலூர் செல்வம் பேசுகையில், ``பி.டி வகை விதைகளுக்கு சோதனை முறைகளை இந்திய அரசாங்கம் நெறிப்படுத்தியது. ஆனால், களைக்கொல்லி மரபணு புகுத்தப்பட்ட விதைகளுக்கு இதுவரை சோதனை முறைகள் வகுக்கப்படவில்லை. இதை மத்திய அரசு திட்டமிட்டே மறைத்துள்ளது. மரபணு மாற்றப்பட்ட கடுகு பேயர் நிறுவனத்தின் காப்புரிமை பெற்றது. இதனால் பின்னர் மரபணு கடுகு மிது பேயர் நிறுவனம் உரிமம் கொண்டாடலாம். இதுவரை நடத்தப்பட்ட பரிசோதனை முடிவுகளின் புள்ளி விவரங்களில் அரசு பித்தலாட்டம் செய்கிறது. விவசாயம், சுகாதாரம் ஆகியவை மாநில உரிமைகள் இவற்றில் மத்தியஅரசு தலையிடுவது தவறு" என்றார்.

 அறச்சலூர் செல்வம்
அறச்சலூர் செல்வம்

மரபணு மாற்று விதைகளுக்கு எதிரான கூட்டணி ஆய்வறிக்கை வெளியிட்ட பின்னர் மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் விளக்கம் தெரிவித்துள்ளது. மரபணு மாற்றுக் கடுகுக்கான சுற்றுச்சூழல் வெளியீடு Environmental risk assesment guidelines கூறுவது போல் அனைத்து பங்குதாரர்களின் கருத்துகள் கேட்ட பின்னரே வெளியிட்டுள்ளோம். சுற்றுச்சூழல் வெளியீட்டிற்கான நிபந்தனை ஒப்பீடு, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் அனுமதிக்கு உட்பட்டது என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் விளக்கம் கொடுத்துள்ளது.