Published:Updated:

மதுரை; `அகிம்சை சந்தை’ - காந்தியை போற்றும் பூட்டான் முன்னாள் பிரதமர்!

பூட்டான் முன்னாள் பிரதமர் ஜிக்மி ஓய் தின்லே

இன்றைய இளம் தலைமுறையினருக்கு ஒரு சில வார்த்தைகள், இன்றைய இளைஞர்கள் தைரியத்தோடு, அதிகாரத்துக்கு எதிராக குரல் கொடுப்பது சமூகப் பொறுப்போடு நடப்பது என நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கிறார்கள். இது பாராட்டத்தக்கது.

`உலகின் வளங்கள் ஒருவனின் பேராசைக்கு போதுமானதாக இல்லையே அன்றி, உலக மக்கள் அனைவரின் தேவைகள் போதுமானதாக உள்ளன' என்ற காந்தியின் கூற்றை மையமாகக் கொண்டு, செப்டம்பர் 22 முதல் 26 வரை மதுரை காந்தி மியூசியத்தில் நடைபெற்ற ஓர் பெருவிழா `அகிம்சை சந்தை'.

இந்நிகழ்வு, தென்னிந்தியாவின் உள்ளூர் மற்றும் சிறு, குறு நிறுவனங்களின் இயற்கை சார்ந்த பொருட்களை, அகிம்சையின் முன்னோடியாய் உலகிற்கு பிரதிபலிக்கும் விதமாக அமைந்திருந்தது. இதில் 120க்கும் மேற்பட்ட விற்பனையகங்கள் போடப்பட்டிருந்தன.

அகிம்சை சந்தை நிகழ்வில்...
அகிம்சை சந்தை நிகழ்வில்...

இந்நிகழ்வின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பூட்டானின் முன்னாள் பிரதமர் ஜிக்மி ஓய் தின்லே கூறும்போது, ``காந்தியக் கொள்கை தற்போதைய இந்தியாவிற்கு மிக அவசியமானது. மக்கள் இயந்திரத்தனமான உலகில் நுழைந்து விட்டதால் ஏராளமான பொருட்களை வாங்கி குவிக்கிறார்கள் அது அவசியமா அவசியமில்லையா என சிந்திப்பதில்லை. மேலும் பொருளாதாரம் உட்பட, அனைத்திலும் முன்னேற்றம் என்பது அவசியமே ஆனால் அது இயற்கையை அழித்து முன்னேறுவதாக இருக்கக் கூடாது.

பூட்டானின் மகிழ்ச்சிக்கு ஒரு முக்கிய காரணம் காந்தியையும் காந்திய கொள்கைகளையும் பின்பற்றுதலே. மேலும் இதுபோன்ற சந்தைகளில் அவர்களை பொருட்களை உற்பத்தி செய்து நேரடி விற்பனை செய்வது வரவேற்கத்தக்கது.

மதுரை; `அகிம்சை சந்தை’ - காந்தியை போற்றும் பூட்டான் முன்னாள் பிரதமர்!

இன்றைய இளம் தலைமுறையினருக்கு ஒரு சில வார்த்தைகள், இன்றைய இளைஞர்கள் தைரியத்தோடு, அதிகாரத்துக்கு எதிராக குரல் கொடுப்பது சமூகப் பொறுப்போடு நடப்பது என நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கிறார்கள். இது பாராட்டத்தக்கது. இங்கு இந்த நிகழ்வில் பங்கேற்று காந்தியின் நினைவிடத்திற்கு வந்தது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது'' என்றார்.