Published:Updated:

நவீன போலி தர்மர்!

மண்புழு மன்னாரு
பிரீமியம் ஸ்டோரி
மண்புழு மன்னாரு

மாத்தியோசி

நவீன போலி தர்மர்!

மாத்தியோசி

Published:Updated:
மண்புழு மன்னாரு
பிரீமியம் ஸ்டோரி
மண்புழு மன்னாரு

‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்பதுதான் தமிழ் மருத்துவமான சித்த மருத்துவத்தின் அடிப்படைக் கோட்பாடு. எல்லாவற்றிலும் நவீனத்தை ஏற்றுக்கொண்ட தமிழகம், மருத்துவத்திலும் ஆங்கில மருத்துவத்தை அள்ளி எடுத்துக் கொண்டது. இதனால், நம் மண்ணில் விளைந்த சித்த மருத்துவத்தை மறந்தே போனோம். தீயவையிலும் நல்லது நடப்பது போல, கொரோனா ஏற்படுத்திய பாதிப்பால், பலரின் பார்வை சித்த மருத்துவம் பக்கம் திரும்பியுள்ளது. ஆனால், களநிலவரம்தான், சரியாக இல்லை. ஆங்கில மருத்துவர்கள் போல, அவசியமே இல்லாமல் மருந்து, மாத்திரைகளை அள்ளி, அள்ளிக் கொடுக்கும் பழக்கத்துக்கு சில சித்த மருத்துவர்கள் மாறி வருகிறார்கள். தரணி போற்றத் தமிழ் மருத்துவம் தழைத்து வளர வேண்டிய நேரம் இது. சிலரின் செயல்களை இடித்துரைக்கவே தொடர்ந்து எழுதி வருகிறோம். அந்த வகையில், இதோ, இந்த இதழிலும் சித்த மருத்துவர் பற்றிப் பார்ப்போம்.

மண்புழு மன்னாரு
மண்புழு மன்னாரு

இந்த சித்த மருத்துவரும் சென்னையைச் சேர்ந்தவர்தான். இவரும் பிரபலமானவர்தான். ஆரம்பத்தில் சித்த வைத்திய சாலையில் மருந்து இடிக்கும் வேலை செய்தார். இதில் ஒன்றும் சிறுமை இல்லை. சித்த மருத்துவம் கற்றுக்கொள்ளும் ஆரம்பக் கல்வி இது. ஆனால், அவர், மருந்து இடித்த கையோடு, சித்த மருத்துவராக அவதாரம் எடுத்துவிட்டார். கோடிக்கணக்கில் முதலீடு செய்து மருத்துவமனையும் தொடங்கி ‘வாய்’ மூலம் வளர்ந்து வருகிறார். இவரிடம் மருத்துவம் பார்க்கச் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று புள்ளி விவர வீடியோக்களையும், அடிக்கடி வெளியிட்டு வருகிறார்.

வாட்ஸ் அப்பை திறந்தால், ‘நவீன போதி தர்மன் நான்’ என்று கீச்சுக்குரலில் கிச்சு, மூச்சு ஊட்டுவார். இத்தனைக்கும் அது, ஊரடங்கு காலம்.

மூத்த சித்த மருத்துவர் ஒருவரிடம், அந்தமருத்துவர் பற்றி? கேட்டேன். ‘‘அந்தக் கொடுமையை ஏன் கேட்கிறீங்க. சித்த மருத்துவம் படித்தது போல வெள்ளை கோட்டு போட்டுக்கொண்டு, பந்தாவாக இருப்பார். ஆரம்பத்துல நாங்ககூட சித்த மருத்துவம் படித்தவர்தான்னு நம்புனோம். சித்த மருத்துவர்கள் அமைப்புல வந்து, அது, சரியில, இது சரியிலனு அதிகாரம் செய்வார். ஒருகட்டத்துல, நீங்க எந்தக் கல்லூரியில சித்த மருத்துவம் படிச்சீங்கனு கேட்டவுடனே, தயங்கித் தயங்கி, தான் பரம்பரை சித்த மருத்துவர்தான் என்று சொன்னார். சரி, பரம்பரை சித்த மருத்துவர் சொல்றதுக்கு, பதிவு, அரசு அங்கீகாரம் உண்டு. ஆனா, இவர்கிட்டா, எந்த பதிவும் கிடையாது. சரி, ஆர்வம், அனுபவத்துல மருத்துவம் பார்க்கிறார்னு கடந்து போக முடியல. 5 ரூபாய் மதிப்புள்ள மூலிகையை 50 ரூபாய்னு வித்தால்கூட மன்னிக்கலாம். 5,000 ரூபாய்க்கு விற்பனை செய்றது தான், அவரோட பாணி. விலை அதிகமா இருந்தா மருந்து தரமா இருக்குனு மக்களும் நம்பி வாங்குற கொடுமையும் நடக்குது’’ என்றார் ஆதங்கத்துடன்.

அண்மைக்காலமாக ஹீலர் என்ற பிரிவினர், தமிழ்நாடு முழுக்கப் புற்றீசல்போலப் புறப்பட்டுள்ளார்கள். நாமக்கல் கவிஞர் பாணியில் சொல்ல வேண்டும் என்றால், ‘ஹீலர் என்றொரு இனம் உண்டு தனியே அவர்க்கொரு குணம் உண்டு’. இவர்களைப் பற்றி அடுத்த இதழில் பார்ப்போம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism