Published:Updated:

வீட்டைச் சுற்றி இயற்கை விவசாயம்... தேவயானி - ராஜகுமாரனின் லாக்டௌன் பொழுதுகள்!

தோட்டத்தில் மகள்களுடன் தேவயானி
News
தோட்டத்தில் மகள்களுடன் தேவயானி

"இப்ப அஞ்சு ஏக்கரில் விவசாய வேலைகளைச் செய்றோம். அந்தியூர் அருகிலுள்ள பர்கூர் மலையிலயும் விவசாய வேலைகளை ஆரம்பிக்கப்போறோம்."

'காதல் கோட்டை', ‘சூர்யவம்சம்’ உட்பட ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்த தேவயானி, 1990-களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இயங்கியவர். தேவயானி நடித்த 'நீ வருவாய் என' படத்தை இயக்கியவர் இயக்குநர் ராஜகுமாரன். இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். தற்போது சென்னையில் வசிக்கிறார்கள்.
தோட்டத்தில் மகள்களுடன் தேவயானி
தோட்டத்தில் மகள்களுடன் தேவயானி

சினிமா துறையில் இயங்கினாலும், ராஜகுமாரனும் தேவயானியும் இயற்கை விவசாயத்தின்மீது அதிக ஆர்வம் கொண்டவர்கள். ஈரோடு மாவட்டத்தில் ராஜகுமாரனின் சொந்த ஊருக்கு அருகேயுள்ள எண்ணமங்கலம் கிராமத்தில் இயற்கை விவசாயம் செய்துவருகிறார்கள். வழக்கமான காலங்களில் மாதம்தோறும் ஓரிரு முறையாவது அந்த ஊருக்குச் செல்பவர்கள், தற்போதைய லாக்டெளன் காலத்தில் மூன்று மாதங்களாக அங்குதான் தங்கியுள்ளனர். இதனால் விவசாய வேலைகளைக் கூடுதல் உற்சாகத்துடன் கவனித்துவருகிறர்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அந்தியூரிலிருந்து எட்டுக் கிலோமீட்டர் தொலைவிலுள்ள எண்ணமங்கலம் கிராமத்திலுள்ளது இவர்களின் விவசாய நிலம். அந்தத் தோட்டத்திலேயே வீடும் உள்ளது. ஒரு காலைப் பொழுதில் தோட்ட வேலைகளை முடித்துவிட்டு வந்தவர்களிடம் பேசினோம்.

தோட்டத்தில் மகள்களுடன் தேவயானி
தோட்டத்தில் மகள்களுடன் தேவயானி

“விவசாயம் செஞ்சு பெரிசா லாபம் பார்க்கிறதெல்லாம் எங்க நோக்கம் கிடையாது. சொந்த பந்தங்களின் அன்பு எங்க குழந்தைகளுக்கு முழுமையா கிடைக்கணும். அதேநேரம் கிராமப் பாரம்பர்யத்தையும் தொடரணும். இதுக்காகவே இந்த இடத்துல ஆசையா வீடு கட்டினோம். வீட்டைச் சுத்தியிருக்கிற நிலத்தைப் பசுமையா வெச்சுக்க நினைக்கறோம். அதுக்காக ரசாயன உரங்கள் போடாம இயற்கை முறையில விவசாயம் செய்றோம். இதனால சில விவசாயிகளுக்கும் வேலை கொடுக்க முடியுது. லாக்டெளன் அறிவிப்புக்கு முன்பே இந்த வீட்டுக்கு வந்துட்டோம். கடந்த மூணு மாசமா இந்தக் கிராமத்துலதான் தங்கியிருக்கோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த இயற்கைச் சூழலும் அமைதியான வாழ்க்கை முறையும் எப்போதும் மறக்க முடியாத நிறைவான அனுபவத்தைக் கொடுத்திருக்கு. என் கணவர்தான் விவசாய வேலைகளை முழுமையா கவனிச்சுக்கிறார். செடிகளுக்குத் தண்ணி விடுறது, பூ பறிக்கிறது, தோட்டத்தைப் பார்வையிடுறதுனு மேலோட்டமான வேலைகளை மட்டும்தான் நான் செய்வேன். சொல்லப்போனா, என் கணவரின் விவசாய வேலைகளுக்கு உறுதுணையா மட்டும்தான் இருக்கேன். அதனால, இங்க நடக்கிற விவசாய வேலைகள் பத்தி என் கணவர் பேசுறதுதான் சரியா இருக்கும்.” - தமிழில் சரளமாகப் பேசும் தேவயானியின் முகத்தில் விரிகிறது அழகான புன்னகை.

தேவயானி - ராஜகுமாரன்
தேவயானி - ராஜகுமாரன்

ராஜகுமாரன் உற்சாகமாகப் பேசுகிறார்.

“அந்தியூரிலிருந்து ரெண்டு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் சந்தியாபாளையம் கிராமம்தான் என் சொந்த ஊர். விவசாயக் குடும்பம். குடும்ப நிலம் ரெண்டரை ஏக்கர் இருந்துச்சு. அப்பாவுடன் பிறந்த அஞ்சு சகோதரர்களும் ஆளுக்கு அரை ஏக்கர்னு பிரிச்சு விவசாய வேலைகளை இணைஞ்சு செய்தாங்க. தக்காளி, கத்திரினு காய்கறிகள் முதல் சிறுதானியங்கள்வரை மழைக்கு ஏற்ப பயிர்களைத் தொடர்ந்து பயிரிடுவாங்க. சின்ன வயசுல ஏழு வருஷம் விசைத்தறி தொழில் செஞ்சேன். சொல்லிக்கிற அளவுக்கு அப்போ விவசாய வேலைகள்ல நான் கவனம் செலுத்தலை. இந்த நிலையில சினிமா ஆர்வத்துல சென்னைக்குப் போயிட்டேன்.

கல்யாணத்துக்குப் பிறகு நானும் என் மனைவியும் அவ்வப்போது என் சொந்த ஊருக்கு வருவோம். அங்கு எங்க வீட்டில் தங்கினா, உள்ளூர் முதல் திருப்பூர், கோயம்புத்தூர்வரை சுற்றுவட்டார மாவட்டங்கள்ல இருந்தெல்லாம் நிறைய ரசிகர்கள் என் மனைவியைப் பார்க்க வருவாங்க. இதனால அக்கம்பக்கத்து வீட்டுக்காரங்க சிரமப்படுவாங்க. எனவே, என் சொந்த ஊருக்கு நாங்க வரும்போதெல்லாம் கோபிச்செட்டிப்பாளையத்துல ஏதாவதொரு ஹோட்டல்லதான் தங்குவோம். ‘நாம சென்னையில வசிச்சாலும் குழந்தைகளுக்குச் சொந்தக்காரங்களோட அன்பு கிடைக்கணும். அதுக்காகத்தானே அடிக்கடி உங்க சொந்த ஊருக்கு வர்றோம். ஆனா, இப்படி ஹோட்டல்ல தங்கியிருந்தா குழந்தைங்களால சொந்தக்காரங்களோடு எப்படி சந்தோஷமா பழக முடியும்?’னு என் மனைவி அடிக்கடி கேட்பாங்க.

ராஜகுமாரன்
ராஜகுமாரன்

அதனாலயே ரசிகர்கள் சந்திக்க வந்தாலும் யாருக்கும் சிரமம் ஏற்படாதவாறு புது வீடு கட்டத் திட்டமிட்டோம். இந்த எண்ணமங்கலம் கிராமத்துல அஞ்சரை ஏக்கர் நிலம் வாங்கினோம். 2015-ம் வருஷம் இங்க வீடு கட்டி முடிச்சோம். வீட்டின் கட்டுமான வேலைகளைத் தொடங்கும் முன்பே, வீட்டைச் சுத்தியிருக்கும் நிலத்துல இயற்கை விவசாயம் செய்யணும்னு திட்டமிட்டிருந்தோம். கேரளாவில் கோட்டயம், ஒசூர் உட்பட பல இடங்களிலுள்ள நர்சரிகளிலிருந்து செடிகளை வாங்கினோம். இங்குள்ள வேளாண் துறை அதிகாரிகளும் தேவையான ஆலோசனைகள் கொடுத்தாங்க.

வீட்டைச் சுற்றியுள்ள அஞ்சு ஏக்கர் நிலத்தைச் சுற்றிலும் தென்னை, எலுமிச்சை, செம்மரம், பலா உட்பட பல்வகை மரங்களை நட்டோம். ஒரு மரத்துக்கும் இன்னொரு மரத்துக்கும் இடையே 20 அடி இடைவெளி விட்டிருக்கோம். எனவே, மரங்களுக்கு இடையே மல்லிகைப்பூ, அரளி, முல்லை பூச்செடிகளை அதிகளவில் வளர்க்கிறோம். கூடவே, சில காய்கறிப் பயிர்களையும் சாகுபடி செய்கிறோம்" என்கிறார்.

கடந்த மூணு மாசமா எங்க தோட்டத்து விளைபொருள்கள் எதையுமே விற்பனை செய்ய முடியலை. அதனால ஒரு ரூபாய்கூட வருமானம் கிடைக்கலை. ஆனாலும், தினந்தோறும் பராமரிப்புப் பணிகளைச் செய்றோம். மாதம்தோறும் பல ஆயிரம் ரூபாய் செலவாகுது. இதுக்காக ஒருபோதும் எங்களுக்கு வருத்தமேயில்லை. அதனாலதான், 'விவசாயத்தை நாங்க லாப நோக்கத்துக்காகப் பண்ணலை'ன்னு என் மனைவி சொன்னாங்க.
ராஜகுமாரன்

“சுத்துவட்டாரத்துல ஆறு உள்ளிட்ட நீர் நிலைகள் எதுவும் இல்லை. தண்ணிக்கு மட்டும்தான் சிரமம் இருக்குது. எனவே, சில கிணறுகள் அமைச்சிருக்கோம். அதில் ரெண்டு கிணத்துல சோலார் மூலம் தண்ணி எடுக்கிறோம். இப்போ வாரத்துக்கு ஒருமுறை மழை பெய்யுது. அதனால ஆழ்துளைக் கிணறுகளை அதிகம் இயக்குறதில்லை. நாங்க சென்னையில வசிக்கிறதால, தோட்டத்து வேலைக்கு அக்கம்பக்கத்துல இருக்கிற சில விவசாயிகளைப் பயன்படுத்தறோம். வருஷத்துக்கு சில முறை தொழு உரம் மட்டும்தான் போடுவோம். மத்தபடி எந்த உரங்களையும் போடுறதில்லை.

எங்க எல்லோருக்கும் இந்தப் பகுதி ரொம்பவே பிடிச்சிருக்கு. எனவே, எங்க மகள்களுக்கு ஸ்கூல் விடுமுறை கிடைக்கும்போதெல்லாம், மனைவிக்கு ஷூட்டிங் இல்லாம இருந்தா உடனே இந்த ஊருக்கு வந்திடுவோம். கிளம்பிப் போறப்போ, அறுவடைக்குத் தயாராகியிருக்கும் காய்கறிகளைச் சென்னைக்குக் கொண்டுபோவோம். எங்க வீட்டுத் தேவைக்குப் போக அக்கம்பக்கத்தினருக்கும் கொடுப்போம்" என்கிற ராஜகுமாரனும் தேவயானியும் அந்தியூர் அருகிலுள்ள பர்கூர் மலைப்பகுதியிலுள்ள தங்கள் மற்றொரு நிலத்திலும் இயற்கை விவசாயப் பணிகளைத் தொடங்க உள்ளனர்.

நடிகை தேவயானி
நடிகை தேவயானி
4,000-க்கும் அதிகமான மல்லிகைச் செடிகள், 500 அரளிச் செடிகள், 500 முல்லைச் செடிகள், 400 தென்னை மரங்கள், 600 எலுமிச்சை மரங்கள், 1,000 செம்மரங்கள், 10 சப்போட்டா மரங்கள், 25 பலா மரங்கள், சில கொய்யா மற்றும் அத்தி மரங்கள் உட்பட பல்வகை மரங்களையும் ஐந்து ஏக்கர் நிலத்தில் வளர்க்கிறார்கள். இதனால் இவர்களின் தோட்டம் பசுமையுடன் பிரகாசிக்கிறது.

லாக்டெளன் காலத்தில் விளை பொருள்களை விற்பனை செய்ய முடியாமல் நஷ்டத்தைச் சந்தித்தாலும், அதற்காக ராஜகுமாரன் கவலைப்படவில்லை. “பழ வகை மரங்கள் இப்பதான் செழிப்பா வளருது. அவை முழுமையா பலன்கொடுக்க சில வருஷங்கள் ஆகும். பலா மரங்கள்ல காய்கள் வர ஆரம்பிச்சிருக்கு. பழ மரங்கள், பூச்செடிகளைத் தவிர மீதமுள்ள நிலத்துல காய்கறிகளைப் பயிரிடுவோம். ஒன்றரை ஏக்கரில் வெள்ளரியை ஊடுபயிராகப் போட்டிருந்தோம்.

தோட்டத்தில் மகள்களுடன் தேவயானி
தோட்டத்தில் மகள்களுடன் தேவயானி

நல்ல மகசூல் கிடைச்சுச்சு. மார்ச் மாசம் அறுவடை செஞ்சோம். ஆனா, லாக்டெளன் அறிவிக்கப்பட்டதால வெளியூர் வியாபாரிகளால் இங்க வந்து வெள்ளரியை வாங்கிட்டுப்போக முடியலை. எனவே, உள்ளூர் வியாபாரிகள் மட்டும்தான் வந்தாங்க. வெள்ளரிக்கு நியாயமான விலை கிடைக்கலை. விளைபொருள் வீணாகக்கூடாதுனு மிகக்குறைவான விலைக்கு வெள்ளரியை வித்துட்டேன்.

தினமும் நாலு கிலோ மல்லிகைப்பூ, தலா ஆறு கிலோ அளவுல முல்லை மற்றும் அரளிப்பூக்களைப் பறிச்சுட்டு இருந்தோம். வியாபாரிகள் தோட்டத்துக்கே வந்து பூக்களை வாங்கிட்டுப் போவாங்க. அரளி கிலோ 50 ரூபாய்க்குக் கொடுப்போம். முல்லை மற்றும் மல்லிகைப்பூவைக் கிலோ 200 ரூபாய்க்கு விற்போம். இந்த லாக்டெளன் நேரத்துல ஒரு வியாபாரிகூட பூக்கள் வாங்க வர்றதில்லை. எனவே, மல்லிகைப்பூக்களை மட்டும் தினமும் பறிச்சு சாமிக்குத்தான் பயன்படுத்தறோம். முல்லை, அரளிப்பூக்களைப் பறிக்கிறதேயில்லை. தோட்டத்துல சில வகைப் பழங்கள் கிடைக்குது. அதனை எங்க வீட்டுத் தேவைக்குப் போக தெரிஞ்சவங்களுக்கும் கொடுக்கிறோம்.

மகள்களுடன் தேவயானி
மகள்களுடன் தேவயானி

கடந்த மூணு மாசமா எங்க தோட்டத்து விளைபொருள்கள் எதையுமே விற்பனை செய்ய முடியலை. அதனால ஒரு ரூபாய்கூட வருமானம் கிடைக்கலை. ஆனாலும், தினந்தோறும் பராமரிப்புப் பணிகளைச் செய்றோம். மாதம்தோறும் பல ஆயிரம் ரூபாய் செலவாகுது. இதுக்காக ஒருபோதும் எங்களுக்கு வருத்தமேயில்லை. அதனாலதான், 'விவசாயத்தை நாங்க லாப நோக்கத்துக்காகப் பண்ணலை'ன்னு என் மனைவி சொன்னாங்க. பக்கத்துல இருக்குற பர்கூர் மலையிலயும் எங்களுக்கு 30 சென்ட் நிலம் இருக்கு. அங்க இப்ப வீடு கட்டுறோம். அந்தப் பணிகள் முடிஞ்சதும் அங்கயும் விவசாய வேலைகளை ஆரம்பிக்கப்போறோம்" என்கிற ராஜகுமாரன், நிறைவாக...

"சில மாசத்துக்கு முன்பு வரை, 35 சென்ட் நிலத்துல தொடர்ச்சியா கொத்தவரங்காய் பயிரிடுவோம். அபரிமிதமான மகசூல் கிடைக்கும். இங்கிருந்து பஸ்ல ஏத்தி சென்னை கோயம்பேடு மார்கெட்டுக்குக் கொத்தவரங்காய்யை அனுப்புவேன். கிடைக்கும் வருமானம் பறிப்புக்கூலி, போக்குவரத்துக்கூலிக்குக்கூட கட்டுப்படியாகாது. ஆனாலும், நம்பிக்கையோடு விற்பனை செஞ்சேன். இதுவே, விவசாயத்தை மட்டுமே பிரதான தொழிலாகச் செய்ற சிறு, குறு விவசாயிகள் நிலையை யோசிச்சுப் பாருங்க. அவங்க பெரும்பாலும் அரசுப் பேருந்துகள்லதான் தங்களின் விளைபொருள்களைச் சந்தைக்குக் கொண்டுபோவாங்க. அந்த விளைபொருளுக்கு ஒரு பயணிக்கான டிக்கெட் விலையைவிட அதிக விலை வாங்கறாங்க. பல தரப்புலயும் இழப்புகளைச் சந்திக்கும் விவசாயிகளுக்கு அரசுப் பேருந்துகளில் விளைபொருள்களை எடுத்துச் செல்ல குறைந்த விலையைத் தமிழக அரசு நிர்ணயிக்கணும்.

தேவயானி - ராஜகுமாரன் மகள்கள்
தேவயானி - ராஜகுமாரன் மகள்கள்

ஒரு மனிதன் சரியான திட்டமிடலுடன் விவசாயம் செஞ்சா, வேலைக்காக யாரையும் எதிர்பார்த்து இருக்காம தன்னைத்தானே காப்பாத்திக்க முடியும். அதேபோல ஒருநாட்டிலும் சிறப்பான கட்டமைப்புகளுடன் விவசாய வேலைகள் நடந்துச்சுன்னா, பிற நாடுகளை நம்பியில்லாம தன்னிறைவுடன் இருக்க முடியும். எனவே, ஒருநாட்டில் எல்லாவற்றையும்விட விவசாயத்துக்கான கட்டமைப்புதான் பலமாக இருக்கணும்" என்கிறார் அழுத்தமாக.