Published:Updated:

தண்டோரா

அறிவிப்பு
பிரீமியம் ஸ்டோரி
அறிவிப்பு

அறிவிப்பு

தண்டோரா

அறிவிப்பு

Published:Updated:
அறிவிப்பு
பிரீமியம் ஸ்டோரி
அறிவிப்பு

கட்டணப் பயிற்சிகள்

மூலிகை முற்றம்

திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் தெப்பக்குளம் அருகிலுள்ள சித்தர் அறிவியல் கலைக்கூடத்தில் ஏப்ரல் 9, 10 ஆகிய தேதிகளில் ‘மூலிகை முற்றம்’ பயிற்சி நடைபெற உள்ளது. உடல் நலன் காக்கும் மூலிகை மருத்துவம், மூலிகைகளை அடையாளம் காணல், கைமருந்து செய்முறை, மூலிகைத்தோட்டம் அமைத்தல், அஞ்சறைப்பெட்டிக்கடை (நாட்டு மருந்துக்கடை) நடத்துதல்... போன்றவை குறித்து சித்த மருத்துவர் மைக்கேல் செயராசு பயிற்சி கொடுக்கவிருக்கிறார். தங்குமிடம், பயிற்சி கையேடு, காலை மாலை தேநீர், பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சிக் கட்டணம் ரூ.300 மட்டும். முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, செல்போன்: 98421 66097.

மூலிகை
மூலிகை

தாவரங்களுடன் பேசுவோம்

பெரம்பலூர் மாவட்டம், து.களத்தூர் எம்.எம் மூலிகை வனத்தில் ஏப்ரல் 10-ம் தேதி தேதி ‘தாவரங்களுடன் பேசுவோம்’ நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக பல அரிய மூலிகைத் தாவரங்களைப் பாதுகாத்து வரும் ‘மூலிகை நேசர்’ மோகன கிருஷ்ணன் பண்ணையில் நடக்கவுள்ள நிகழ்வில், ஆர்.ஶ்ரீதரன் நோடெல் அதிகாரி. மாநில மருத்துவ தாவர வாரியம். புதுச்சேரி, சித்த மருத்துவர் கே.இளவரசன், முன்னாள் சித்தா ஆலோசகர், ராஷ்டிரபதி பவன், புதுடெல்லி... உள்ளிட்டவர்கள் கலந்துகொள்கிறார்கள். மருத்துவ தாவரங்களும் அதன் பயன்களும், அறிய வேண்டிய தாவரங்கள் - 500... போன்றவை குறித்த அனுபவ உரைகள் இடம்பெறவுள்ளன. மதிய உணவு, மூலிகை தேநீர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயிற்சி கட்டணம் ரூ.500. முன்பதிவு முக்கியம்.

தொடர்புக்கு, செல்போன்: 74483 97805.

மூலிகை
மூலிகை

அசோலா தயாரிப்பு

கன்னியாகுமரி, விவேகானந்த கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில் ஏப்ரல் 9-ம் தேதி ‘அசோலா – கால்நடை தீவன தயாரிப்பு தொழில்நுட்பம்’, ஏப்ரல் 23-ம் தேதி ‘இயற்கை தாவரப் பூச்சிவிரட்டிகள் தயாரித்தல்’, 23–ம் தேதி ‘சமையல் அறை கழிவுகளிலிருந்து எரிவாயு தயாரித்தல்’ ஒவ்வொரு பயிற்சிக்கும் கட்டணம் ரூ.150 (உணவு தவிர்த்து). முன்பதிவு செய்து கொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04652 246296.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism