Published:Updated:

ஜீரோ பட்ஜெட் முறையில் சாகுபடி: அசத்தும் 'தண்ணீர் கேன்' பாசனம் யுக்தி!

20 லிட்டர் தண்ணீர் கேனை இரண்டு மரங்களுக்கு இடையில் குழி எடுத்துப் பதித்துச் சொட்டுவானிலிருந்து கேனுக்குள் தண்ணீர் விழச் செய்வோம்.

பாசனம்
பாசனம்

வாய்க்கால் பாசனத்தில் நிலத்தைச் சென்றடையும் முன்பே வாய்க்காலில் தண்ணீர் விரயமாகிறது. இதைத் தவிர்க்கவே நேரடியாகப் பயிரின் வேருக்கு அருகே பாசனம் செய்ய சொட்டுநீர்ப் பாசனம் அறிமுகமானது. இதனால், குறைந்த தண்ணீரில் பாசனம் செய்துவருகிறார்கள் விவசாயிகள். ஆனால், நாளுக்கு நாள் குறைந்து கொண்டேபோகும் நிலத்தடி நீர், வறட்சி காரணமாகச் சொட்டுநீர்ப் பாசனத்துக்கே பல இடங்களில் தண்ணீர் இல்லை. விரிவாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2B7qh8r

இந்த நிலையில் சில விவசாயிகள் சொட்டுநீர்ப் பாசனம் முறையில் புதிய வழிமுறைகளைக் கண்டுபிடித்துப் பயன்படுத்தி வருகிறார்கள். 20 லிட்டர் தண்ணீர் கேனை மண்ணிற்குள் புதைத்து அதிலிருந்து வெளியேறும் நீரை, மரத்தின் வேருக்கே நேரடியாக வழங்கும் 'தண்ணீர் கேன் துளைப் பாசன முறை'யைக் கண்டுபிடித்து, சோதனை முயற்சியிலேயே நல்ல பலன் கிடைத்துள்ளதாகக் கூறுகிறார் தூத்துக்குடி விவசாயி சக்திகுமார்.

பாசனம்
பாசனம்

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகில் உள்ள காயாமொழியைச் சேர்ந்த இயற்கை விவசாயி சக்திகுமார். இவர் பசுமை விகடன் வாசகர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமானவர். ஜீரோ பட்ஜெட் முறையில் பப்பாளி, வாழை, கொய்யா ஆகியவற்றைச் சாகுபடி செய்துவருகிறார். தண்ணீர் கேன் துளைப் பாசனம் குறித்து சக்திகுமாரிடம் பேசியபோது, "இந்தப் பகுதி முழுவதும் மணற்பாங்கான செம்மண். இதில் நீர்ப்பிடிப்புத் தன்மை குறைவு. எவ்வளவு தண்ணீர் கொடுத்தாலும் உறிஞ்சிக்கொள்ளும். இது 4 ஏக்கர் நிலம். இதில் 2 ஏக்கரில் கொய்யாவும், 2 ஏக்கரில் நேந்திரன் வாழையும் சாகுபடி செய்யறேன். சொட்டுநீர்ப் பாசனத்தில்தான் தண்ணீர்ப் பாய்ச்சி வர்றேன். இந்த முறையில் மண்ணின் மேற்பகுதியில்தான் தண்ணீர் கிடைக்கிறது. அதனால், தண்ணீர்ப் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்காக ஒரு புதிய யுக்தியைக் கண்டுபிடித்தேன்.

20 லிட்டர் தண்ணீர் கேனை இரண்டு மரங்களுக்கு இடையில் குழி எடுத்துப் பதித்துச் சொட்டுவானிலிருந்து கேனுக்குள் தண்ணீர் விழச் செய்வோம். அந்தத் தண்ணீர் கேனில் போடப்பட்டிருக்கும் துளைகள் வழியாக மரத்தின் வேர்ப்பகுதிக்கே செல்லும்படி அமைத்துள்ளேன். இதனால், வழக்கமாகக் கொடுக்கும் தண்ணீர், கூடுதலாகச் சில மணிநேரம் தொடர்ச்சியாக வேருக்குக் கிடைக்கிறது" என்றவர், தண்ணீர் கேன் பாசன அமைப்புமுறை குறித்து விரிவாக விளக்கினார். முழுமையாக வாசிக்க > https://www.vikatan.com/news/agriculture/water-saving-techniques-using-water-cans-and-glucose-bottles

குளுக்கோஸ் பாட்டிலில் பாசனம்!

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகேயுள்ள நெம்மேலி கிராம இளைஞர்கள் மரம் வளர்க்க, குளுக்கோஸ் பாட்டில் பாசன முறையைப் பயன்படுத்துகிறார்கள். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஒன்றுகூடி மரக்கன்றுகளை நட்டு, பராமரித்து வருவதுடன் அதற்குச் சொட்டுநீர் முறையில் தண்ணீர் ஊற்றி வளர்த்துவருகின்றனர். இதனால், தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் வளர்ந்து சோலைவனமாகக் காட்சியளிக்கிறது.

பாசனம்
பாசனம்

இது சம்பந்தமாகப் பேசிய நெம்மேலி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார், "போன கோடையில கடுமையான தண்ணீர்த் தட்டுப்பாடு ஏற்பட்டுடுச்சு. மரங்கள் கருக தொடங்கியதைப் பார்த்துப் பதறிபோயிட்டோம். அதன் பிறகு மரமும் வளரணும், தண்ணியையும் சேமிக்கணும்னு யோசிச்சு, சொட்டுநீர் முறையில மரங்களை வளர்க்க ஆரம்பிச்சோம். இதற்காக மருத்துவமனைகள்ல பயன்படுத்தப்பட்ட தேவையில்லாத குளுக்கோஸ் பாட்டில்களைச் சேகரிச்சோம். பாட்டிலோட அடிப்பகுதியை, தண்ணி ஊத்துறதுக்கு ஏத்தமாதிரி வெட்டி எடுத்துட்டு, மரக்கன்றுக்கு பக்கத்துல ஒரு கம்பு நட்டு, கன்றுகளுக்கு மேல் பகுதியில பாட்டில் இருக்குற மாதிரிக் கட்டி வெச்சோம். பாட்டில்ல இருக்குற டியூப், மரக்கன்றோட வேர்ப்பகுதியில இருக்குற மாதிரி வெச்சோம். குளுக்கோஸ் பாட்டில்ல தண்ணியை ஊத்துனா, அது சொட்டு சொட்டா வேர் பகுதியில இறங்கும். இதனால குறைஞ்ச தண்ணிதான் செலவாகுது. தண்ணி ஊத்துறதும் எளிமையா இருக்குது" என்றார்.

- இந்த இளைஞர்களின் முயற்சி - குளுக்கோஸ் பாட்டிலில் பாசனம் குறித்து விரிவாக பசுமை விகடன் இதழில் வாசிக்க > தண்ணீர் கேன், குளுக்கோஸ் பாட்டிலில் பாசனம்! - நீரைச் சேமிக்கும் புதிய முயற்சி https://www.vikatan.com/news/agriculture/water-saving-techniques-using-water-cans-and-glucose-bottles

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் சிறப்புக் கட்டுரைகள்! > ரூ.200 மதிப்பிலான் ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே > சப்ஸ்க்ரைப் செய்ய க்ளிக் செய்க > http://bit.ly/2MuIi5Z |