Published:Updated:

தண்ணீர் தேங்கி நிற்கும் நிலத்தில் மரங்கள் வளருமா?

புறா பாண்டி
பிரீமியம் ஸ்டோரி
புறா பாண்டி

நீங்கள் கேட்டவை

தண்ணீர் தேங்கி நிற்கும் நிலத்தில் மரங்கள் வளருமா?

நீங்கள் கேட்டவை

Published:Updated:
புறா பாண்டி
பிரீமியம் ஸ்டோரி
புறா பாண்டி

‘‘எங்கள் நிலம் ஏரிக்கு அருகில் உள்ளது. மூன்று மாதங்கள் நிலத்தில் தண்ணீர் நிற்கும். இதில் தேக்கு, மலைவேம்பு... போன்ற மரப்பயிர்களைச் சாகுபடி செய்ய முடியுமா?’’

ர.இந்திரன், கரசங்கால்.

மேட்டுப்பாளையத்தில் உள்ள வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மரச் சாகுபடித்துறையின் பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர், முனைவர் பாலசுப்பிர மணியன் பதில் சொல்கிறார்

‘‘தண்ணீர் தேங்கி நிற்கும் நிலத்தில் இரண்டு பிரச்னைகள் இருக்கும். மரத்தின் வேர் சுவாசிக்க முடியாது. இதனால், வேர் அழுகல் ஏற்பட்டு மரம் பாதிக்கப்படும். அடுத்து, நிலத்துக்குக் கீழே பாறை களில் உள்ள உப்பு , நிலத்தடி நீர் அழுத்தம் ஏற்படும்போது மேலே வந்துவிடும். இதன் மூலம் நிலம் உப்புத்தன்மை அடைந்துவிடும். ஆகையால், தண்ணீர் நிற்கும் நிலத்துக்கு இந்த இரண்டு பிரச்னைகளும் பெரிய சவால்தான். சரி, நாவல், நீர் மருது, சுரப்புன்னை மரங்களை வளர்க்கலாம் என்றால், அதன் மூலம் பெரிய அளவு வருமானம் இருக்காது. இதைத்தாண்டி இன்னொரு மரமும் உள்ளது. கருவேலமரம். பல ஆண்டுகளுக்கு முன்பு சமூகக் காடுகள் வளர்ப்புத் திட்டத்தைச் செயல்படுத்தும்போது, ஏரி, குளங்களில் இந்த மரத்தைத்தான் நடவு செய்தார்கள். எவ்வளவு தண்ணீர் நின்றாலும் தாக்குப்பிடிக்கும். இதுவும்கூடப் பொருளா தாரரீதியாக வருமானம் தராது. தண்ணீர் தேங்கும் நிலத்தில் மூங்கில் வளரும். ஆனால், இதன் விற்பனை நிலையில்லாமல் உள்ளது.

மரங்கள்
மரங்கள்

தேக்கு மரம் பார்ப்பதற்கு வலிமையான மரம். தண்ணீர் தேங்கி நின்றால், சில நாள்களில் இலைகளைத் தீயிட்டுக் கொழுத்தியதுபோலக் காய்ந்துவிடும். தண்ணீர் நிற்காத கரைப்பகுதிகளில்தான், தேக்கு செழித்து வளரும். மலைவேம்புக்கு நீர் நிறைய வேண்டும். தண்ணீர் அதிகம் நின்றாலும் பாதிப்பு; தண்ணீர் கொடுக்க வில்லை என்றாலும் மரம் சரியாக வளராது. ஆகையால், உயர் மதிப்புக் கொண்ட மர வகைகளில் தண்ணீர் தேங்கி நிற்கும் நிலங்களுக்கு ஏற்றவை அல்ல. ஒரு நிலத்தில் 18 செ.மீ அளவுக்குத் தண்ணீர் தேங்காமல் வடிகால் வசதி ஏற்படுத்தக்கூடிய நிலம்தான் மரப்பயிர்கள் சாகுபடி செய்ய ஏற்றவை. மகோகனி மரங்கள் தண்ணீர் நிற்கும் நிலங்களில் தாக்குப்பிடித்து வளருகின்றன என்று விவசாயிகள் சொல்லி வருகிறார்கள். அறிவியல்பூர்வமாக இது நிரூபணம் செய்யவில்லை. ஆகையால், இதற்குத் தக்கபடி மரப்பயிர்களைச் சாகுபடி செய்யவும். மரப்பயிர்கள் என்பது பல்லாண்டுக் காலம் வாழ்ந்து பலன் கொடுக்கக்கூடியது. ஆகையால், உங்களைப் போலத் தேடுதலுடன் அலசி ஆராய்ந்து மரப்பயிர்களைச் சாகுபடி செய்பவர்களுக்கு நஷ்டம் வர வாய்ப்புகள் குறைவு. கூடுதல் விவரங்களுக்கு எங்கள் துறையைத் தொடர்பு கொள்ளவும்.’’

 பாலசுப்பிரமணியன்
பாலசுப்பிரமணியன்

தொடர்புக்கு, முனைவர் பாலசுப்பிரமணியன்,

செல்போன்: 94435 05845.

இ-மெயில்: balafcri@gmail.com‘‘பசுங்கன்றுகள் பிறந்த மூன்று, நான்கு மாதங்களில் இறந்துவிடுகின்றன. என்ன காரணம்... தடுப்பது எப்படி?’’

சி.குருசாமி, எட்டயபுரம்.

- கால்நடைப் பராமரிப்புத்துறையின் முன்னாள் கால்நடை மருத்துவர் ஜெகத்நாராயணன் பதில் சொல்கிறார்.

‘‘ ‘இன்றைய கன்று நாளைய பசு’ என்று சொல்வோம். இளங்கன்றுகள் இறப்பதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். இறந்த கன்றுகளைப் பரிசோதித்துப் பார்த்துதான் அதைப் பற்றிய முடிவுக்கு வர முடியும். ஒருவேளை நோய் எதிர்ப்பு சக்தி இன்மை மற்றும் நோய்த் தொற்று மூலமாக இறக்கின்றன என்றால்... ஒரு சில விஷயங்களைக் கடைப்பிடிப்பதன் மூலமாக அதைத் தடுக்க முடியும். அதாவது, கன்று பிறந்தவுடன், போதுமான அளவுக்குச் சீம்பால் கொடுக்கப் பட வேண்டும். அப்போதுதான், நோய் எதிர்ப்பு சக்தியுடன் ஆரோக்கியமாகக் கன்று வளரும். முதல் மூன்று நாள்கள் கிடைக்கும் சீம்பாலை, மனிதர்கள் குடிப்பதற்காக எடுத்துக்கொள்வது பல இடங்களில் வழக்கமாக இருக்கிறது. இப்படிச் செய்தால்... கன்று நோஞ்சானாகி, காலப்போக்கில் இறந்துவிடும்.

மாடுகள்
மாடுகள்கன்று போட்ட ஒரு வாரத்தில் கட்டாயம் குடற்புழு நீக்க மருந்து கொடுக்க வேண்டும். பண்ணையில் சாணம், சிறுநீர், தீவனக் கழிவுகளை உடனுக்குடன் அகற்றிக் கொண்டே இருக்க வேண்டும். இல்லா விட்டால், அதன் மூலம் நோய்க்கிருமிகள் உருவாகி, கன்றுகளுக்கு வெள்ளைக் கழிச்சல் ஏற்படும். இதைக் கவனிக்காமல் விட்டு விட்டால், கன்றுகள் சில நாள்களில் இறந்துவிடும்.

மாடு சினையாக இருக்கும்போதே, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பலரும், ‘மாடு சினையாக இருக்கும்போது தடுப்பூசி போடக் கூடாது’ என நினைக்கிறார்கள். ஆனால், 8 மாத சினைக்குப் பிறகு, தாராளமாகத் தடுப்பூசி போடலாம். கோமாரி, தொண்டை அடைப்பான் போன்ற நோய்கள் தாய், கன்றுகளைத் தாக்காமல் இருக்க, இந்தத் தடுப்பூசிகள் அவசியம்.

சினை மாட்டுக்கு 8-ம் மாதம் குடற்புழு நீக்க மருந்து கொடுக்கலாம். குடற்புழு நீக்க மருந்து தொப்புள் கொடி மூலம் கன்றுக்கும் செல்லும். இதனால், கருவில் உள்ள கன்று ஆரோக்கியமாக இருக்கும். இந்த நடைமுறை களையெல்லாம் பின்பற்றினாலே, கன்றுகளின் இறப்பை பெரும்பாலும் தடுத்துவிட முடியும். எதற்கும்... அடுத்த தடவை கன்று போட்டவுடன், அருகில் உள்ள கால்நடை மருத்துவரை அழைத்து வந்து, ஆலோசனை பெறவும்.’’

புறாபாண்டி
புறாபாண்டி

‘‘கிணற்றில் மீன் வளர்க்க விரும்புகிறோம். எந்த ரகம் ஏற்றது. எங்கு கிடைக்கும்?’’

ம.அன்பரசி, திண்டல்.

‘‘விவசாயத்துக்குப் பயன்படும் கிணற்று நீரில் மீன்கள் வளர்ப்பதால், பாசி, அழுக்குச் சேராமல் நீரும் சுத்தமாக இருக்கும். சுவையான மீனும் உணவாகக் கிடைக்கும்.

ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் உள்ள நுண் மீன்குஞ்சு உற்பத்தி மற்றும் வளர்த்தெடுத்தல் மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு கட்லா, ரோகு, மிர்கால், சாதா கெண்டை... போன்ற மீன்குஞ்சுகள் விற்பனை செய்யப்படுகின்றன. கிணற்றில் வளர்ப்பதற்கு ஏற்ற ரகங்கள் இவை. நிலத்தில் குளம் அமைத்து மீன் வளர்க்கவும், இந்த மையத்தில் வழிகாட்டுகிறார்கள்.

தொடர்புக்கு,

தொலைபேசி: 04295 240646.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism