Published:Updated:

கடற்கரைப் பகுதியில் கொய்மலர் சாகுபடி செய்யலாமா?

புறா பாண்டி
பிரீமியம் ஸ்டோரி
புறா பாண்டி

நீங்கள் கேட்டவை

கடற்கரைப் பகுதியில் கொய்மலர் சாகுபடி செய்யலாமா?

நீங்கள் கேட்டவை

Published:Updated:
புறா பாண்டி
பிரீமியம் ஸ்டோரி
புறா பாண்டி

‘‘கொய்மலர் சாகுபடி செய்ய விரும்புகிறோம். கடற்கரைக்கு அருகிலுள்ள பகுதியில் சாகுபடி செய்ய முடியுமா?’’

ஆர்.ராதா, கூவத்தூர்.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி மலர் விவசாயியும் மலர் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவருமான ஆர்.மூர்த்தி பதில் சொல்கிறார்.

‘‘நிச்சயமாகச் சாகுபடி செய்யலாம். கடற்கரையிலிருந்து 30 கி.மீ சுற்றளவுக்குள் இருக்க வேண்டும். காரணம், மதியம் 3 மணிக்கு மேல் கடல் காற்று வீசும். இதன் மூலம் வெப்பநிலை குறைவாக இருக்கும். இதனால்தான், சமவெளியில் ஆர்கிட் மலர் சாகுபடி செய்யக் கடற்கரை பகுதிகள் ஏற்றதாக உள்ளன. என் அனுபவத்தில் ‘வந்தா’ (Vanda அல்லது Vandan என்று அழைக்கப்படுகிறது) என்ற கொய்மலர், இந்தப் பகுதியில் சாகுபடி செய்ய ஏற்றது. அலங்கார மலர்க்கொத்து பயன்பாட்டுக்கும், வட மாநில மக்களின் திருமணங்களிலும் இந்த மலர் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.

கொய்மலர்
கொய்மலர்
மலர்
மலர்
மலர்
மலர்


சில ஆண்டுகளுக்கு முன்பு செங்கல்பட்டு மாவட்டத்தில் இந்த வகை மலர் சாகுபடி செய்த பண்ணையைப் பார்த்திருக்கிறேன். குறைந்தபட்சம் 50 சென்ட் நிலத்தில் சாகுபடி செய்தால்தான் சரியாக இருக்கும். நிழல் வலை அமைத்துதான் பயிரிட வேண்டும். இதை நேரடியாக மண்ணில் சாகுபடி செய்ய முடியாது. சொல்லப்போனால் மண்ணே தேவைப்படாது, கற்களும் கரித்துண்டுகளும்தான், இந்த மலர் வளர்வதற்கான ஊடகம். மரப்பலகை மூலம் அலமாரிகள் அமைத்து, அதில் தொட்டி வைத்து, இந்த மலர்ச் செடிகளை வளர்க்க வேண்டும். சொட்டு நீர்ப் பாசனம் கட்டாயம் தேவை. செடிகளுக்குத் தேவையான உரத்தினை நீரில் கரைத்து வழங்க வேண்டும்,

ஆர்.மூர்த்தி
ஆர்.மூர்த்தி


இந்தியாவில் ரசாயன விவசாய முறையில்தான், இந்த மலர் சாகுபடி நடந்து வருகிறது. இந்தோனேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் இயற்கை முறையில் சாகுபடி செய்கிறார்கள். தேவைப்பட்டால், இயற்கை தொழில்நுட்பங்களை அங்கிருந்து பெற்றுப் பயன்படுத்தலாம். சாகுபடி செய்த 18 மாதங்களுக்குப் பிறகுதான், பூக்கள் அறுவடைக்கு வரும். 50 சென்ட் நிலத்தில் சாகுபடி செய்ய உத்தேசமாக 5 லட்சம் ரூபாய் வரை செலவாகும். ஆண்டுக்கு 3 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும். நன்றாகப் பராமரிப்பு செய்தால் அதிகபட்சம் 5 ஆண்டுகள்கூட மகசூல் கொடுக்கும். சிறு, குறு விவசாயி என்றால் 100 சதவிகித மானியத்தில் சொட்டுநீர்ப் பாசனம் அமைக்கலாம். தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் மூலம் சாகுபடி செலவில் 50 சதவிகிதம் மானியமாக வழங்குகிறார்கள். வங்கி மூலம் வழங்குவதால், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெற்றால் மட்டுமே மானியம் கிடைக்கும்.’’


தொடர்புக்கு, ஆர்.மூர்த்தி,

செல்போன்: 98948 69073.

‘‘கால்நடை பண்ணை வைத்துள்ளோம். தீவனச்செலவைக் குறைக்க மரத் தழைகளைத் தீவனமாகக் கொடுக்கலாமா?

க.பெருமாள், வந்தவாசி.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கால்நடை உணவியல் நிலையத்தின் விஞ்ஞானி முனைவர் மைனாவதி பதில் சொல்கிறார்.

‘‘மரத் தழைகளில் மற்ற தீவனங்களைக் காட்டிலும் ஊட்டச்சத்து மிகுந்ததுள்ளது. இதில் 20 முதல் 40 சதவிகித உலர் பொருள், 10 முதல் 15 சதவிகித புரதச் சத்து மற்றும் 40 முதல் 65 சதவிகித செரிக்கக்கூடிய ஊட்டச்சத்துகள் உள்ளன. சூபாபுல், அகத்தி போன்றவை 30 சதவிகிதப் புரதச் சத்து அளிக்கக்கூடியவை. இதை தீவனத்தின் ஒரு பகுதியாகப் பயன்படுத்துவதன் மூலம் தீவனச் செலவு கணிசமாகக் குறைகிறது. வன்னி, கருவேலம் மற்றும் கொடுக்காப்புளி போன்றவை வறண்ட பகுதிகளிலும் நன்றாக வளரக் கூடியவை. இவற்றின் தழைகள், காய்கள் ஆடுகளின் தீவனத் தேவையை நிறைவேற்றுகின்றன. மரங்களின் காய்களும் புரதச்சத்து மிகுந்து காணப்படுகின்றன. மரத்தழைகளில் சுண்ணாம்புச் சத்து மற்ற தீவனங்களைக் காட்டிலும் இரண்டிலிருந்து மூன்று மடங்கு அதிகமாக உள்ளது. உயிர்ச்சத்து ‘ஏ’ தேவைக்கு மேல் அதிகமாக கிடைக்கின்றது. அகத்தி, முருங்கை, ஆச்சா போன்றவை இரும்புச்சத்தை அதிகம் கொண்டுள்ளன. இதில் உள்ள ஊட்டச்சத்து விகிதங்கள் வறட்சியினால் பாதிக்கப்படுவதில்லை.

ஆட்டுக்குட்டிகள்
ஆட்டுக்குட்டிகள்


நார்ச்சத்தைக் குறைவாகவும், புரதச்சத்தை அதிகமாகவும் கொண்ட சூபாபுல், அகத்தி போன்றவற்றை வெயிலில் உலர வைத்து, அரைத்து கோழித் தீவனத்தின் ஒரு பகுதியாகச் சேர்ப்பதன் மூலம் தீவனச் செலவு குறைவதோடு, முட்டையின் மஞ்சள் கரு அதிக மஞ்சள் நிறம் கொண்டதாக விளங்குகிறது. கோழிகளுக்கு, அகத்தியை நறுக்கி வழங்குவதன் மூலம் கோடை வெப்பத்தின் பாதிப்பைத் தவிர்க்கலாம். மரத் தழைகளில் இயற்கையாகவே சிறிய அளவில் நச்சுப் பொருள்கள் உள்ளன. இதைப் போக்க, வெயிலில் சற்று காய வைத்துக் கொடுத்தால் அந்த நச்சுத் தன்மை நீங்கும்.’’

புறாபாண்டி
புறாபாண்டி


‘‘தரமான செடி முருங்கை விதை வேண்டும். எங்கு கிடைக்கும்?’’

@ஆர்.கணேஷ்

‘‘பெரியகுளம் தோட்டக்கலை ஆராய்ச்சி மையம் உருவாக்கிய பி.கே.எம்.1 என்ற செடி முருங்கை ரகம் பரவலாகச் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த ரகம் வடிகால் வசதியுள்ள அனைத்து வகையான மண் வகைக்கும் ஏற்றதாக உள்ளது. 160 முதல் 170 நாள்களில் காய்களை அறுவடை செய்யலாம். ஒரு செடியிலிருந்து ஆண்டுக்கு சுமார் 275 காய்கள் கிடைக்கும். இதன் எடை 33 முதல் 35 கிலோ வரை இருக்கும்.

இச்செடி முருங்கையை மறுதாம்பு பயிராக 3 ஆண்டுகள் வரை பராமரிக்கலாம். முருங்கை விதைகளிலிருந்து எடுக்கப்படும் ‘பென் ஆயில்’ என்ற எண்ணெய், முருங்கை இலைப்பொடி உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங் களிலிருந்து கூட, பெரியகுளம் வந்து செடி முருங்கையை விதையை வாங்கிச் செல்கிறார்கள். முன்பதிவு அடிப்படையில் விதை வழங்கப்படுகிறது.’’


தொடர்புக்கு, தோட்டக்கலை கல்லூரி
மற்றும் ஆராய்ச்சி நிலையம்,
பெரியகுளம்,
தேனி மாவட்டம்- 625 604.
தொலைபேசி: 04546 231726.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism