உடல் நலம் மற்றும் மன நலம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை கோவிட் மக்களுக்கு உணர்த்திவிட்டது. பெரும்பான்மை மக்கள் இன்னும் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கும் நிலையில், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தில், இன்னும் குறிப்பாக உடல் உழைப்பு தொடங்கி, அன்றாடம் உண்ணும் உணவு வகை வரை, அனைத்திலும் அவர்களது அக்கறை அதிகரித்துள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, விவசாய நிலங்களிலிருந்து நேரடியாக நுகர்வோர்க்கு ஆரோக்கியமான மற்றும் தரமான வேளாண் பொருள்களை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது `ஃபார்மர்ஸ் ஃபேமிலி' நிறுவனம். நொய்டாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்த வேளாண் நிறுவனம் நவீன தொழில்நுட்பத்தின் துணையுடன் காய் கனிகள் உற்பத்தி மற்றும் விநியோகத்தில் ஈடுபட்டுள்ளது. இணையதளம், ஆப் மற்றும் சில்லறை வர்த்தகம் மூலமாக மக்களுக்கு நேரடியாக காய்கறிகளை விநியோகித்து வருகிறது.
இந்த நிறுவனத்திற்காக சேஃபெக்ஸ் கெமிகல்ஸ் என்னும் நிறுவனத்தின் உரிமையாளர்களிடமிருந்து மூலதன நிதி திரட்டியிருப்பதாகவும், முதல்கட்டமாக திரட்டப்பட்ட நிதியை காய்கறி விநியோகச் சங்கிலியை மேம்படுத்துவதற்காக முதலீடு செய்திருப்பதாகவும் `ஃபார்மர்ஸ் ஃபேமிலி' தெரிவித்துள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்த நிறுவனத்தின் முயற்சி குறித்து பேசியிருக்கும் சி.இ.ஓ விகால், ``எங்களது எளிமையான குறிக்கோள் `நாங்கள் விவசாயம் செய்கிறோம். நீங்கள் சாப்பிடுங்கள்' (We Farm You Eat) என்பதுதான். அதாவது விவசாயிகளிடமிருந்து நேரடியாக மக்களுக்கே விளைபொருள்களைக் கொண்டு சேர்ப்பது. விவசாய நிலங்களிலிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்யப்படும் வேளாண் பொருள்கள் அனைத்தும் முதலில் அதிநவீன அல்ட்ராசோனிக் தொழில்நுட்பம் மூலம் சுத்திகரிக்கப்படும். பின்னர், அவை சுத்தமாகவும் சுகாதாரமாகவும், எங்கள் தொழிற்சாலைகளில் பேக்கிங் செய்யப்பட்டு நுகர்வோர்க்கு அனுப்பி வைக்கப்படும். ஆரோக்கியமான, சுத்தமான காய்களையும் கனிகளையும் அனைவருக்கும் கட்டுப்படியாகும் விலையில் வழங்கவேண்டும் என்பதான் எங்கள் நிறுவனத்தின் முக்கிய நோக்கம்.
வேதி உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி தெளிப்பான்களால் விளைந்த காய்களையும் பழங்களையும், உண்ட காரணத்தால் கடந்த 20 ஆண்டுகளில் மக்களின் உடல்நலன் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நமது அன்றாட உணவுகளில் காய், கனிகளின் பங்களிப்பு 65%-க்கும் அதிகம் என்பதால் அறுவடைக்கு முந்தைய மற்றும் அறுவடைக்குப் பிந்தைய பயிர்களின் ஆரோக்கியத்தை மக்கள் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தொடங்கப்பட்ட ஓராண்டுக்குள் `ஃபார்மர்ஸ் ஃபேமிலி' நிறுவனம் காஸியாபாத் டிரான்ஸ் ஹிண்டன் பகுதி, நொய்டா மற்றும் கிரேட்டர் நொய்டாவின் அனைத்து செக்டார்கள், புது டெல்லி மயூர் விகாஸ் முதல் ஃபேஸ் எனப் பல்வேறு இடங்களில், 20 லட்சத்துக்கும் அதிகமான குடியிருப்புகளைப் பரவலாகக் கொண்ட, 20-க்கும் அதிகமான குடியிருப்பு நலச்சங்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டது. இது எங்களுக்கு உத்வேகமாக அமைந்தது.
பயிரிடும்போது தெளிக்கப்படும் ரசாயன பூச்சிக்கொல்லித் தெளிப்பான்களின் மிச்சம் அறுவடைக்குப் பிறகு, அதிக அளவில் பயிர்களில் தங்கிவிடும். எனவே, அவை `பப்பிள் மற்றும் ஜெட் வாஷ்’ (Bubble and Jet Wash) தொழில்நுட்பம் மூலம் அகற்றப்படும். இதைத் தொடர்ந்து அறுவடை செய்யப்பட்ட புத்தம் புதிய காய் கனிகளிலுள்ள நோய்க்கிருமி நுண்ணுயிர்கள் அல்ட்ராவயலெட் கதிர்கள் மூலம் அகற்றப்பட்டுச் சுத்திகரிக்கப்படும். பூமிக்கு அடியில் விளையும் காய்களைச் சுத்தப்படுத்த ஃபார்மர்ஸ் ஃபேமிலி நிறுவனம் உலர் உருளை எந்திரங்களைப் (Dry Roller Machines) பயன்படுத்துகிறது. இந்த எந்திரங்கள் மூலம் காய் கனிகளிலுள்ள தூசையும் அழுக்கையும் அகற்றுவதுடன், கொஞ்சம் தண்ணீர் தெளித்து அவற்றின் தோலையும் உரிக்கலாம்.
இவ்வாறாக அறுவடைக்குப் பிந்தைய செய்முறை மூலம் காய் கனிகளின் மேற்புறத் தோலிலுள்ள 60% - 70% நச்சுப் பொருள்களையும், பூச்சிக்கொல்லிகளையும் நீக்கிவிடலாம். மேலும், எங்களது வேளாண் பொருள்களின் ஆரோக்கியம் தொடர்பான ஆய்விலும் ஈடுபட்டு வருகிறோம். இந்த ஆய்வு மூலம் ஒவ்வொரு வேளாண் பொருளின் தற்போதைய நிலை, கலவை, ஊட்டச்சத்து, அதை உண்பதற்கான சரியான நேரம், சாப்பிடும் அளவு ஆகியவற்றின் முழு விவரங்கள் நுகர்வோர்க்குத் தெரிவிக்கப்படும். அதேபோல் அறுவடைக்கு முந்தைய சில நவீன தொழில்நுட்பங்களையும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் அவர்களுக்கு அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்'' எனத் தெரிவித்திருக்கிறார்.
- ஜனனி ரமேஷ்