Published:Updated:

``காட்டுயானம் நெல் விளைய ஆறு மாதம் ஆகுமா?” ஆச்சரியப்பட்ட உத்தரப்பிரதேச மாணவிகள்!

காட்டுயாணம் நெல் வயலில் களை பறிப்பு

தமிழகத்தில் இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால் காட்டுயானம் நெல் உள்ளிட்ட பாரம்பர்ய நெல் ரகங்களைப் பயிரிடுவது அதிகரித்துள்ளது. அத்துடன், பல தானிய விதைப்பிலும் விவசாயிகள் ஆர்வம் காட்டுகிறார்கள்.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் அலகாபாத் வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் இயற்கை விவசாயம் குறித்துப் பயிலும் மாணவிகள் சிலர் அனுபவ அறிவுக்காக நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள பரிவிரிசூரியன் கிராமத்துக்கு வந்திருந்தனர். அந்த கிராமத்தின் இயற்கை விவசாயிகளைச் சந்தித்துப் பேசியதுடன், அவர்கள் பயிரிடும் காட்டுயாணம் நெல் உள்ளிட்டவற்றைப் பார்வையிட்டனர்.

பஞ்சகவ்யம் தயாரிக்கும் இடத்தில் மாணவிகள்
பஞ்சகவ்யம் தயாரிக்கும் இடத்தில் மாணவிகள்

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நான்காம் ஆண்டு படிக்கும் மாணவிகளான சினேகா, பிரநிலா, அஜின்சியா ஜோல் ஆகியோருக்கு வள்ளியூர் வட்டார மகேந்திரகிரி பாரம்பர்ய விவசாயிகள் சங்கத்தின் செயலாளரான மகேஸ்வரன், இயற்கை முறையில் பயிரிட்டு அதிக சாகுபடி பெறுவது பற்றி விளக்கிக் கூறினார். அத்துடன், தனது வயலுக்கு அழைத்துச் சென்று நேரடிப் பயிற்சி அளித்தார்.

காட்டுயானம் வயலைச் சுற்றிப் பார்த்த மாணவிகள், வயலில் இறங்கி களை பறித்தனர். அந்த நெல்லின் மருத்துவ குணங்கள் உள்ளிட்டவை குறித்து ஆர்வத்துடன் கேட்டறிந்தனர். அதோடு, கன ஜீவாமிர்தம், மகாதசகவ்யம், பஞ்சகவ்யம், ஜீவாமிர்தம், மகாமூலிகை பூச்சி விரட்டி, மகா அக்னிஅஸ்திரம் ஆகியவற்றை செய்வது பற்றியும் அதன் பயன்கள் பற்றியும் கவனத்துடன் கேட்டறிந்தனர்.

இயற்கை உரமிடும் மாணவி
இயற்கை உரமிடும் மாணவி

தங்களுக்குக் கிடைத்த அனுபவம் பற்றிப் பேசிய மாணவிகள், ”காட்டுயானம் விதைக்கபப்ட்ட வயலை நேரில் சென்று பார்த்தோம். அந்த நெல், மருத்துவ பயன் கொண்டதாக இருப்பதயும் தெரிந்துகொள்ள முடிந்தது. காட்டுயாணம் நெல் விளைச்சல் அடைய ஆறு மாதம் ஆகும் என்று சொன்னதைக் கேட்டதும் ஆச்சர்யமாக இருந்தது. இங்கு வந்ததன் மூலம் பலதானிய விதைப்பு குறித்த தொழில் நுட்பங்களையும் அறிந்து கொண்டோம்” என்றார்கள்.