Published:Updated:

விவசாய நிலங்களில் குறைந்து வரும் கரிம அளவு; உணவு உற்பத்தி பாதிக்கப்படுமா?

விவசாய நிலம்

கடந்த 70 ஆண்டுகளில் விவசாயம் செய்யப்படும் நிலங்களில் கார்பனின் அளவு 1 சதவிகிதத்திலிருந்து 0.3 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. இதனால் மண்ணின் உற்பத்தித் திறன் பாதிப்படைவதோடு, நுண்ணுயிர்கள் வாழ முடியாத நிலை உண்டாகும்.

விவசாய நிலங்களில் குறைந்து வரும் கரிம அளவு; உணவு உற்பத்தி பாதிக்கப்படுமா?

கடந்த 70 ஆண்டுகளில் விவசாயம் செய்யப்படும் நிலங்களில் கார்பனின் அளவு 1 சதவிகிதத்திலிருந்து 0.3 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. இதனால் மண்ணின் உற்பத்தித் திறன் பாதிப்படைவதோடு, நுண்ணுயிர்கள் வாழ முடியாத நிலை உண்டாகும்.

Published:Updated:
விவசாய நிலம்

மனிதனின் அன்றாட வாழ்வில் நேரடியாகவும் மறைமுகமாகவும் கார்பன் அதிக நன்மைகளைச் செய்து வருகிறது. குறிப்பாக, மண்ணுக்கு நிறைய நன்மைகளைச் செய்து வருகிறது. இந்நிலையில், விவசாய நிலங்களில் கார்பனின் அளவு குறைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விவசாயம்
விவசாயம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதுகுறித்து தேசிய மானாவாரி விளைநிலப் பகுதி ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அசோக் தல்வாய் கூறியதாவது, ``ஒரு மண் நன்றாக இருக்கிறது என்பதற்கு அந்த மண்ணிலுள்ள கார்பன் (கரிம) அளவே முக்கிய சாட்சி. மண்ணில் உள்ள கார்பன்தான் நீரை தேக்கி வைக்கும் திறனை மண்ணுக்குக் கொடுக்கிறது. மண்ணுக்கு வளத்தையும் தருகிறது. ஆனால், நாடு முழுவதும் விவசாய நிலங்களில் மண்ணிலுள்ள கார்பன் அளவு கணிசமாகக் குறைந்துள்ளது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கடந்த 70 ஆண்டுகளில் விவசாயம் செய்யப்படும் நிலங்களில் கார்பனின் அளவு 1 சதவிகிதத்திலிருந்து 0.3 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. இதனால் மண்ணின் உற்பத்தித் திறன் பாதிப்படைவதோடு, நுண்ணுயிர்கள் வாழ முடியாத நிலை உண்டாகும். ஏனெனில், மண்ணிலுள்ள நுண்ணுயிர்களே பயிர்களுக்கு ஊட்டச்சத்துகளை வழங்குகின்றன.

விவசாயம்
விவசாயம்

பயிர் சாகுபடி செய்யப்படும் நிலங்களில் கார்பன் அளவு குறைந்து வருவது உணவுப் பொருள்களின் உற்பத்தியைப் பாதிக்கும். விவசாய விளை நிலங்களில் இயற்கை உரத்தை உபயோகிக்காமல், தொடர்ந்து ரசாயன உரங்களைப் பயன்படுத்தி பயிர்களைச் சாகுபடி செய்வதே கார்பனின் அளவு இந்தளவு குறைந்ததற்குக் காரணம்" எனத் தெரிவித்துள்ளார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism