Published:Updated:

வெடிக்கும் பலா… தீர்வு இதோ!

புறாபாண்டி
பிரீமியம் ஸ்டோரி
புறாபாண்டி

நீங்கள் கேட்டவை

வெடிக்கும் பலா… தீர்வு இதோ!

நீங்கள் கேட்டவை

Published:Updated:
புறாபாண்டி
பிரீமியம் ஸ்டோரி
புறாபாண்டி

‘‘எங்கள் பலா மரத்தில் காய்க்கும் பழங்கள் வெடித்துவிடுகின்றன. எதனால், இப்படி ஏற்படுகிறது. இதைச் சரி செய்வது எப்படி?’’

ராஜ்குமார், திருப்பூர்.

திருச்சி பாசன மேலாண்மை பயிற்சி மையத்தின் பேராசிரியர் மற்றும் இணை இயக்குநர் முனைவர் இளங்கோவன் பதில் சொல்கிறார்.

‘‘பலாப் பழங்கள் வெடிப் பதற்குக் காரணம் போரான் மற்றும் இரும்புச் சத்துகள் பற்றாக்குறைதான். பெரும்பாலும், இந்தப் பற்றாக்குறை, சுண்ணாம்புப் பாறைகள் உள்ள பகுதிகளில்தான் ஏற்படும். மேல் மட்டத்தில் மணல் சாரியாகவும், செம்மண்ணாகவும் இருக்கும். ஐந்து அடிக்குக் கீழே பார்த்தால், சுண்ணாம்புப் பாறைகள் தெரியும். ஆரம்பத்தில் இந்தப் பிரச்னை ஏற்படாது. ஐந்து ஆண்டுகளுக்கு மேல்தான், பழங்கள் வெடிக்கும். அப்போது, மரங்களின் வேர் சுண்ணாம் புப் பாறையைத் தொட்டுக்கொண் டிருக்கும். இதனால், மரங்களுக்கு மண்ணில் உள்ள போரான், இரும்புச் சத்துகளை இழுத்துக்கொள்ள முடியாத நிலை உருவாகும்.

பலா
பலா

இந்தப் பிரச்னைக்குத் தீர்வு உள்ளது. மரம் ஒன்றுக்கு, ஆண்டு தோறும் 50 கிலோ மட்கிய எரு வைக்க வேண்டும். இன்னும் கூடுதல் பலன் கிடைக்க வேண்டுமென்றால், 5 கிலோ மண்புழு உரத்தையும் சேர்த்து வைக் கலாம். மாதம் ஒரு முறை 20 லிட்டர் தண்ணீரில் 600 மி.லி பஞ்சகவ்யா கரைசலை, நீரில் கலந்து பாசனம் செய்ய வேண்டும். இதன் மூலம் போரான், இரும்புச் சத்துகள் பற்றாக் குறையைப் போக்கமுடியும். மரத்துக்கு நன்மை செய்யும் நுண்ணுயிர்கள், நுண்ணூட் டச் சத்துகளை எடுத்துக்கொள்ளும் அளவுக் குக் கரைத்துக் கொடுக்கும். இதனால், நுண் ணூட்டச்சத்துப் பற்றாக்குறை ஏற்படாது.

ஆகையால், முடிந்தவரை இயற்கை உரங்களைக் கொடுத்து, நுண்ணுயிர்களைப் பெருக்கிவிடுங்கள். இதுதான் நிரந்தரமான தீர்வு. சிலர், செயற்கை நுண்ணூட்டச் சத்துகளை வாங்கிப் பயன்படுத்துவார்கள். இது ரசாயனம் மட்டுமல்ல, நிரந்தரமான தீர்வையும் கொடுக்காது. இயற்கை உரங்கள் தான், நுண்ணூட்ட குறைப்பாட்டைப் போக்க சிறந்தது. அடுத்து, பலா மரத்தின் இலைகள் கொட்டுவதால், மரத்தின் அடியில் குப்பையாக உள்ளது என்று வெளியில் அள்ளிக் கொட்டிவிடாதீர்கள். இதை மரத்தின் அடியில் கொட்டி வைத்தால், மட்கி உரமாக மாறிவிடும். குப்பை நல்லது.

மேலும், நன்றாகச் சூரிய ஒளி கிடைக்கும் வகையில் ஆண்டுக்கு ஒருமுறை கட்டாயம் கவாத்துச் செய்ய வேண்டும். ஒரு கொத்தில் இரண்டு காய்கள் மட்டும் இருந்தால்தான் தரமான பெரிய பழங்கள் கிடைக்கும். அதனால், கொத்துக்கு இரண்டு காய்களை மட்டும் வைத்துக்கொண்டு, கூடுதலாக உள்ள காய்களை, பிஞ்சாக இருக்கும்போதே வெட்டி எடுத்து விட வேண்டும். பிஞ்சுக் காய்களைக் கறியாகச் சமைத்துச் சாப்பிடலாம். இப்படிச் செய்யும்போது, தரமான பழங்கள் கிடைக்கும்.’’

தொடர்புக்கு, முனைவர் இளங்கோவன்,

செல்போன்: 98420 07125.

‘‘அயிரை மீன் வளர்க்கலாமா? எத்தனை மாதங்களில் அறுவடை செய்யலாம்?’’

மு.பானுமதி, வாலாஜாபாத்.

தமிழ்நாடு டாக்டர். ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் அங்கமான, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வண்ண மீன் வானவில் தொழில்நுட்பப் பூங்காவின் பேராசிரியர் முனைவர் ராவணேஸ்வரன் பதில் சொல்கிறார்.

புறா பாண்டி
புறா பாண்டி


‘‘மீன்கள் ஒவ்வொன்றும் ஒருவிதம். அதிலும் அயிரை மீன் தனி ரகம். அயிரை மீன் மிகவும், சிறிய உருவ அமைப்பைக் கொண்டது. அதிகபட்சம் 2 - 3 கிராம் அளவுக்குதான் எடையிருக்கும். பெரும்பாலும், இதை யாரும் தனியாக வளர்ப்பதில்லை. கெண்டை மீனுடன், கூட்டாகத்தான் வளர்ப்பார்கள். காரணம், அயிரை மீன் குளத்தின் அடியில்தான் இருக்கும். அதுவும், மண்ணுக்குள் புதைந்துகொள்ளும். இதனால், மேல் மட்ட நீரில் வளரும் கெண்டை மீன் ரகத்தைச் சேர்த்து வளர்ப்பதால் கூடுதல் லாபம் கிடைக்கும். அயிரை மீனின் வயது 4 மாதங்கள். இதற்கு மேல் வளர்த்தாலும், எடை கூடாது, வளர்ச்சியும் இருக்காது. எனவே, நான்கு மாதத்துக்குள், இதை அறுவடை செய்து விற்பனை செய்ய வேண்டும். குறுகிய காலத்தில் லாபம் பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் அயிரை மீன் வளர்ப்பைத் தேர்ந்தெடுக்கலாம். அயிரை மீன்கள் நீரோட்டத்தை விரும்பும். அதைக் குளத்தில் வளர்க்கும்போது, செயற்கை நீரோட்டத்தை உருவாக்க வேண்டும். நாம் வீட்டுக் குளியல் அறையில் பயன்படுத்தும் ஷவர்களை மீன் குளத்தில் பொருத்தி, காலையும் மாலையும் அதிலிருந்து நீர் விழும் படி செய்ய வேண்டும். தண்ணீர் கொட்டும் போது, அயிரை மீன்கள் துள்ளி விளையாடும். இதன் மூலம் மீன்களின் வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும். குஞ்சு பொரிக்கவும் தொடங்கும். இதனால், நான்கு மாதங்களுக்கு ஒரு முறை மீன்களை, தொடர்ச்சியாக அறுவடை செய்துகொண்டே இருக்கலாம்.

அயிரை மீன்கள்
அயிரை மீன்கள்

மற்ற மீன்களைப்போல, அயிரை மீன்கள் நேரடியாக உணவுப் பொருள்களை உட்கொள்ளாது. மட்கிய உணவுப் பொருள் களை மட்டும்தான் உண்ணும். இதற்குத் தக்கபடி தீவனங்களைக் கொடுக்க வேண்டும். உருவத்தில் சிறியதாக இருந்தாலும், அயிரை மீன் உண்பதற்கு மிகவும் சுவையானதாக இருக்கும். இதனால், அயிரை மீனுக்கு எப்போதும் நல்ல விலை கிடைத்து வருகிறது. இப்போது, கிலோ 1,000 - 1,500 ரூபாய் வரை விற்பனையாகிறது. எனவே, தாராளமாக அயிரை மீன் வளர்ப்பில் ஈடுபடலாம். மீன் வளர்ப்பில் ஈடுபடும் முன்பு பல பண்ணைகளுக்கு நேரில் சென்று பார்க்கவும். மீன் வளர்ப்பு பயிற்சிகளிலும் கலந்து கொள்ளவும். இதன் மூலம், மீன் வளர்ப்பில் நீங்கள் லாபம் ஈட்டும் சதவிகிதம் கூடுதலாகும். எங்கள் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையங்களின் மூலமாகவும் மீன் வளர்ப்புச் சம்பந்தமான பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறோம். ஆர்வம் உள்ளவர்கள் பங்கு கொண்டு பயன்பெறலாம்.’’

தொடர்புக்கு, செல்போன்: 94446 94845.

இளங்கோவன், ராவணேஸ்வரன்
இளங்கோவன், ராவணேஸ்வரன்


‘‘விவசாயப் பணிகளுக்காக தேசிய மய மாக்கப்பட்ட வங்கியில் கடன் வாங்கினோம். வட்டி கணக்கீடு முறையாகச் செய்யாமல், கூடுதல் தொகையைக் கட்டச் சொல்கிறார்கள். இந்தப் பிரச்னைக்கு யாரிடம் முறையீடு செய்வது?’’

- @ஆர்.சங்கரன்,

‘‘விவசாயிகள் கடன் கேட்டு, வங்கிகளுக்குச் சென்றால் பெரும்பாலான வங்கி மேலாளர் கள் சரியான தகவல் கொடுப்பதில்லை. முறையாகக் கடனை திரும்பச் செலுத் தினாலும் வங்கி விதிமுறைகளைப் பயன் படுத்தி, வட்டிக்கு வட்டி என்று விவசாயிகள் மீண்டும் கடன் கேட்டு வந்துவிடாத அளவுக்கு அச்சுறுத்துவதை வாடிக்கையாக வைத் துள்ளார்கள். இது போன்ற பிரச்னைக்கு ரிசர்வ் வங்கி மூலம் செயல்படும் வங்கி குறைத்தீர்ப்பாளரை அணுகலாம்.

இங்கு கூட்டுறவு வங்கி குறித்த புகார் களையும் தெரிவிக்கலாம். கணக்கு தொடங்க மறுத்தல், கணக்கு முடிக்க மறுத்தல், முன்னறிவிப்பின்றிச் சேவை கட்டணம் வசூலித்தல், வைப்புத்தொகை மீதான வட்டியில், இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவை பின்பற்றாமல் இருத்தல்... என்று வங்கிகளின் சேவை குறைபாடுகள் குறித்துப் புகார் தெரிவிக்கலாம்.’’

தொடர்புக்கு, வங்கி குறை தீர்ப்பாளர், இந்திய ரிசர்வ் வங்கி, 16, கோட்டை சரிவு, ராஜாஜி சாலை, சென்னை 600001.

தொலைபேசி: 044 2539 5964.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism