நாட்டு நடப்பு
Published:Updated:

தண்டோரா

தண்டோரா
பிரீமியம் ஸ்டோரி
News
தண்டோரா

அறிவிப்பு

மீன் தீவனம் தயாரிப்பு

தூத்துக்குடி மீன் வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் அக்டோபர் 31-ம் தேதி ‘பண்ணைச் சார்ந்த மீன் தீவனம் தயாரித்தல்’ பயிற்சி நடைபெற உள்ளது. மீன் தீவனம் தயாரிப்பு, தரக்கட்டுப்பாடு, செலவினங்களின் கணக்கீடு... உள்ளிட்டவை குறித்து வல்லுநர்கள் பயிற்சி அளிப்பார்கள். கட்டணம் ரூ.300. முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு, செல்போன்: 94422 88850.

மீன்
மீன்
மூலிகை
மூலிகை

மூலிகை முற்றம்

திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் தெப்பக்குளம் அருகிலுள்ள சித்தர் அறிவியல் கலைக்கூடத்தில் நவம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் ‘மூலிகை முற்றம்’ பயிற்சி நடைபெற உள்ளது. உடல் நலன் காக்கும் மூலிகை மருத்துவம், மூலிகைகளை அடையாளம் காணல், கைமருந்து செய்முறை, மூலிகைத்தோட்டம் அமைத்தல், அஞ்சறைப்பெட்டிக்கடை (நாட்டு மருந்துக்கடை) நடத்துதல்... போன்றவற்றைக் குறித்துச் சித்த மருத்துவர் மைக்கேல் செயராசு பயிற்சி கொடுக்கவிருக்கிறார். தங்குமிடம், பயிற்சி கையேடு, காலை, மாலை தேநீர், பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும்.

பயிற்சிக் கட்டணம் ரூ.300 மட்டும். முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, செல்போன்: 98421 66097