Published:Updated:

`மொத்தம் 300 சதுர அடி; முழுக்கவும் இயற்கை வழிதான்!' - நடிகை ஶ்ரீரெட்டியின் மாடித்தோட்ட அனுபவம் - 8

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
ஶ்ரீரெட்டியின் மாடித்தோட்டம்
ஶ்ரீரெட்டியின் மாடித்தோட்டம்

நடிகை ஸ்ரீரெட்டி சென்னையில் உள்ள வளசரவாக்கத்தில் தன் வீட்டில் பெரிய அளவில் தோட்டம் அமைத்து தினமும் பராமரித்து வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

நம் வீடுகளில் மட்டுமல்ல; சினிமா, அரசியல் பிரபலங்கள் மத்தியிலும் வீட்டில் மாடித்தோட்டம் அமைக்கும் வழக்கம் இப்போது வளர்ந்து வருகிறது. அவர்களின் மாடித்தோட்டம் குறித்த தகவல்களைத் தருவதற்காகவும், அவர்களின் தோட்டத்துக்கே உங்களை அழைத்துச் செல்லவும்தான் இந்த நட்சத்திர தோட்டம் தொடர். இந்த முறை நடிகை ஸ்ரீரெட்டியின் மாடித்தோட்டம் பற்றிப் பார்க்கலாம்.

ஶ்ரீரெட்டியின் மாடித்தோட்டம்
ஶ்ரீரெட்டியின் மாடித்தோட்டம்
``இந்த சந்தோஷம் என் மன அழுத்தத்தையே விரட்டிடுச்சு!" - வீட்டுத்தோட்ட அனுபவம் பகிரும் சுஜாதா பாபு - 7

நடிகை ஸ்ரீரெட்டி சென்னை, வளசரவாக்கத்தில் உள்ள தன் வீட்டில் பெரிய அளவில் தோட்டம் அமைத்து தினமும் பராமரித்து வருகிறார். அதில் விளையும் காய்கறிகளைப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம், முகநூல் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

நடிகை ஸ்ரீரெட்டி பாரம்பர்யமான விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். 8 வயதில் இருந்தே செடிகள் வளர்ப்பதில் ஆர்வம் கொண்டவர். இப்போது தனி வாடகை வீட்டில்தான் வசித்து வருகிறார். வீட்டின் மேல் தளத்தில் சிறிது இடம் இருந்தது. அந்தப் பகுதியில் அதிகமான வெயில் படாமல் சூழல் நன்றாக இருந்தது. அந்த இடத்தில் மாடித்தோட்டம் செடிகள் வளர்க்கலாம் என்ற எண்ணம் உருவாகியிருக்கிறது. ஆரம்பத்தில் பூக்கள், கீரைகள், காய்கறிகள் எனக் குறைவான அளவில் செடிகளை வளர்த்திருக்கிறார். அந்தச் செடிகளின் வளர்ச்சி நன்றாக இருந்தது. குறிப்பாக, காய்கறிகளின் வளர்ச்சி நன்றாகவே இருந்திருக்கிறது. கத்திரி, தக்காளி, அவரை உள்ளிட்ட காய்கறிகள் நன்றாகக் காய்த்திருக்கின்றன. ஆரம்பத்தில் தண்ணீர் தவிர, எந்தவிதமான உரங்களையும் பயன்படுத்தியது இல்லை. தக்காளியின் நிறம் கண்ணைப் பறிக்கும் அளவுக்கு சிவப்பு நிறமாக இருந்திருக்கிறது.

அதை எடுத்து முதன்முதலாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்தார் ஶ்ரீரெட்டி.
படிப்படியாக கற்றாழை, முடக்கத்தான், துளசி உள்ளிட்ட மூலிகைகளைப் பயிரிடலாம் என எண்ணம் உதிக்கவே அதைச் செயல்படுத்திவிட்டார். இப்போது இவரிடம் கற்றாழைத் தோட்டமே இருக்கிறது. மாடித்தோட்டத்தில் பூச்சித் தாக்குதல் வரும் நேரங்களில் வேப்ப எண்ணெய் தெளிக்கிறார். அது கிடைக்காத நேரத்தில் கற்றாழை சாற்றைத்தான் கலந்து தெளிக்கிறார். மாடித்தோட்டத்தைச் சரியாக் கவனித்துக் கொண்டதால் செடிகள் நல்ல முறையில் வளர்ந்து பலன் கொடுக்க ஆரம்பித்திருக்கிறது.

காய்கறி, கீரைகளை அறுவடை செய்து சமைத்து சாப்பிட்டபோது நல்ல சுவையுடன் இருந்திருக்கிறது. அப்போதுதான் கடைக் காய்கறிகளுக்கும், இயற்கைக் காய்கறிகளுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்திருக்கிறார் ஶ்ரீரெட்டி. ``இவ்ளோ நாள் நாம இயற்கையான காய்கறிகளைச் சாப்பிடலைனு அப்போதான் தெரிஞ்சுகிட்டேன்" என்று தன் நண்பர்களிடத்தில் பகிர்ந்து வருகிறார்.

ஶ்ரீரெட்டியின் மாடித்தோட்டம்
ஶ்ரீரெட்டியின் மாடித்தோட்டம்
`இயற்கை முறையில விளைஞ்ச 15 கிலோ காய்கறிகள்!' - அமைச்சர் மா.சுப்பிரமணியனின் மாடித்தோட்ட அனுபவம் - 6

எத்தனை நாள்களுக்கு காய்கறிகளை வளர்ப்பது, கொஞ்சம் வித்தியாசமாக பழ மரங்களை பயிர் செய்து பார்க்கலாமே என்ற எண்ணம் உருவாகியிருக்கிறது. அதனால் வீரிய ரக பழச் செடிகளை வாங்கி மாடியில் வைத்திருக்கிறார். அதில் அத்தி, கொய்யா, நாவல் ஆகியவை அடங்கும். பெரிய அளவில் இடம் இல்லாததால் மாடித்தோட்டத்தில குறைவான பழ மரங்களை வளர்த்து வருகிறார்.
மண் தொட்டி அமைத்தால் மொட்டைமாடியில் தண்ணீர் தேங்கும் என பைகளில்தான் செடிகளை வளர்த்து வருகிறார். இப்போது 300 சதுர அடியில் மாடித்தோட்டம் இருக்கிறது. தொடர்ந்து காய்கறிகள் விளைச்சல் நன்றாகவே இருக்கிறது. சில செடிகளில் எதிர்பார்த்த மகசூல் கிடைக்கவில்லை. ஆரம்பத்தில் பூச்சித் தாக்குதல்களைச் சமாளிக்கத்தான் கொஞ்சம் கஷ்டப்பட்டிருக்கிறார். பூச்சித் தாக்குதல் வராமல் தடுக்க வேப்ப எண்ணெய் கரைசல், இஞ்சி-பூண்டு கரைசல் என இயற்கையான வழிமுறைகளைக் கடைப்பிடித்ததால் பூச்சிகளின் தாக்குதல் கட்டுக்குள் வந்திருக்கிறது. சமையல் செய்யும்போது வீணாகும் உணவுப் பொருள்களை மட்க வைத்து செடிகளுக்கு உரமாகப் பயன்படுத்துகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மாடித்தோட்டத்தில் தனியாக ஒரு பந்தல் அமைத்து, அதில் திராட்சை, கோவக்காய் கொடிகளை ஓட விட்டிருக்கிறார். சீஸன் நேரத்தில் கத்திரிக்காய், பாலக்கீரை, பீட்ரூட், கொத்தமல்லி எனப் பல பயிர்கள் பலன்களைக் கொடுத்துக்கொண்டிருக்கிறது. இதுவரையில் எந்த ரசாயனமும் சேர்க்காமல், காய்கறிகளை விளைவித்து வருகிறார்.

ஶ்ரீரெட்டியின் மாடித்தோட்டம்
ஶ்ரீரெட்டியின் மாடித்தோட்டம்
`4 செடில ஆரம்பிச்சது; இப்ப 40 செடிகள்!' - மனோபாலாவின் மாடித்தோட்ட ரவுண்டப் - நட்சத்திரத் தோட்டம் - 1

பொதுவாக, மாடித்தோட்டத்துக்குத் தொட்டி தயார் செய்யும்போது மண், தென்னை நார், மண்புழு உரம், வேப்பம் புண்ணாக்கு எல்லாத்தையும் கலந்து உடனடியாக செடியை நடவு செய்வது வழக்கம். ஆனால், இவர் அந்தக் கலவையைக் காய வைத்து, 7 நாளுக்குப் பின்னால்தான் தொட்டியில் போட்டு விதைகளையோ செடிகளையோ நடுகிறார்.

ஒருமுறை விகடனுக்கு அளித்த பேட்டியில் மாடித்தோட்ட அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட ஶ்ரீரெட்டி, ``மாடித்தோட்டத்தைப் பார்த்துக்கிறது ரொம்பவே கஷ்டம். நேரம் கிடைக்காது. மண், அழுக்கு... இப்படிப் பலபேர் என்கிட்ட சொன்னாங்க. ஆனா, நம்பிக்கையோடு மாடித்தோட்டம் அமைச்சேன். சரியா கவனிச்சுக்கிட்டதால காய்கறிகள், பூக்கள்னு நல்ல முறையில் வளர்ந்துச்சு. அதைச் சமையலுக்குப் பயன்படுத்துனப்போ அவ்ளோ சுவையா இருந்துச்சு. பூஜைக்கு வைக்கிற மலர்களும் நல்ல மணமா இருக்கு.

`தக்காளி முதல் டிராகன் ஃப்ரூட் வரை!' - நடிகை சீதாவின் மாடித்தோட்ட அனுபவம் - நட்சத்திரத் தோட்டம் - 4

என் மாடித்தோட்டத்தை நான்தான் கவனிச்சுக்குறேன். என் விவசாய ஆசையை இன்னொருத்தர் மீது திணிக்கிறது வருத்தமா இருக்கு. மாடித்தோட்டம் அமைச்சு சுமார் ரெண்டு வருஷத்துல நிறைய அனுபவங்கள் கிடைச்சிருக்கு. 100 சதுர அடியில் இருக்கிற மாடித்தோட்டத்தை விரிவுபடுத்தி 300 சதுர அடியா மாற்றியிருக்கேன். இப்போ செடிகளை வைக்குறதுக்கு இடம் பத்தல. காலை, மாலைனு ரெண்டு வேலைகள்லயும் செடிகளுக்குத் தண்ணீர் கொடுத்துட்டு வர்றேன். காலையில செடிகளைப் பராமரிக்கிறது, உடலுக்கும் மனசுக்கும் சந்தோஷத்தைக் கொடுக்குது. ஒவ்வொரு நாளும் இங்க இருக்குற காய்கறியோ, கீரையோ, மூலிகையோ நிச்சயம் என்னோட சாப்பாட்டுல இடம் பிடிக்கும். மாடித்தோட்டத்தில் நான் கத்துக்கிட்ட பாடங்களும் அதிகம் இருக்கு” என்று மகிழ்ச்சியுடன் பகிர்ந்திருந்தார் ஸ்ரீரெட்டி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு