Published:Updated:

ரூ. 5,00,000 மானியம் ரூ. 20,000 ஊக்கத்தொகை... வேளாண் தொழில் முனைவோருக்கான பயிற்சி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
வேளாண் தொழில் முனைவோருக்கான பயிற்சி!
வேளாண் தொழில் முனைவோருக்கான பயிற்சி!

நாட்டு நடப்பு

பிரீமியம் ஸ்டோரி
த்திய அரசின் தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முனைவோர் மேம்பாட்டு வாரியத்தின் உதவியுடன் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் வணிகக் காப்பகம் 2011-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த வேளாண் காப்பகத்திலுள்ள 305 உறுப்பினர்களுக்கு வேளாண் வணிகத்துக்கான சோதனை மற்றும் தரச்சான்றிதழ், நிதி இணைப்புகள், அரசு மானியங்கள், தொழில்நுட்ப ஆலோசனைகள், உள் அலுவலக வசதிகள், சந்தை இணைப்புகள், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், காப்புரிமைகள் ஆகிய சேவைகள் வழங்கப்பட்டுவருகின்றன.

இந்தக் காப்பகத்தின் செயல்பாடுகளைக் கருத்தில்கொண்டு, 2018-19-ம் ஆண்டு மத்திய அரசின் விவசாயம் மற்றும் விவசாய நலத்துறை அமைச்சகம், ‘தேசிய விவசாய மேம்பாட்டுத் திட்டம் - விவசாயம் மற்றும் வேளாண் சார்ந்த தொழில்களுக்கான புத்துணர்ச்சியுடன்கூடிய லாபகரமான அணுகுமுறைகள் - வேளாண் வணிகக் காப்பகத்துக்கான பயிற்சி’ (RKVY-RAFTAAR-R-ABI) எனும் புதிய திட்டத்துக்கு வேளாண் வணிகக் காப்பகத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறது. இந்தத் திட்டத்தின் கீழ் வேளாண் தொழில்முனைவோருக்கான புத்தறிவுப் பயிற்சி நடைபெறவிருக்கிறது. இந்தப் பயிற்சியில் சேர இணையம் வழியாக 30.05.2020 வரை விண்ணப்பிக்கலாம்.

வேளாண் தொழில் முனைவோருக்கான பயிற்சி
வேளாண் தொழில் முனைவோருக்கான பயிற்சி

வேளாண் மற்றும் அது சார்ந்த துறைகளில் புதிய தொழில்நுட்பம், ஆலோசனை மற்றும் தொழில்முனைவோராக விரும்பும் எண்ணமுள்ள பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். தகுதிபெறும் பட்டதாரிகளுக்கு இரண்டு மாதம் பயிற்சி மற்றும் மாதத்துக்கு ரூ.10,000 மானியமாக இரு மாதங்களுக்கு வழங்கப்படும். இந்தப் பயிற்சியில் புதிய தொழில் ஆரம்பிக்கும் முறைகள், வேளாண் வணிகத்தின் வாய்ப்புகள், வணிகத்துக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள், அரசு மானியங்கள் மற்றும் திட்டங்கள் தொடர்பான பயிற்சிகள் அளிக்கப்படும். பயிற்சி நிறைந்தவுடன் தகுதியானவர்களுக்கு மத்திய வேளாண் தொழில்முனைவோருக்கான மானியம் ரூ.5,00,000 வழங்கப்படும்.

கடந்த 2019-20-ம் ஆண்டில் பயிற்சி பெற்ற 20 வேளாண் தொழில்முனைவோர்கள், மத்திய அரசின் மானியத்துக்காக உணவு பதப்படுத்துதல், வேளாண் உயிர் தொழில்நுட்பம், ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான பொருள்கள் தயாரித்தல் போன்ற துறைகளில் வணிகத் திட்டத்தைச் சமர்ப்பித்தது குறிப்பிடத்தக்கது.

இணையதளத்தில் விண்ணப்பிப்பதற்கான இணைப்புகள்:

https://sites.google.com/a/tnau.ac.in/tbi

https://tbitnau.com

http://www.tnau.ac.in

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு