பள்ளிக்கூடம் தொடங்கிப் பல்கலைக்கழகங்கள் வரை இன்றைக்கு ‘பஞ்சகவ்யா’ என்கிற வார்த்தை வலம் வருகிறது. ‘‘சாணமும் மூத்திரமும் பயன்படுத்தும் சந்நியாசிகள் வேளாண்மை எங்களுக்குத் தேவையில்லை’’ என்று ஆரம்பத்தில் பஞ்சகவ்யாவைப் புறக்கணித்த வேளாண்மைப் பல்கலைக்கழகங்கள்கூட, இன்று பஞ்சகவ்யாவை ஏற்றுக்கொண்டுள்ளன. பஞ்சகவ்யா மூலம் பணக்காரர்களானவர்கள், மாடி வீடு கட்டியவர்கள், பிள்ளைகளை உயர்கல்வி படிக்க வைத்தவர்கள், கார் வாங்கியவர்கள்... என வெற்றி விவசாயிகளின் பட்டியல் நீளமானது. இந்தச் சாதனைகளுக்கு அடித்தளமிட்டது பசுமை விகடன் இதழ்.

இயற்கை வேளாண்மை விஞ்ஞானி நம்மாழ்வார், தம் இறுதிக் காலம் வரை பஞ்சகவ்யா பற்றிப் பேசி வந்தார். அவருக்குப் பிறகு, அந்த அறப்பணியைத் தொடர்ந்து கொண்டுள்ளது பசுமை விகடன். ஒவ்வோர் இதழிலும் பஞ்சகவயா பற்றிய தகவல் இல்லாமல் இருக்காது. ஏதாவது ஓர் இடத்தில் பஞ்சகவ்யாவின் பயன்பாடு பதிவு செய்யப்பட்டிருக்கும்.

2016-ம் ஆண்டுப் பஞ்சகவ்யா பற்றிய தொடர் கட்டுரை வெளிவந்த பிறகு, உலகம் முழுக்கப் பஞ்சகவ்யா குறித்த தகவல் சென்று சேர்ந்துவிட்டது. அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்கூட, அமெரிக்காவிலிருந்து ஒரு பெண்மணி ‘ஜெர்ஸி மாட்டுச் சாணத்தில் பஞ்சகவ்யா தயாரிக்கலாமா?’ என்று கேட்டிருந்தார். மலேசியா நாட்டில் உள்ள பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தினர் பஞ்சகவ்யாவை அந்நாட்டில் பரப்பி வருகிறார்கள். பல ஊடகங்களில் பஞ்சகவ்யா பற்றிய தகவல்கள் வெளிவந்தாலும், பசுமை விகடன் இதழில் வெளிவந்த பிறகுதான், அதன் இலக்கு நிறைவேறியுள்ளது. ‘பஞ்சகவ்யா இருக்கும் இடத்தில் பசுமை விகடன் இருக்கும். பசுமை விகடன் இருக்கும் இடத்தில் பஞ்சகவ்யா இருக்கும்’ என்ற நிலை உருவாகியுள்ளது.

பஞ்சகவ்யா பயன்படுத்தினால், நல்ல விளைச்சல் கிடைக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. பஞ்சகவ்யாவைத் தயார் செய்து மற்ற விவசாயிகளுக்கு விற்பனை செய்வதன் மூலம், மாதம் லட்சக்கணக்கில் வருமானம் எடுக்கும் விவசாயிகளும் இங்கு உண்டு. அரோமாங்கிற இயல்பான மணம் ஒவ்வொரு விளைபொருளுக்கும் உண்டு. ரசாயனத்தில் விளைந்த காய்கறி, கீரைகளைக் கழுவி சமையல் செய்யும்போது, அந்த மணம் போய்விடும். ஆனால், பஞ்சகவ்யா தெளித்து விளைவித்த காய்கறிகள் சமைத்தப் பிறகும் அந்த இயல்பான மணம் இருக்கும். இதனால்தான், நம் விவசாயிகள் தொடர்ந்து இதைப் பயன்படுத்தி வருகிறார்கள்.

ஆரம்பத்தில் பயிர்களுக்கு மட்டுமே பயன்படுத்தினோம். மீன், கோழி, ஆடு என்று கால்நடைகளுக்கும் பஞ்சகவ்யா பயன்பாடு நீள்கின்றன. இந்தக் கண்டுபிடிப்பைப் பல்கலைக்கழகம் வெளியிடவில்லை. பசுமை விகடன் மூலம் பயன்பெற்ற விவசாயிகள்தாம் அனுபவ ஆராய்ச்சி மூலம் ஆதாரத்துடன் சொல்லிவருகிறார்கள். இயற்கை வேளாண்மை விஞ்ஞானி நம்மாழ்வார், ‘வயல்வெளியே பல்கலைக்கழகம்; விவசாயிகளே பேராசிரியர்கள்’ என்று சொல்லியதைச் செயல்படுத்தி வருகிறது பசுமை விகடன்.