தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் உள்ள வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம், 2019-ம் ஆண்டு வடகிழக்குப் பருவமழைக்கான (அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை) மழை முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழைக்காக ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் பசிபிக் பெருங்கடலில் பூமத்தியரேகையை ஒட்டியுள்ள கடற்பகுதி யில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது.
கடலின் மேற்பரப்பு நீரின் வெப்பநிலை மற்றும் காற்றழுத்த குறியீடு ஆகியவற்றை உபயோகித்து ஆஸ்திரேலியா நாட்டிலிருந்து பெறப்பட்ட ‘மழை மனிதன்’ (Australian Rainman International V.4.3 Software) என்னும் கணினி மென்பொருள் மூலம் கணக்கிடப் பட்டது. தகவல்கள் கிடைக்கப் பெறாத இடங்களுக்கு ‘மழை மனிதன்’ கணினி மென்பொருளில் உள்ள தகவல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. சேகரிக்கப்பட்ட மழையைப் பற்றிய புள்ளி விவரங்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

அந்த ஆய்வின் விவரங்களை வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் 2019-ம் ஆண்டிற்கான வடகிழக்குப் பருவமழை கிடைக்கச் சராசரி மழையளவில் 60 சதவிகிதம் வாய்ப்பிருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் சராசரி மழையளவைக் காட்டிலும், அதிக மழை பெறப்பட்டதால், மண்ணில் போதுமான அளவு ஈரப்பதம் இருக்கும். இதைப் பயன்படுத்தி விவசாயிகள் விதைப்பு செய்வதன் மூலம், பயிரின் முதன்மை நீர் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும். எதிர் வரக்கூடிய இந்த ஆண்டிற்கும் சராசரி வடகிழக்குப் பருவமழை எதிர்பார்க்கப்படுவதால், தற்போது விதைக்கும் பயிர்கள் நல்ல வளர்ச்சியும் மகசூலும் பெற முடியும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஇதுபற்றிப் பயிர் மேலாண்மை இயக்ககத்தின் இயக்குநர் கீதா லட்சுமியிடம் பேசினோம். “தென்மேற்குப் பருவமழையைப் பொறுத்தவரையில், நான்கு மாதங்களில் கோவையில் 18 மழை நாள்களில், 308 மி.மீ மழை கிடைத்துள்ளது. ஆகஸ்ட் 9-ம் தேதி, ஒரே நாளில் மட்டும் 130 மி.மீ மழை கிடைத்தது. நடப்பாண்டில் தென்மேற்குப் பருவமழை, 50 சதவிகிதம் அதிகமாகவே பெற்றுள்ளோம். தென்மேற்கு பருவக் காற்று ஓரிரு நாள்களில் வடகிழக்காக மாறிவிடும். வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 20 முதல் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோவையில், அக்டோபர் மாதம் 146 மி.மீ மழையும், நவம்பர் மாதம் 118 மி.மீ மழையும், டிசம்பர் மாதம் 41 மி.மீ மழையும் எதிர்பார்க்கலாம். மூன்று மாதங்களில் 19 மழை நாள்களில் 305 மி.மீ மழை கிடைக்கும்” என்றார்.
வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் பருவமழை முன்னறிவிப்பை வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டு வருகிறது. அதில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சராசரி மழையளவு மற்றும் எதிர்பார்க்கப்படும் மழை யளவு என இரண்டு மழையளவுகள் குறிப்பிடப் பட்டிருக்கும். இந்த ஆண்டு, ‘பொதுவாக 60 சதவிகிதம் மழையளவு எதிர்பார்க்கப் படுகிறது’ என்று குறிப்பிடப் பட்டுள்ளது. தமிழகத்தின் எல்லா மாவட்டங்களுக்கும்
60 சதவிகிதம் மழையளவு கிடைக்கும் என மையமாகச் சொல்லியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு:
வேளாண் காலநிலை
ஆராய்ச்சி மையம்,
பயிர்கள் மேலாண்மை இயக்ககம்,
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்.
கோயம்புத்தூர் - 641003.
தொலைபேசி:
0422 6611319 / 6611519
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

