Published:Updated:

திறந்தவெளியில் கொய்மலர்... நாட்டுக்கோழி அடை நுட்பம்... எலுமிச்சை மதிப்புக்கூட்டல்... - புறா பாண்டி

புறா பாண்டி
பிரீமியம் ஸ்டோரி
புறா பாண்டி

நீங்கள் கேட்டவை

திறந்தவெளியில் கொய்மலர்... நாட்டுக்கோழி அடை நுட்பம்... எலுமிச்சை மதிப்புக்கூட்டல்... - புறா பாண்டி

நீங்கள் கேட்டவை

Published:Updated:
புறா பாண்டி
பிரீமியம் ஸ்டோரி
புறா பாண்டி

‘‘தென்னையில் ஊடுபயிராகக் கொய்மலர் சாகுபடி செய்யலாம் என்று கேள்விப்பட்டோம். இது உண்மையா? பசுமைக் கூடாரம் இல்லாமல் கொய் மலர் சாகுபடி சாத்தியமா?’’

@ம.சு.நீலாவதி

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலைப் பகுதியில் கொய்மலர் சாகுபடி செய்து வரும் சசிக்குமார் பதில் சொல்கிறார்.

‘‘தென்னையில் மட்டுமல்ல, வாழையிலும், திறந்த வெளியிலும் ஹெலிகோனியா என்ற வகைக் கொய்மலரைச் சாகுபடி செய்யலாம். கடந்த 15 ஆண்டுகளாக இதைச் சாகுபடி செய்து வருகிறேன். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் தோவாளை மலர் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள்தான், இதை எனக்கு அறிமுகம் செய்தார்கள். ‘இதுவும் வாழை மாதிரியான ஒரு தாவரம்தான். இலையும்கூட அதே மாதிரி வரும். அதாவது கொய்மலர் என்று சொல்லப்படுகிற அலங்காரப் பூவுக்காக இது பயன்படுகிறது. இதற்கு தனியாக பசுமைக் குடில் அமைக்கத் தேவையில்லை. தென்னை, வாழைக்கு ஊடுபயிராகவும், தனிப்பயிராகவும் செய்யலாம்’ என்று சொன்னார்கள்.

கொய்மலர்
கொய்மலர்

முன்பு ஹெலிகோனியா ரகத்தைக் கொலம்பியா நாட்டிலிருந்து இறக்குமதி செய்தார்கள். இப்போது, நம் நாட்டி லேயே கிடைக்கிறது. ரகத்தைப் பொறுத்து 8 ரூபாய் முதல் 800 ரூபாய் வரை கன்றின் விலை உள்ளது. ஒரு தடவை செடிகளை வாங்கி நடவு செய்தால் போதும். அதிலிருந்து பக்கச் செடிகள் முளைத்து வரும். இதை எடுத்து, நடவு செய்துகொள்ள முடியும்.

நடவு செய்த 3 மாதங்களில் பூ பூக்கத் தொடங்கும். நல்ல மகசூல் கிடைக்க ஓர் ஆண்டு ஆகும். வாழை போல அழிவே இல்லை. பக்கக் கன்றுகள் மூலம் செடிகள் பெருகிக்கொண்டே இருக்கும். என் தோட்டத்தில் இருக் கும் ஹெலிகோனியா செடிகளை இதுவரை எந்த நோயும் தாக்கிய தில்லை. ‘வெளவால்’ மட்டும் ‘பூ’வின் நிறத்தால் கவரப்பட்டு அடிக்கடி ‘பூ’வைக் கடிக்கும். இதனால் பெரிய பாதிப்பு இருக்காது.

இந்த மலர்களுக்கு 5 ரூபாயிலிருந்து 50 ரூபாய் வரை விலைக் கிடைக் கிறது. தனிப்பயிராகச் சாகுபடி செய்த தோட்டத்தில் மாதம்தோறும் சராசரியாக 50,000 ரூபாய் வருமானம் கிடைக்கிறது. ஊடுபயிர் என்றால் இதில் பாதிக் கிடைக்கும். பெங்களூரு, டெல்லி, மும்பை, கொல்கத்தா... போன்ற பெரு நகரங்களில் உள்ள ஹோட்டல்களில் மலர் அலங்காரத்துக்குப் பயன் படுத்துகிறார்கள். புதன், வெள்ளிக்கிழமை என் தோட்டத்தில் உள்ள மலர்களை அறுவடை செய்து, டெல்லி செல்லும் நிஜாமுதீன் ரயிலில் அனுப்பி வருகிறேன்.

சசிக்குமார்
சசிக்குமார்

அங்குள்ள வியாபாரிகள், சிக்கல் இல்லாமல் பணம் கொடுத்து வருகிறார்கள். சில சமயம் பெங்களூருவுக்கும் அனுப்புவேன்.

இந்த வியாபார வாய்ப்புகளை நானே உருவாக்கிக் கொண்டேன். தமிழ்நாட்டில் காற்றில் ஈரப்பதம் இருக்கும் பகுதிகளில் இதைச் சாகுபடி செய்யலாம். ஆனால், அகலக் கால் வைக்காமல், சிறிதவு சாகுபடி செய்து, விற்பனை வாய்ப்பை உருவாக்கிக் கொள்ளவும். தேவை அதிகரிக்கும்போது, சாகுபடி பரப்பையும் அதிகரித்துக்கொள்ளுங்கள்.’’

தொடர்புக்கு, சசிக்குமார், செல்போன்: 94876 46213.

‘‘நாட்டுக்கோழி வளர்த்து வருகிறோம். 20 முட்டைகள் அடை வைத்தால் 5 முட்டைகள்கூட பொரிப்பதில்லை என்ன காரணம்? இதைச் சரி செய்வது எப்படி?’’

சி.மணிகண்டன், ஓமலூர்.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியர் முனைவர் சிவகுமார் பதில் சொல்கிறார்.

‘‘தூய நாட்டுக்கோழி முட்டைக் கும், இறைச்சிக்கும் நல்ல விற்பனை வாய்ப்பு உள்ளதால், நாட்டுக்கோழிப் பண்ணைகள் அதிகரித்து வருகின்றன. ஆனால், கோழி வளர்ப்பை இயந்திரத் தனமாகப் பார்க்கும் போக்கும் பெருகியுள்ளது. ஒரு தாய்க்கோழி 12 - 14 முட்டைகளை அடைகாக்கும் தன்மை கொண்டது. நம்மிடம் நிறைய முட்டைகள் உள்ளன என்று அதிக எண்ணிக்கையில் வைக்கக் கூடாது. உதாரணத்துக்கு சரியான தொழில்நுட்பத்தை பயன்படுத்தவில்லை என்றால், 12 முட்டைகளை அடைகாக்க வைத்தால், அதில் 5 குஞ்சுகள்தான் பொரிக்கும். நான் இப்போது குறிப்பிடும் தொழில்நுட்பங்களைப் சரியாக பின்பற்றினால், அதிகபட்சம் 10 குஞ்சுகள் வரை கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. பொரிக்கும் குஞ்சுகளும் தரமாக இருக்க வேண்டும் என்றால், அதற்குச் சில தொழில் நுட்பங்களைப் பின்பற்ற வேண்டும்.

சிவகுமார்
சிவகுமார்

8 கோழிக்கு 1 சேவல் என்ற அளவில் இருக்க வேண்டும். இந்தச் சேவல் வேறு குழுவிலிருந்து தேர்வு செய்ய வேண்டும். 6 மாத வயதுள்ள சேவலும், 5 மாத வயதுள்ள கோழியாகவும் இருக்க வேண்டும். கோழி களுக்கும் சேவலுக்கும் புரதம், உயிர்ச் சத்துகள் நிறைந்த தீவனங்களைக் கொடுக்க வேண்டும். அதிகபட்சம், 7 நாள்களுக்குள் வைத்த முட்டைகளைத்தான் அடைக்குப் பயன்படுத்த வேண்டும். இதற்கு முன்பு உள்ள முட்டைகளைப் பயன்படுத்தினால், கருப் பிடிக்கும் வாய்ப்பு குறைவாகவே இருக்கும். அடைக்குச் சேகரித்துள்ள முட்டைகளை ஒரு மண் பானையில் மணலைக் கொட்டி அதில் வைக்க வேண்டும். பானைக்கு வெளியில் பருத்தித் துணியைக் கட்டி, அதில் நீர் தெளித்து வந்தால், முட்டைகள் சீரான வெப்ப நிலையில் இருக்கும்.

இப்படிச் செய்ய வாய்ப்பு இல்லாதவர்கள், வீடுகளில் பயன்படுத்தும் குளிர்சாதனப் பெட்டியிலும் முட்டையைச் சேமிக்கலாம். அதாவது, காய்கறிகள் கொட்டி வைக்கப் பயன்படுத்தும் அடிப் பகுதியில் முட்டையைப் பாதுகாத்து வைக்கலாம். அடை வைக்கப் பயன்படுத்தும் முட்டைகளை வாகனங்களில் கொண்டு சென்றால், கருப் பிடிக்கும் சதவிகிதம் குறையும் என்பதை மறந்துவிட வேண்டாம்.

நாட்டுக்கோழிகள்
நாட்டுக்கோழிகள்

அடைவைப்பதற்காக எடுத்து வைக்கும் முட்டைகளை, மண் பானையில் மணலைக் கொட்டி சேகரிக்கவேண்டும். பானைக்கு வெளியில் பருத்தி துணியைக் கட்டி, அதில் நீர் தெளித்து வந்தால், முட்டைகள் சீரான வெப்ப நிலையிலேயே இருக்கும். இப்படிச் செய்ய வாய்ப்பு இல்லாதவர்கள், வீடுகளில் பயன்படுத்தும் குளிர்சாதனப் பெட்டியிலும் முட்டையைச் சேமிக்கலாம். அதாவது, காய்கறிகள் கொட்டி வைக்கப் பயன்படுத்தும் கடைசிப் பகுதியில் முட்டையினைப் பாதுகாத்து வைக்கலாம். அடை வைக்கப் பயன்படுத்தும் முட்டைகளை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்துக்கு வாகனங்களில் கொண்டு சென்றால், கருப் பிடிக்கும் சதவிகிதம் குறையும் என்பதை மறந்துவிட வேண்டாம்.

அடை வைக்க இரும்புச் சட்டியில் மணலை பரப்பி அதில் 12-14 முட்டைகளை மட்டுமே வைத்து, தாய்க்கோழியை விடவேண்டும். அடைக்கு அருகில், தீவனத்தையும் தண்ணீரையும் கட்டாயம் வைக்கவும். தினமும் ஒரு மணி நேரம் தாய்க்கோழியை வெளியில் மேய விடுவது இன்னும் சிறப்பானது. இப்படிச் செய்தால், சரியாக 21-ம் நாள் குஞ்சுகள் பொரிந்திருக்கும்.’’

தொடர்புக்கு, முனைவர் சிவகுமார், செல்போன்: 99943 55021.

புறாபாண்டி
புறாபாண்டி

‘‘எலுமிச்சை சாறு பிழிந்து மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய விரும்புகிறோம். இதற்குப் பயிற்சி எங்குக் கிடைக்கும்?’’

உ.காஜாமைதீன், தலைவர், விவசாய மக்கள் சபை, எட்டயபுரம்.

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம் உள்ளது.

இங்கு எலுமிச்சை, தக்காளி, பப்பாளி மட்டுமல்ல; நோனி பழத்தை மதிப்புக்கூட்டவும் கட்டண அடிப்படையில், பயிற்சி வழங்கி வருகிறார்கள். எலுமிச்சை உள்ளிட்ட பதப் படுத்தப்பட்ட பொருள்களைத் தயாரித்து விற்பனை செய்ய வேண்டும் என்றால், ‘ஃபுட் சேப்டி அண்டு ஸ்டாண்டர்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா’ (Food Safety and Standards Authority of India) என்ற அமைப்பிடம் அனுமதியும், சான்றும் பெற வேண்டும். மாவட்டத் தலைநகரங்களில் இந்தத் துறையின் அலுவலகங்கள் உள்ளன. இந்த அமைப்பிடம் இருந்து எப்படிச் சான்றிதழ் பெற வேண்டும் என்பதற்கும் வழிகாட்டுதலும் வழங்கி வருகிறார்கள்.’’

தொடர்புக்கு: பேராசிரியர் மற்றும் தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண் பொறியியல் கல்லூரி, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்-3.

தொலைபேசி: 0422 6611340/6611268.