Published:Updated:

“மலை இருக்கணும், காடு இருக்கணும், தண்ணி இருக்கணும்!”

நேரலையில் நடிகர் கிஷோர்
பிரீமியம் ஸ்டோரி
நேரலையில் நடிகர் கிஷோர்

நடிகர் கிஷோரின் ஊரடங்கு விவசாய அனுபவம்!

“மலை இருக்கணும், காடு இருக்கணும், தண்ணி இருக்கணும்!”

நடிகர் கிஷோரின் ஊரடங்கு விவசாய அனுபவம்!

Published:Updated:
நேரலையில் நடிகர் கிஷோர்
பிரீமியம் ஸ்டோரி
நேரலையில் நடிகர் கிஷோர்

நேரலை

திரைப்பட நடிகர்களில் ஆர்வமாகவும் அர்ப்பணிப்போடும் இயற்கை விவசாயம் செய்துவருபவர்களில் நடிகர் கிஷோர் குறிப்பிடத்தக்கவர்.

பெங்களூரிலிருந்து 35 கி.மீ. தொலைவில் உள்ள கரியப்பன்தொட்டி என்ற ஊரில் 8 ஏக்கரில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். மா, எலுமிச்சை, தென்னை, கொய்யா எனப் பலவகைப் பயிர்களை நான்கடுக்கு, ஐந்தடுக்கு முறையில் வளர்த்து வருகிறார். விவசாயத்தோடு நாட்டு மாடுகள், கோழிகள் என ஓர் உயிர்ப்பான விவசாயத்தை முன்னெடுத்து வருகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நடிகர் கிஷோர்
நடிகர் கிஷோர்

மடிக்கேரி மாடலில் பண்ணைக்குள் குடில் ஒன்றையும் அமைத்திருக்கிறார். இது பார்ப்பதற்கே கண்ணைக் கவரும் விதத்திலும் நம் பாரம்பர்யம் சிதைவுறா வடிவத்திலும் இருக்கிறது. தண்ணீர்ச் சிக்கனத்துக்காகச் சொட்டு நீர்ப் பாசனம் அமைத்துப் பழ மரங்களுக்குப் பாசனம் செய்து வருகிறார். பண்ணை நிலத்தைச் சுற்றிலும் மலைகள் இருப்பதால் அதிலிருந்து மழை பெய்யும்போது வடிந்து வரும் நீரைச் சேகரிப்பதற்காகப் பெரிய பள்ளங்கள் எடுத்து அதிலிருந்து நீர் வெளியேறாதவாறு சேகரிக்கப்படுகிறது. மலையிலிருந்து வரும் யானை போன்ற விலங்குகள், பறவைகள் பண்ணையில் சேகரிக்கப்பட்டிருக்கும் நீரைக் குடித்துவிட்டு உணவுக்கு மீண்டும் காட்டுக்குச் சென்று விடுகின்றன. இயற்கை விவசாயம் என்பதே அனைத்து உயிர்களுக்கும் வாழ்வளிப்பதே என்பதை உணர்ந்து அதற்கான தேவைகளையும் இதில் சேர்த்துள்ளார். இந்நிலையில் கடந்த 14-ம் தேதி, பசுமை விகடன் ஏற்பாடு செய்திருந்த இணைய வழி, நேரலையில் தனது அனுபவத்தை வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

‘‘எனக்குச் சொந்த ஊர் கர்நாடக மாநிலம், ராம் நகர் மாவட்டம், மாகடி என்கிற ஊர். அப்பா கல்லூரி முதல்வரா இருந்தாலும் எங்களோடது விவசாயக் குடும்பம்தான். சின்ன வயசிலேயே வயல்களிலும் தோட்டங்களிலும் ஓடித் திரிந்ததும், கிராமத்து உணவுகளை ரசித்துச் சாப்பிட்டதும்தான் இன்றுவரை விவசாயத்தை நேசிக்கிறதுக்கு அடிப்படையா இருக்கு. என்னோட அம்மா வழி தாத்தாவின் மூலமா விவசாயத்தை ஓரளவு தெரிஞ்சுக்கிட்டேன். மசானபு ஃபுகோகா, நம்மாழ்வார், சுபாஷ் பாலேக்கரெல்லாம் விவசாயத்தை எனக்குள் இன்னும் ஆழமா பதியம் போட்டாங்க. இயற்கை விவசாயம் பற்றிய யோசனை மெதுவாகத்தான் வந்தது. முதலில் விவசாயம் செய்து இயற்கையுடன் வாழணும்னு நினைச்சேன். எப்பவுமே காடு, மலைனு சுத்திட்டிருக்கும் ஆள் நான். என் தாத்தா விவசாயம்தான் செய்துகிட்டிருந்தார். எனக்கு விடுமுறை நாள்கள்ல தாத்தா தோட்டத்துக்குப் போயிடுவேன். அப்போ இருந்த தொடர்பு இப்போ வரைக்கும் இருக்குது. பெரிய ஆளானதுக்கப்புறமா எனக்கான விவசாய நிலத்தைத் தேட ஆரம்பிச்சேன். மலை இருக்கணும், காடு இருக்கணும், தண்ணி இருக்கணும். அந்த இடத்துல நான் இருக்கணும்னு முடிவு பண்ணி இந்த இடத்தை வாங்குனேன்.

நண்பர் மூலமாகத்தான் இங்க இடம் வாங்குனேன். முதல் 2 வருஷத்துக்கு இங்க எதுவும் செய்ய முடியலை. சும்மா வந்துட்டு போவேன். அப்புறமா கொஞ்சம் கொஞ்சமா விவசாயத்தைப் படிச்சு. உணர்ந்துதான் தோட்டத்தை அமைக்க முடிஞ்சது. அப்புறமா ‘நம்ம தாத்தா, பாட்டியெல்லாம் வாழ்ந்த தற்சார்பு இயற்கை வாழ்க்கையை ஏன் வாழக்கூடாது’னு தோணிச்சு. அதுக்கப்புறமா தற்சார்பு பக்கமா திரும்பிட்டேன். இப்படித்தான் படிப்படியா இயற்கை விவசாயத்துக்கு வந்தேன்.

என் வீட்டைக்கூடத் தற்சார்பு முறையிலதான் அமைச்சிருக்கேன். பாரம்பர்ய முறைப்படி வீடு சிமென்ட், செங்கல் பயன்படுத்தாம, பழைய பாரம்பர்ய முறைப்படி மண், கல்லை வெச்சு வீட்டுக்குள் சூரியஒளி நேரடியா விழுற மாதிரி கட்டியிருக்கேன். ஏற்கெனவே பயன்படுத்தின பழையக் கதவுகள், ஜன்னல்களையே வாங்கிப் பொருத்தியிருக்கேன். கிட்டத்தட்ட மங்களூர் பகுதியில இருக்கிற வீடுகளைப் போலக் கட்டியிருக்கேன். குடகு மலைப் பகுதியில பழங்குடிகள் அமைச்சிருக்கிற மாதிரியான மடிக்கேரி வகை குடிலையும் தனியாகக் கட்டியிருக்கேன். பக்கத்துல ஒரு கல்குவாரி இருக்கு. அதுல இருந்து அடிக்கடி வெடி வைப்பதால் அதிர்வுகள் ஏற்பட்டுக்கிட்டே இருக்கும்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அதனால் என் தோட்டத்துல இருக்குற மரக்கன்றுகளின் வேர்கள் அதிர்ந்து மரங்களின் வளர்ச்சி கம்மியாத்தான் இருக்கும். என் நிலம் புல்லுகூட வளராத அளவுக்குத்தான் முதலில் இருந்தது. அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மாறியது. ஒவ்வொரு வேலைக்கும் நானும் என் குடும்பமும் தோட்டத்துல இருப்போம். அப்படி இல்லைனா நடக்குற வேலைகள் தவறா நடந்துடும். இயக்குநர் வெற்றிமாறன் விவசாயத்தை ஆரம்பிச்சுட்டார். நண்பர் சமுத்திரகனி தோட்டத்தைப் பார்க்க வர்றதா சொல்லிருக்கார். என் தோட்டம் காடு மாதிரி உருவாக்கணும்ங்குறதுதான் என்னோட ஆசை. அதைத்தான் கொஞ்சம் கொஞ்சமா அமைச்சுக்கிட்டிருக்கேன். இப்போ பழ மரங்கள், கடலை, ராகினு பயிர் செய்திருக்கேன். என்னோட நிலம் சரிவுப் பகுதில இருக்கிறதால, தண்ணியை நிலத்துல சேகரிச்சு வைக்கிறது சிரமம். அதனால, மலையிலிருந்து இறங்குற தண்ணியைச் சேகரிக்க, நிலத்தைச் சுத்தியும் மழைநீர்ச் சேகரிப்பு வாய்க்கால் அமைச்சு இருக்கேன். மலையிலிருந்து இறங்குற தண்ணி இந்த வாய்க்கால்ல சேகரமாயிடுது.

இதைத் தவிர மூணு தடுப்பணைகளையும் கட்டியிருக்கேன். இப்போ ரெண்டு தடுப்பணைகள்ல தண்ணி நிறைஞ்சி இருக்கு. இது மூலமா நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திருக்கு. நீர்மட்டம் உயர்ந்ததால ஆழ்துளைக் கிணறு அமைச்சு, இறவைப் பயிர்களுக்கும் பழ மரங்களுக்கும் சொட்டு நீர் மூலமாகவும் நேரடியாகவும் பாசனம் செஞ்சிட்டு வர்றேன். இந்தத் தடுப்பணைக்கு அக்கரையில் சமூகக்காடுகள் இருக்கு. அங்க வர்ற யானைகள், ஆடு, மாடுகளுக்குக் குடிதண்ணீராவும் இது பயன்படுது. இந்தத் தடுப்பணைகள்ல கிடைக்கிற தண்ணிய வெச்சு பருவக்காலங்கள்ல நெல் போடலாம்னு திட்டமிட்டிருக்கேன்’’ என்றவர், “இப்போ ஊரடங்கு காலம்ங்குறதால தோட்டத்துலயே இருக்கேன். இந்த நேரத்துல காய்கறிகளைப் பயிர் செய்யலாம்னு தோணுச்சு. ஆனா கையில விதை இல்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அப்புறமா நான் வாங்குன தக்காளி மாதிரியான காய்கறிகள்ல இருந்து விதைகளைச் சேகரிச்சேன். அதை நாற்றுவிட்டு செடியைத் தயார் செஞ்சேன். நான் விளைபொருள்களை அதிகமான விலைக்கு விற்பனை செய்றதுல்ல. விற்பனை மட்டும் என்னோட நோக்கமல்ல. வாங்குற மக்களும் சந்தோஷமா இருக்கணும். வாங்குறவங்களுக்கும் ஏன் ஆர்கானிக் காய்கறிகளை வாங்குறோம்னு தெரியப்படுத்துறோம்னா உணவு உற்பத்திங்குறது தொழிலா இல்லாமா, தற்சார்பா மாறணும். இதை மாத்துறதுக்கு நம்ம தாத்தா காலத்துக்குப் போனாலே போதும். ஒரு மனுஷன் தற்சார்பு வாழ்க்கைதான் வாழணும். அதே மாதிரி ரசாயன உரங்களை அள்ளிப்போட்டு நிலத்தைப் பாழாக்கி வெச்சிருக்கோம். அதைச் சரி செய்யணும்னுதான் என்னோட பங்கைச் சரியா செய்திருக்கேன். ஒரு மனிதனின் தேவை, அவனுக்கான வாழ்க்கை, அதற்கான நெறிகள் என எல்லாவற்றையும் கொடுத்தது விவசாயம்தான்.

நேரலையில் நடிகர் கிஷோர்
நேரலையில் நடிகர் கிஷோர்

ஆனா, இன்னைக்கு வாழும் நவீன வாழ்க்கை, தேவைக்கு அப்பாற்பட்டது. இதை உணர்ந்துதான், ‘இந்த விவசாய வாழ்க்கையை வாழ வேண்டும். விவசாயத்தில் நீடித்து நிலைக்கணும் அப்படிங்குறதுக்காகவே விவசாயம் செய்துகிட்டிருக்கேன்” என்றவர், நேரலை மூலமாக வாசகர்களுக்குத் தோட்டத்தைச் சுற்றிக் காட்டினார். நிறைவாகப் பேசிய நடிகர் கிஷோர்,

“நம்மை ஜட்ஜ் பண்ணாத ஒன்று இயற்கைதான். அந்த இயற்கையிடம் நெருங்க நெருங்க இன்னும் கற்றுக்கொண்டே போகலாம். அப்படிகத்தான் என் பண்ணையில ஒவ்வொன்றையும் ஏன், எதற்குனு கற்றுக்கொண்டே இருக்கிறேன். என் பண்ணையைப் பார்வையிடணும்னு நிறைய பேரு கேக்கறாங்க. இந்த கொரோனா முடியட்டும், அதன்பிறகு வந்து பார்க்கலாம். இந்தப் பண்ணையைப் பார்த்துட்டு எவ்வவளவு கத்துக்க முடியும்னு தெரியல. ஏன்னா நானே இன்னும் கற்றுக் கொண்டேதான் இருக்கிறேன்” என்று முடித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism