பசுமைப் புரட்சியின் தாக்கத்தால், ரசாயன உரமும், பூச்சிக்கொல்லியும் விவசாயிகளால் அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தப்பட்டபோது, விவசாயிகளையும், விவசாயத்தையும் காப்பாற்றச் சரியான நேரத்தில் வெளியானதுதான் ‘பசுமை விகடன்’. நினைவில் வாழும் ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வார் கருத்துகளை முழுமையாக விவசாயிகள் மத்தியில் சென்றடையச் செய்தது ‘பசுமை விகடன்’தான். அதேபோல ‘ஜீரோபட்ஜெட் பிதாமகர்’ சுபாஷ் பாலேக்கரைத் தமிழக விவசாயிகளுக்கு அறிமுகம் செய்து வைத்ததும் பசுமை விகடன்தான்.

‘பசிக்கு மீன் கொடுப்பதை விட மீன் பிடிக்கக் கற்றுக் கொடுப்பதுதான் சிறந்தது’ என்பார்கள். விவசாயிகளுக்கு இயற்கை வேளாண்மையை வெறும் வார்த்தையாக மட்டுமல்லாமல், நூற்றுக்கணக்கான களப்பயிற்சிகள் நடத்தி, இயற்கை விவசாயத்தைக் கற்றுக் கொடுத்து வருகிறது பசுமை விகடன். நம்மாழ்வார் தலைமையில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கொடுத்த களப்பயிற்சி மிக முக்கியமானது. இன்றைக்குத் தமிழகத்தில் இருக்கும் முன்னோடி இயற்கை விவசாயிகள் பலர், அந்தப் பயிற்சிகள் மூலமாகப் பட்டை தீட்டப்பட்டவர்கள்.

‘இனியெல்லாம் இயற்கையே...’ என்ற அந்தக் களப்பயிற்சிகளில் நம்மாழ்வார் நேரடியாக மண்வெட்டி எடுத்து வேலை செய்து கற்றுக்கொடுத்தார். மண்டபம் அல்லது அறைகளில் மட்டுமே அதுவரை நடந்து வந்த விவசாயப் பயிற்சிகளைக் களத்திற்குக் கொண்டு வந்தது பசுமை விகடன்தான். விகடன் தேரில் ஏறி ஊரெங்கும் இயற்கை விவசாயத்தைப் பரப்பினார் நம்மாழ்வார்.

அந்தச் செயல் ஏற்படுத்திய தாக்கம் மிக அதிகம். பசுமை விகடனில் அவர் எழுதிய தொடர்கள், படித்த இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. தமிழக இயற்கை விவசாய வரலாறு எழுதப்பட்டால் அதில் பசுமை விகடனுக்கு முன், பசுமை விகடனுக்குப் பின் என்றுதான் எழுத முடியும். அந்தளவுக்கு இயற்கை விவசாயக் கொடி உச்சத்தில் பறக்க ஊன்றுகோலாக இருந்து வருகிறது பசுமை விகடன்.

‘2 ஏக்கர் நிலத்தில் எந்தப் பயிரை வேண்டுமானாலும் சாகுபடி செய்யட்டும். இயற்கை விவசாயத்தை விட ரசாயன விவசாயத்தில் மகசூல் அதிகம் எடுத்தால், ‘வேளாண்மைச் செம்மல்’ பட்டத்துடன் ஒரு லட்சம் பரிசு தருகிறேன்’ எனப் பசுமை விகடனில் நான் அறிவித்தேன். அந்தச் சவாலை இதுவரை யாரும் ஏற்க முன்வரவில்லை. விவசாயிகள் மட்டுமில்லாமல், பட்டதாரிகள், மென்பொருள் துறையில் பணியாற்றியவர்கள் மத்தியில் இயற்கை விவசாயத்திற்கான மதிப்பை உயர்த்தியது பசுமை விகடன். பணியிலிருந்து ஓய்வுபெற்றவர்கள், பிற தொழில்களில் ஈடுபட்டு வந்தவர்கள் எனப் பல தரப்பினரும் இயற்கை விவசாயம் பக்கம் திரும்ப வைத்ததுதான் மிகப்பெரிய சாதனை. 2007-ம் ஆண்டு முதல் பசுமை விகடன் எடுத்த முயற்சிதான், இன்றைக்குத் தமிழகமெங்கும் ஊடுருவி இருக்கிறது. நீர் மேலாண்மை, மரம் வளர்ப்பு, காடுகள் உருவாக்கம் எனச் சுற்றுச்சூழல் மேம்பாட்டிலும் தொடர்ந்து பங்களிப்புச் செய்து வருகிறது. இந்தியா அளவில் இயற்கை விவசாயத்துக்காக அர்ப்பணிப்புடன் வெளிவரும் ஒரே இதழ் பசுமை விகடன் மட்டும்தான்.