Published:Updated:

விவசாயப் போராளி வையாபுரியின் நினைவலைகள்!

சி.வையாபுரி
பிரீமியம் ஸ்டோரி
சி.வையாபுரி

நினைவஞ்சலி

விவசாயப் போராளி வையாபுரியின் நினைவலைகள்!

நினைவஞ்சலி

Published:Updated:
சி.வையாபுரி
பிரீமியம் ஸ்டோரி
சி.வையாபுரி
சேலம் மாவட்டம், தலைவாசலை அடுத்த ஆறகளூரைச் சேர்ந்தவர் சி.வையாபுரி. ஐக்கிய விவசாயிகள் சங்கத்தின் தலைவர். தமிழகத்தில் விவசாயம் தொடர்பாக எழும் பிரச்னைகளுக்குத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர்.

தான் கொண்ட கொள்கையிலிருந்து எக்காரணத்தைக் கொண்டும் பின்வாங்காதவர். பல விவசாயச் சங்கங்களோடு முரண்பட வேண்டியிருந்தாலும் அதுகுறித்துக் கவலைப்படாமல் இயங்கி வந்தார். கடைசி வரை பயிர்வாரி முறையை வலியுறுத்தி வந்தார். புஞ்சை நிலத்தில் நஞ்சைப் பயிர்களையும், நஞ்சை நிலத்தில் புஞ்சைப் பயிர்களையும் பயிரிடுவதால்தான் வறட்சி, தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்படுகிறது என்பதை வலியுறுத்தி வந்தார்.

சமீபத்தில் பசுமை விகடன் சார்பில் மத்திய அரசுக்கான பட்ஜெட் பரிந்துரைகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அளித்தபோது, வையாபுரியும் உடனிருந்தார். அப்போது ‘பயிர்வாரி முறைக்குச் சட்டம் கொண்டு வர வேண்டும்’ என்று நிதியமைச்சரை வலியுறுத்தினார்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘இப்போதெல்லாம் நான் களைக்கொல்லி யைப் பயன்படுத்துவதில்லை. இது லட்சக் கணக்கான தொழிலாளர்களின் வேலையைப் பறிக்கிறது. அதனால், கைக்களைத்தான் எடுத்து வருகிறேன். களைகளால் மாடுகளுக்குத் தீவனமும் தொழிலாளர்களுக்குக் கூலியும் கிடைக்கின்றன’ என்று சொல்லி நீங்களும் களைக்கொல்லி பயன்படுத்தாமல் இருக்க விழிப்புணர்வு கட்டுரை ஒன்றை எழுத வேண்டும் என்று கடிதம் அனுப்பியிருந்தார். அது சம்பந்தமான கட்டுரை பசுமை விகடனில் கடந்த இதழில் பிரசுரமாகியுள்ளது.

சி.வையாபுரி
சி.வையாபுரி

சமூக நீதியிலும் மிகவும் பற்றுள்ளவர். இதை நிலைநாட்டுவதற்காகக் கலப்புத் திருமணத்தைச் செய்துகொண்டவர். இவரின் மனைவி ராஜம்மாள். தலைவாசலின் முன்னாள் எம்.எல்.ஏ-வாக இருந்தவர். 1980 மற்றும் 1984-ம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் தலைவாசல் தொகுதியிலிருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். வாழப்பாடி ராமமூர்த்தியோடு நெருங்கிய நட்புக் கொண்டிருந்தவர். ஒருகட்டத்தில் காங்கிரஸிலிருந்து விலகி ஐக்கிய விவசாயிகள் சங்கத்தைத் தோற்றுவித்துத் தனது கடைசி மூச்சு வரை செயலாற்றி வந்தார். ஏற்கெனவே இதய அறுவைசிகிச்சை செய்துகொண்டவர், கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி இரவு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். மருத்துவ மனையில் சேர்த்த சிறிது நேரத்தில் அவர் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 84. இயற்கை யோடு கலந்த விவசாயப் போராளிக்குப் பசுமை விகடன் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism