Published:Updated:

`காவல்துறை அறிவிப்பை வரவேற்கிறோம்; ஆனால்..'-பனைத் தொழிலாளர்கள் குறித்து செயற்பாட்டாளர் சொல்வது என்ன?

பனை மரங்கள்
News
பனை மரங்கள்

``காவல்துறை தலைமை இயக்குநரின் அறிவிப்பு வெளிவந்த பின்னரும் கூட, காவல்துறை அதிகாரிகள் ஊரின் உள்ளே வந்து `நீங்க கள்ளு இறக்கினால் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைப்போம்' என்கிறார்கள். உணவாகவும் மருந்தாகவும் இருக்கும் கள்ளை இறக்குவது சிறையிலடைக்கக்கூடிய பெரிய குற்றமா?"

"இயற்கை பானமான பதனீரை இறக்குபவர்கள், பனை வெல்லம் தயாரிப்பவர்கள் மற்றும் இது சார்ந்த பணிகளை மேற்கொள்ளும் தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதைக் கைவிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" எனத் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் மூலமாக அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் மாநகர காவல் ஆணையர்களுக்கு அண்மையில் சுற்றறிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு பனை சார்ந்த தொழிலாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த அறிவிப்பு பற்றி பனையேறுபவர்களின் கருத்துகளையும், அவர்களின் இன்னல்கள் என்னவாக இருக்கின்றன என்பதைப் பற்றியும் அறிந்துகொள்ள பனை சார்ந்த தொழிலை நம்பிக்கையுடன் செய்து வரும் சமூகச் செயற்பாட்டாளர் பாண்டியன் என்பவரைத் தொடர்புகொண்டு பேசினோம்.

காவல்துறை சுற்றறிக்கை
காவல்துறை சுற்றறிக்கை

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

``கடந்த வருடம் வரை பனைத் தொழிலாளர்கள் மீது பொய் வழக்குகள் பதிந்து சிறையில் தள்ளுவதுதான் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருந்தன. இதுதொடர்பாக, போராட்ட வடிவத்தில் அரசுக்கு அழுத்தம் கொடுத்து வந்தோம். பனைத் தொழிலாளர்கள் மீது பொய் வழக்கு புனையக் கூடாது. அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது எனக் கூறி, அதையும் விவசாயத் தொழிலாகக் குறிப்பிட்டிருப்பது நல்ல விஷயம். இது மட்டுமே தீர்வாக இருக்குமா என்றால் நிச்சயமாக இல்லை. இது ஒரு நகர்வு அவ்வளவுதான். கள்ளு தடை நீக்கம் மட்டும்தான் இதற்கெல்லாம் முழு தீர்வாக இருக்கும். இப்போது அறிவித்துள்ளதைப் போன்றதான அறிவிப்புகள் எல்லாம் புதிதாக வேறொரு அதிகாரி வரும் வரைதான். வேறொரு அதிகாரி அந்தப் பொறுப்புக்கு வரும்போது இதையே வேறு மாதிரி சொல்வார்கள். அன்று பனைத் தொழிலாளர்கள் மீது மீண்டும் அடக்குமுறைகள் தொடரும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

மதுவிலக்கு அமலாக்கச் சட்டம் சொல்வது என்னவென்றால், `ஒருவர் கள்ளு விற்பனை செய்ய வேண்டும் என்பது அவசியமில்லை. கள் இறக்குவதற்கான சாதனங்களை (கத்தி, கயிறு, ஏணி, பானை) வைத்திருந்தாலே கைது பண்ணலாம்' என்கிறது. அப்படி கைது செய்து அழைத்துச் செல்லப்படுபவர்கள், ``நான் கள்ளு இறக்கவில்லை" என நிரூபிக்க வேண்டும். அதன் பின்னர்தான் அவர்களை போலீஸ் வெளியில் விடுவார்கள். ஆனால், இதற்கிடையில் கள்ளு இறக்கும் தொழிலாளியை போலீஸார் அழைத்துச் செல்லும் விதமே... பனையேறி தொழில் செய்வோரை அத்தொழிலை மேலும் செய்யவிடாமல் செய்துவிடுகிறது. அப்படிப் பார்க்கையில் இப்போது வந்திருக்கும் அறிவிப்பு வரவேற்கத்தக்கதுதான்.

சமூகச் செயற்பாட்டாளர் பாண்டியன்
சமூகச் செயற்பாட்டாளர் பாண்டியன்

ஆனால், எங்களின் முழுமையான கோரிக்கை... `கள்ளு தடையை நீக்க வேண்டும்' என்பதுதான். அதுதான் எங்களுக்கு சரியான தீர்வாகவும், பொருளாதாரத்துக்கு சிறந்த வழியாகவும் அமையும். பனையில் இருந்து கிடைக்கும் மற்ற எல்லா பொருள்களுமே... எங்களது சுதந்திரத்தைத் தடை செய்துவிட்டு, வாழ்வதற்கு மட்டும் வாய்ப்பு கொடுப்பதைப் போலத்தான்.

கள்ளு என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் உணவின் ஒரு பகுதியாகவும், மருந்தாகவும் வரையறை செய்யப்பட்டு இருக்கும் போது... அதை இறக்கும் ஒரு தொழிலாளி மீது கள்ளச்சாராயம், விஷச்சாராயம் மற்றும் விஷக்கள்ளு வழக்குகளைப் பதிவு செய்வதுதான் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காவல்துறை தலைமை இயக்குநரின் அறிவிப்பு வெளிவந்த பின்னரும்கூட, காவல்துறை அதிகாரிகள் ஊரின் உள்ளே வந்து `நீங்க கள்ளு இறக்கினால் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைப்போம்' என்கிறார்கள். உணவாகவும் மருந்தாகவும் இருக்கும் கள்ளை இறக்குவது சிறையிலடைக்கக்கூடிய பெரிய குற்றமா... எனவே, கள்ளு தடையை நீக்க வேண்டும் என்றுதான் அரசிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். கள் இறக்கும் ஒருவரை போலீஸார் கைது செய்கின்றனர் என்றால் அதற்கான ஒரு வழிமுறை உள்ளது. சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து தலைவர், வி.ஏ.ஓ முன்னிலையில்... கைப்பற்றப்பட்ட கள்ளு சாம்பிள் எடுத்து ஒருமாதிரியை ஆய்வகத்துக்கு அனுப்பிவிட்டு, மற்றொரு மாதிரியை காவல்துறை எடுத்துச் செல்ல வேண்டும்.

பனை மரங்கள்
பனை மரங்கள்

ஆய்வதற்கு அனுப்பப்பட்ட மாதிரி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், `அது விஷக்கள்ளுதான்' என உறுதி செய்யப்பட்டாலே பனைத் தொழிலாளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், இங்குள்ள காவல் அதிகாரிகள் இதை எதையுமே செய்வது இல்லை. இவர்களாகவே வந்து பிடிச்சுக்கிட்டு போயிட்டு எழுதுறது தான் கேஸ். எனவே, `பனைத் தொழிலாளர்கள் மீது பொய் வழக்கு பதியக் கூடாது. கள்ளு இறக்குவதற்கு உண்டான தடையை நீக்க வேண்டும்' என்று தலைமுறை தலைமுறையாகக் கோரிக்கை வைத்து வருகிறோம். காவல்துறையின் இந்த அறிவிப்பு வரவேற்கக் கூடியதே என்றாலும், கள்ளு இறக்குவற்கான தடையை நீக்குவது மட்டுமே எங்களுக்கு முழுமையான தீர்வாக அமையும்" என்றார்.