Published:Updated:

மாடுகளையும் ஆன்லைனில் வாங்கலாம், விற்கலாம் - அமுல் நிறுவனம் அசத்தல்!

அமுல்

தற்போது இந்த பசுதான் செயலியில், 900-க்கும் மேற்பட்ட கால்நடைகள் விற்பனைக்கு வந்துள்ளது. இந்தக் கால்நடைகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.5 கோடி ஆகும்.

மாடுகளையும் ஆன்லைனில் வாங்கலாம், விற்கலாம் - அமுல் நிறுவனம் அசத்தல்!

தற்போது இந்த பசுதான் செயலியில், 900-க்கும் மேற்பட்ட கால்நடைகள் விற்பனைக்கு வந்துள்ளது. இந்தக் கால்நடைகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.5 கோடி ஆகும்.

Published:Updated:
அமுல்

ஆன்லைன் சந்தை லேட்டஸ்ட்டாக கால் பதித்துள்ள இடம் கால்நடைகள் ஆகும். என்னவென்று புரியவில்லையா? தற்போது நீங்கள் கால்நடைகளையும் ஆன்லைன் சந்தைகளிலேயே வாங்கிக்கொள்ளலாம் அல்லது விற்பனை செய்யலாம்.

ஆன்லைன் சந்தை
ஆன்லைன் சந்தை
Kaspersky

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர், அமுல் நிறுவனம், அமுல் பால் உற்பத்தி செயலியின் ஒரு பகுதியாக, `பசுதான்' (Pashudhan) என்ற இலவச செயலியை அந்நிறுவனத்துடன் இணைந்திருக்கும் 36 லட்சம் பால் உற்பத்தியாளர்களுக்கு அறிமுகப்படுத்தியது. இந்தச் செயலி ஒரு நவீன மற்றும் இணையக் கால்நடை சந்தை ஆகும். இந்தச் செயலியில் கால்நடைகளை விற்க மற்றும் வாங்க முடியும்.

தற்போது இந்த பசுதான் செயலியில், 900-க்கும் மேற்பட்ட கால்நடைகள் விற்பனைக்கு வந்துள்ளன. இந்தக் கால்நடைகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.5 கோடி ஆகும். இந்தக் கால்நடைகளில் பண்ணி, ஜஃபராபாதி, மெக்சனா போன்ற எருமை வகைகளும், சாகிவால், கிர், காங்கிரேஜ் போன்ற மாட்டு வகைகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

கால்நடை - மாதிரி புகைப்படம்
கால்நடை - மாதிரி புகைப்படம்

இந்தச் செயலியில் ஒரு கால்நடையின் விலை ரூ.32,000-ல் தொடங்கி ரூ.2 லட்சம் வரை நீள்கிறது. பசுதான் செயலியை அனைத்து ஆண்ட்ராய்டு போன்களிலும் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். இந்தச் செயலியில் கால்நடைகளை விற்பனைக்கு விளம்பரம் செய்ய, கால்நடையின் மூன்று புகைப்படங்கள், அதன் இனம், இடம் மற்றும் எத்தனை லிட்டர் பால் கறக்கும் என்ற விவரத்தைப் பதிவேற்றம் செய்தாலே போதுமானது.

இந்தச் செயலி விற்பனையாளரையும் வாங்குபவரையும் நேரடியாக இணைக்கிறது. நேரடியாக விற்பனை நடைபெறுவதால், கமிஷன் என்ற பேச்சுக்கும், ஏஜென்ட் என்ற பேச்சுக்கும் இடமே இல்லை என்று குஜராத் கூட்டுறவு பால் சந்தை கூட்டமைப்பின் தலைவர் ஷமல்பாய் படேல் தெரிவித்துள்ளார்.

Amul
Amul
The Indian Express

அமுலின் முதன்மை இயக்க அலுவலர் ஜாயின் மேத்தா கூறியிருப்பதாவது, ``இந்தக் கால்நடை சந்தை 24 மணி நேரமும் இயங்கக்கூடியது. விவசாயிகள் தங்களது தேவைக்கேற்ப மாட்டின் இனம், விலை, கறவை போன்றவற்றைப் பற்றிப் பேச்சுவார்த்தை நடத்தி கால்நடைகளை வாங்கிக்கொள்ளலாம்" என்று கூறியுள்ளார்.