Published:Updated:

`அரசு தவறாக வழங்கிய கூடுதல் பணத்தை திருப்பிக் கொடுத்த நேர்மை!’ -நாகை விவசாயிக்கு குவியும் பாராட்டு

விவசாயி - 
 தெட்சிணாமூர்த்தி
விவசாயி - தெட்சிணாமூர்த்தி

தனக்குரிய பணத்தைவிட ரூ.1,32,042 அதிகமாக வரவு வைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தனது நெல்லை விற்றபோது, கூடுதலாக கிடைத்த ரூ.1,32,042 பணத்தை, திருப்பி நாகை மாவட்ட கலெக்டரிடம் வழங்கிய விவசாயியின் நேர்மைக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

விவசாயம்
விவசாயம்
Representational Image

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள பஞ்சநதிக்குளம் மேற்கு கிராமத்தைச் சேர்ந்தவர் தெட்சிணாமூர்த்தி. இவர் வயலில் விளைந்த நெல்லை அங்குள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்தார். அதற்குரிய பணத்தை அவரது வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைத்தனர். ஆனால் தனக்குரிய பணத்தைவிட ரூ.1,32,042 அதிகமாக வரவு வைக்கப் பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்ய வேதாரண்யம் வந்த நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் கே நாயரிடம், அதிகப்படியான வந்த பணத்தை திருப்பி ஒப்படைத்தார் தெட்சிணாமூர்த்தி.

நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் கே நாயர்
நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் கே நாயர்

இதுபற்றி தெட்சிணாமூர்த்தியிடம் பேசியபோது, ``நாம உழைச்ச பணமே நமக்கு ஒட்டாதபோது, அரசாங்க பணமா இருந்தாலென்ன... அடுத்தவங்க பணமா இருந்தாலென்ன... அது நமக்குத் தேவையில்லை. அதனால்தான் அரசு தவறாக வழங்கிய கூடுதல் பணத்தை திருப்பிக் கொடுத்தேன்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு