Published:Updated:

தண்டோரா

அறிவிப்பு
பிரீமியம் ஸ்டோரி
News
அறிவிப்பு

அறிவிப்பு

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களைத் தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும்.

- ஆசிரியர்

இலவசப் பயிற்சிகள்

மாடித்தோட்டம்

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில் செப்டம்பர் 17-ம் தேதி ‘சுருள்பாசி வளர்ப்பு’, 19-ம் தேதி ‘அசோலா, பஞ்சகவ்யம், மண்புழு உரம் தயாரித்தல்’, 24, 25 ஆகிய தேதிகளில் ‘ஒருங்கிணைந்த கால்நடைப் பண்ணையம்’, 27-ம் தேதி ‘மாடித்தோட்டம் அமைத்தல்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, செல்போன்: 94885 75716, 77088 20505.

தண்டோரா

சிறுதானிய பொருள்கள்

காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையத்தில் செப்டம்பர் 16, 17-ம் தேதிகளில் ‘நன்மை செய்யும் பூச்சிகள் உற்பத்தி தொழில்நுட்பம்’, 19, 20-ம் தேதிகளில் ‘மதிப்பூட்டப்பட்ட சிறுதானிய பொருள்கள் தயாரித்தல்’, 24, 25-ம் தேதிகளில் ‘மீன் வளர்ப்புத் தொழில்நுட்பங்கள்’, 26, 27-ம் தேதிகளில் ‘மண்வளப் பிரச்னைகளைச் சீர்படுத்துதல் மற்றும் கம்போஸ்ட் உற்பத்தி’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 044 27452371.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
தண்டோரா

கட்டணப் பயிற்சிகள்

ஒருங்கிணைந்த பண்ணை

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் ஒடுகம்பட்டி அருகே உள்ள குடும்பம் - கொழிஞ்சி பண்ணையில் செப்டம்பர் 27, 28, 29 ஆகிய தேதிகளில் ‘ஒருங்கிணைந்த பண்ணையம்’ பயிற்சி நடைபெற உள்ளது. முன்னோடி இயற்கை விவசாயிகள், வல்லுநர்கள் பயிற்சி வழங்க உள்ளனர். தங்குமிடம், உணவு, களப்பயணமும் உண்டு. முன்பதிவு அவசியம். மூன்று நாள்களுக்கான கட்டணம் ரூ.600.

தொடர்புக்கு: 0431 2331879, 98424 33187.

இயற்கை வேளாண்மை

விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் செங்குந்தர் திரு.வி.க திருமண மஹாலில் செப்டம்பர் 28, 29 ஆகிய தேதிகளில், இயற்கை வேளாண்மை குறித்த பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சியில் மூலிகை கால்நடை மருத்துவர் புண்ணியமூர்த்தி, முன்னோடி விவசாயி மதுராந்தகம் சுப்பு ஆகியோர் கலந்துகொள்ள இருக்கிறார்கள். முன்பதிவு அவசியம். பயிற்சிக் கட்டணம் ரூ.300.

தொடர்புக்கு, செல்போன்: 99941 29516, 89408 65227.

ஆடு வளர்ப்பு

தூத்துக்குடி மாவட்டம், வாகைகுளம் ஸ்காட் வேளாண்மை அறிவியல் மையத்தில் செப்டம்பர் 15-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, 22-ம் தேதி ‘ஆடு வளர்ப்பு’, 29-ம் தேதி ‘சிப்பிக் காளான் வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. பயிற்சிக் கட்டணம் ரூ.200. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 0461 2269306, செல்போன்: 75983 75871.

அசோலா தீவனம்

கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்த கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில் செப்டம்பர் 28-ம் தேதி ‘அசோலா தீவனம் தயாரிப்பு மற்றும் சமையல் கழிவுகளிலிருந்து எரிவாயு தயாரித்தல்’ ஆகிய இரண்டு பயிற்சிகள் நடைபெற உள்ளன. ஒவ்வொரு பயிற்சிக்கும் கட்டணம் ரூ.200. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04652 246296

கறவை மாடு வளர்ப்பு

அரியலூர் மாவட்டம், சோழன்மாதேவியில் உள்ள வேளாண் அறிவியல் மையத்தில் செப்டம்பர் 18-ம் தேதி ‘ஆடு வளர்ப்பு’, 25-ம் தேதி ‘கறவை மாடு வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்து கொள்ளவும். பயிற்சிக் கட்டணம் ரூ.100.

தொடர்புக்கு, செல்போன்: 96008 30378

நாட்டுக்கோழி வளர்ப்பு

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம், மைராடா வேளாண் அறிவியல் நிலையத்தில் செப்டம்பர் 24-ம் தேதி ‘இயற்கை விவசாயத்தில் புதிய தொழில்நுட்பம்’, 25-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, 26-ம் தேதி ‘தேனீ வளர்ப்பு’, 27-ம் தேதி ‘மாடித்தோட்டம் அமைத்தல்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம். பயிற்சிக் கட்டணம் ரூ.150.

தொடர்புக்கு, தொலைபேசி: 04285 241626.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அறிவிப்பு

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவசாயிகள், நிகழ்ச்சிகள் குறித்த நிறைகுறைகளை உடனுக்குடன் தெரிவிக்க 044 66802927 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுங்கள். அங்கே கணினிக் குரல் வழிகாட்டும். அதற்கேற்ப 3 நிமிடங்களுக்குள், உங்கள் கருத்தைப் பதிவுசெய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த 3 நிமிடங்கள் முழுக்க முழுக்க உங்களுக்கே! அவசியமென்றால், நாங்களே உங்களைத் தொடர்புகொண்டு, மேலும் விவரங்களைப் பெற்றுக்கொள்வோம்.