Published:Updated:

"தக்காளி கலர் அட்டகாசம்; காலிபிளவர் வேண்டாம்னு சொன்னாங்க!" - காயத்ரி ஜெயராமனின் மாடித்தோட்ட அனுபவம்


காயத்ரி ஜெயராமன்
News
காயத்ரி ஜெயராமன்

"நடிகர் மாதவனைப் பார்த்துதான் விவசாய ஆசை வந்துச்சு!"- நடிகை காயத்ரி ஜெயராமனின் மாடித்தோட்ட அனுபவம்

இயற்கை விவசாயத்தின் அருமை புரிந்து பிரபலங்கள் உட்பட பலரும் விவசாயிகளாக மாறிவருகின்றனர். நிலமில்லாதவர்கள், மாடித்தோட்டம் அமைத்து வீட்டுத் தேவைக்கான காய்கறிகளை தாங்களே உற்பத்தி செய்துகொள்கின்றனர். அந்த வகையில் பெங்களூரில் வசிக்கும் நடிகை காயத்ரி ஜெயராமன் மாடித்தோட்டம் அமைத்திருக்கிறார். அதில் விளையும் காய்கறிகளை போட்டோ எடுத்து தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பதிவிட்டுவருகிறார். இதுகுறித்து அவரிடம் பேசினோம். மாடித்தோட்ட விவசாயி அனுபவத்தை உற்சாகத்துடன் பகிர்ந்தார். 


காயத்ரி ஜெயராமன்
காயத்ரி ஜெயராமன்

"முன்பு நாங்க சென்னையில வசிச்சோம். அதில், எங்க அப்பார்ட்மென்ட் பால்கனியில செடிகள் வளர்க்க ஓரளவுக்கு இடவசதி இருந்தும்கூட மாடித்தோட்டம் அமைப்பதுபற்றி எனக்கு எந்த யோசனையும் வரலை. இந்த நிலையில நாலு வருஷத்துக்கு முன்புதான் கணவரின் வேலை விஷயமா பெங்களூருக்குக் குடியேறினோம். இப்போ வசிக்கிறது தனி வாடகை வீடுதான். வீட்டுக்குப் பின்புறத்தில் இருந்த தோட்டத்துல ஓரளவுக்கு இடவசதி இருந்துச்சு. இங்க கிளைமேட்டும் ரொம்பவே நல்லா இருக்கு. எனவே, தண்ணீர் செலவும் அதிகம் இருக்காதுனு தோட்டத்துல சில செடிகளை வளர்த்தேன்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

அதில் ஆர்கிட் உள்ளிட்ட சில பூச்செடிகளின் வளர்ச்சி சிறப்பா இருந்துச்சு. ஆனா, காய்கறிகளின் வளர்ச்சி சொல்லிக்கிற அளவுக்கு இல்லை. தோட்டத்துல இருந்த மா மரங்களின் கிளைகளால் காய்கறிச் செடிகளுக்குப் போதிய சூரிய வெளிச்சம் கிடைக்கலை. அதனாலதான் விளைச்சல் சரியா இல்லைனு தெரிஞ்சது.


காயத்ரி ஜெயராமன்
காயத்ரி ஜெயராமன்

அப்போதான், நடிகர் மாதவனின் மாடித்தோட்டம் பத்தி கேள்விப்பட்டேன். அதுகுறித்த படங்களைப் பார்த்தப்போ வியப்பா இருந்துச்சு. அந்தத் தருணத்தில் மாதத்துல சிலநாள்தான் எனக்கு சீரியல் ஷூட்டிங் இருக்கும். நிறைய ஓய்வு நேரம் இருக்கிறதால, நானும் மாடித்தோட்டம் அமைக்க முடிவெடுத்தேன்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதுக்காக ஒரு நிறுவனத்தை அணுகினேன். என் விருப்பப்படி, சிறிய அளவிலான மாடித்தோட்டத்தை அமைச்சுக்கொடுத்தாங்க. மேலும், செடிகளை வளர்ப்பதற்கான அடிப்படை விஷயங்களையும் சொல்லிக்கொடுத்தாங்க. முதல்கட்டமா சோதனை முறையில் ஆறு பைகளில் லெட்டூஸ் கீரை, பாலக்கீரை, தக்காளிச் செடிகளை மட்டும் வளர்த்தேன்.


காயத்ரி ஜெயராமன்
காயத்ரி ஜெயராமன்

தண்ணீர் தவிர, வேற எந்த உரங்களும் பயன்படுத்தல. ஆச்சர்யப்படுற அளவுக்கு விளைச்சல் கிடைச்சுது. அதுவும், தக்காளியின் நிறம் கண்ணைப் பறிக்கிற மாதிரி செக்கச் சிவப்பா இருந்துச்சு. அதை போட்டோ எடுத்து என் இன்ஸ்ட்ராகிராம் பக்கத்துல பதிவிட்டேன்.

`காலிபிளவரைப் பயிரிட வேண்டாம். விளைச்சல் சரியா வராது. மேலும், அந்தச் செடியில நிறைய புழுவும் பூச்சிகளும் வரும்'னு பலரும் சொன்னாங்க. ஆனா, நம்பிக்கையுடன் பயிரிட்டேன். சரியா கவனிச்சுக்கிட்டதால காலிபிளவர் நல்ல முறையில் வளர்ந்துச்சு" என்று மகிழ்ச்சியுடன் கூறும் காயத்ரி, பின்னர் மாடித்தோட்டத்தைப் படிப்படியாக விரிவுபடுத்தியிருக்கிறார்.  

காயத்ரி ஜெயராமன் மாடித்தோட்டம்
காயத்ரி ஜெயராமன் மாடித்தோட்டம்

"மண் தொட்டி அமைச்சா மொட்டைமாடியில் தண்ணீர் தேங்கும்னு, மெட்டல் தொட்டிகளில் கூடுதலா நிறைய செடிகளை வளர்க்க ஆரம்பிச்சேன். இப்போ 200 சதுர அடியில் மாடித்தோட்டம் இருக்கு. தொடர்ந்து விளைச்சல் நல்லா இருக்கு. சில செடிகளில் எதிர்பார்த்த மகசூல் கிடைக்காத படிப்பினைகளும் கிடைச்சுது.

பூச்சித் தாக்குதல்களைச் சமாளிக்க நிறைய சவால்களையும் எதிர்கொண்டேன். அதைத் தடுக்கவும், பூச்சித் தாக்குதல் ஏற்படாமல் இருக்கவும் இயற்கை வழிமுறைகளைத் தெரிஞ்சுகிட்டேன். வேப்பெண்ணெய்யைத் தண்ணீர்ல கலந்து தெளிக்கிறது உட்பட எளிய முறைகளில்தான் பூச்சித் தாக்குதல்களைக் கட்டுப்படுத்தறேன். சமையல்ல வீணாகும் உணவுப் பொருள்களை மண்பானையில சேமிச்சு, அதைப் பயிர்களுக்கு உரமா பயன்படுத்தறேன்.

உரமாகும் கிச்சன் கழிவுகள்
உரமாகும் கிச்சன் கழிவுகள்

கேரட், முள்ளங்கி, தக்காளி உள்ளிட்ட சில பயிர்களின் விளைச்சல் அபாரமா இருக்கு. வெள்ளரி, முட்டைக்கோஸ், காலிபிளவர், லெட்டூஸ், புடலை, கத்திரிக்காய், பாலக்கீரை, பீட்ரூட், கொத்தமல்லி போன்ற பல பயிர்கள் பலன் தருது. எந்த ரசாயனமும் சேர்க்காம, சிரமப்பட்டு காய்கறிகளை விளைவிக்கிறேன். அதைச் சமைச்சு அதிலுள்ள சத்துகளைக் குறைக்க நான் விரும்பலை. எனவே, காய்கறிகளை சாலட் செஞ்சு பச்சையாவே சாப்பிடுவோம். அல்லது மினிமல் குக்கிங்தான் செய்வேன்.

இப்போ சன் டிவி `அழகு' சீரியல்ல நடிக்கிறேன். வாரத்துல மூணு நாள் சென்னை ஷூட்டிங்ல கலந்துக்கிறேன். எனவே, மாடித்தோட்டத்தைக் கவனிச்சுக்க எனக்கு நேரம் போதலை. அதனால, நான் இல்லாதப்போ என் வீட்டுப் பராமரிப்பாளர்தான் மாடித்தோட்டத்தைக் கவனிச்சுக்கிறாங்க. என் விவசாய ஆசையை இன்னொருத்தர் மீது திணிக்கிறது வருத்தமா இருக்கு. என்னோட மாடித்தோட்டத்தைப் பார்த்து எதிர் வீட்டாரும் மாடித்தோட்டம் அமைச்சிருக்காங்க.


காயத்ரி ஜெயராமன் மாடித்தோட்டம்
காயத்ரி ஜெயராமன் மாடித்தோட்டம்

ரெண்டு வருஷத்துல நிறைய அனுபவங்கள் கிடைச்சிருக்கு. மாடித்தோட்டத்தை விரிவுபடுத்த திட்டமிட்டிருக்கேன். அதுக்கேற்ப என் ஷூட்டிங் நேரங்களைத் திட்டமிடணும். எதிர்காலத்துல நிலத்தில் பெரிய அளவுல விவசாயம் செய்ற அளவுக்குப் பொருளாதாரம் உயர்ந்து வாய்ப்புகள் வசப்பட்டால் சந்தோஷப்படுவேன்" என்று புன்னகையுடன் கூறும் காயத்ரி, மாடித்தோட்டத்துக்குத் தண்ணீர் விடும் பணியில் மும்முரமானார்.