Published:Updated:

அரவையை நிறுத்திய சர்க்கரை ஆலை; வெயிலில் காயும் கரும்புகள்; வேதனையில் விவசாயிகள்!

கரும்பு விவசாயிகள்

இந்த ஆண்டுக்கான கரும்பு அரவை பணி காலதாமதமாகத் தொடங்கப்பட்டு குறைந்த நாள்கள் மட்டுமே நடைபெற்றது. குருங்குளம் சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்பு அரவையை நிறுத்தியதால், சாகுபடி மேற்கொண்ட அனைத்து விவசாயிகளின் கரும்பும் முழுமையாக அரவை செய்யப்படவில்லை.

அரவையை நிறுத்திய சர்க்கரை ஆலை; வெயிலில் காயும் கரும்புகள்; வேதனையில் விவசாயிகள்!

இந்த ஆண்டுக்கான கரும்பு அரவை பணி காலதாமதமாகத் தொடங்கப்பட்டு குறைந்த நாள்கள் மட்டுமே நடைபெற்றது. குருங்குளம் சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்பு அரவையை நிறுத்தியதால், சாகுபடி மேற்கொண்ட அனைத்து விவசாயிகளின் கரும்பும் முழுமையாக அரவை செய்யப்படவில்லை.

Published:Updated:
கரும்பு விவசாயிகள்

தஞ்சாவூர் அருகே உள்ள குருங்குளத்தில் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனமான அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை, இந்த ஆண்டுக்கான கரும்பு அரவையை ஏப்ரல் 30-ம் தேதியோடு நிறுத்திக்கொண்டது. இதனால் இப்பகுதியில் உள்ள விவசாயி களில் பலர், தாங்கள் உற்பத்தி செய்த கரும்பை வெட்ட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களிலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சில கிராமங்களிலும் உள்ள விவசாயிகள், குருங்குளத்தில் உள்ள அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் பதிவு செய்து பல ஆயிரம் ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்து வருகிறார்கள்.

கரும்பு விவசாயிகள்
கரும்பு விவசாயிகள்

இந்த ஆண்டுக்கான கரும்பு அரவை பணி காலதாமதமாகத் தொடங்கப்பட்டு குறைந்த நாள்கள் மட்டுமே நடைபெற்றது. குருங்குளம் சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்பு அரவையை நிறுத்தியதால், இங்கு பதிவு செய்து சாகுபடி மேற்கொண்ட அனைத்து விவசாயிகளின் கரும்பும் முழுமையாக அரவை செய்யப்படாத நிலை உள்ளது. இதனால் தாங்கள் விளைந்த கரும்புகளை அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் பலர் தவித்து வருகின்றனர். தற்போது வெயில் கடுமையாக உள்ளதால் கரும்புகள் காய்ந்து வருகின்றன. இந்நிலையில்தான் குருங்குளம் சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை பணியை உடனடியாகத் தொடங்கக்கோரி இப்பகுதி கரும்பு விவசாயிகள், பட்டுக்கோட்டை - தஞ்சாவூர் சாலையில் ஒரத்தநாட்டை அடுத்தள்ள தென்னமநாடு புறவழிச்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதுகுறித்து தகவல் அறிந்த ஒரத்தநாடு காவல்துறையினர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். குருங்குளம் சர்க்கரை ஆலை நிர்வாக அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல்துறை தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. அதை ஏற்று விவசாயிகள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இப்பிச்னை குறித்து நம்மிடம் பேசிய இப்பகுதி கரும்பு விவசாயி கக்கரை சுகுமாறன், ``குருங்குளம் சர்க்கரை ஆலையிடம் ஒப்பந்தம் செஞ்சு, 6,000 ஏக்கர்ல கரும்பு சாகுபடி நடக்குறது வழக்கம்.

கரும்பு விவசாயிகள்
கரும்பு விவசாயிகள்

ஆனால், ஆலை நிர்வாகத்தோட மோசமான செயல்பாடுகளால் விவசாயிகள் ரொம்ப நொந்து போயிட்டாங்க. காலதாமதமாகக் கரும்பு அறுவடை செய்றது, அறுவடை செஞ்ச கரும்புக்கு உரிய நேரத்துல பணம் தராமல் இழுத்தடிக்குறது, இப்படி ஏகப்பட்ட பிரச்னைகள். இதனாலேயே விவசாயிகள் விரக்தி அடைஞ்சு கரும்பு சாகுபடியை படிபடியாகக் கை விட்டுட்டாங்க. இந்த வருஷம் இரண்டாயிரம் ஏக்கர்லதான் கரும்பு சாகுபடி நடந்திருக்கு. ஆனா, இதைக் கூட முழுமையாக அரைக்க முடியாத மோசமான நிலையில இந்த ஆலை இருக்கு.

கக்கரை சுகுமாறன்
கக்கரை சுகுமாறன்

வழக்கமா அக்டோபர், நவம்பர் மாதத்துலயே அரவை தொடங்கியிருக்கணும். ஆனால், இந்த வருஷம் டிசம்பர் மாசம் கடைசியிலதான் அரவை பணியைத் தொடங்கினாங்க. கரும்பு அறுவடை செய்ய ஆலை நிர்வாகம்தான் இயந்திரங்களை வேலையாள்களையும் அனுப்பணும். ஆனால், அதை ஒழுங்கா செய்யாததுனால கரும்பு அரவை தாமதமாகிக்கிட்டே இருந்துச்சு. விவசாயிகள் உற்பத்தி செஞ்ச கரும்பு முழுமையாக அறுவடை செய்றதுக்கு முன்னாடியே ஏப்ரல் 27-ம் தேதி அரவையை நிறுத்துறதா அதிகாரிகள் அறிவிச்சாங்க.

அரவையை மேலும் 15 நாள்களுக்கு நீடிக்கணும், இல்லைனா போராட்டம் நடத்துவோம்னு விவசாயிகள் சொன்னதால, மூணு நாள்களுக்கு கூடுதலா அரவை பணி நடந்துச்சு. ஏப்ரல் 30-ம் தேதியோடு அரவையை நிறுத்திட்டாங்க. இன்னும் 4,000 டன் கரும்பு அறுவடை செய்யப்படாமல் இருக்கு. அதிகாரிகளோட மோசமான செயல்பாடுகளுக்கு விவசாயிகள் பலிகடா ஆக வேண்டியதிருக்கு’’ என ஆதங்கப்பட்டார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism