பூசணிக்கு சந்தையில் எப்போதும் தேவையும் மவுசும் உண்டு. அதிலும், `தைப்பொங்கல்’ பண்டிகையின் போது சூரியபகவான் வழிபாட்டில் இடம் பெறும் காய்கறிகள் முதன்மையானது பூசணி. இயற்கை முறையில் பூசணியை சாகுபடி செய்து வருகிறார் தென்காசியைச் சேர்ந்த விவசாயி ராஜமாணிக்கம்.