Published:Updated:

தண்டோரா

நாட்டுக்கோழி வளர்ப்பு
பிரீமியம் ஸ்டோரி
நாட்டுக்கோழி வளர்ப்பு

அறிவிப்பு

தண்டோரா

அறிவிப்பு

Published:Updated:
நாட்டுக்கோழி வளர்ப்பு
பிரீமியம் ஸ்டோரி
நாட்டுக்கோழி வளர்ப்பு

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களைத் தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும்.

- ஆசிரியர்

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இலவசப் பயிற்சிகள்

பண்ணைக்குட்டை மீன் வளர்ப்பு

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்ப்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில் அக்டோபர் 15-ம் தேதி ‘வேளாண் பொருள்களில் மதிப்புக்கூட்டல்’, 17-ம் தேதி ‘பண்ணைக்குட்டை மீன் வளர்ப்பு’, 22-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, 24-ம் தேதி ‘பரண்மேல் ஆடு வளர்ப்பு, 31-ம் தேதி ‘கால்நடைக்கான தீவன வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, செல்போன்: 94885 75716, 77088 20505.

நாட்டுக்கோழி வளர்ப்பு
நாட்டுக்கோழி வளர்ப்பு

மரவள்ளிச் சாகுபடி

நாமக்கல் வேளாண் அறிவியல் மையத்தில் அக்டோபர் 16-ம் தேதி ‘மரவள்ளிச் சாகுபடி மற்றும் மதிப்புக்கூட்டல்’, 22-ம் தேதி ‘மண்வள மேம்பாட்டு முறைகள்’, 23-ம் தேதி ‘மீன் உணவு உற்பத்தி மற்றும் மேலாண்மை’, 25-ம் தேதி ‘கால்நடை களுக்கான தீவனம் தயாரிப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04286 266345, 266144,

காடை வளர்ப்பு

கடலூர், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் அக்டோபர் 15-ம் தேதி ‘காடை வளர்ப்பு, 22-ம் தேதி ‘கறவை மாடு வளர்ப்பு’, 29-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04142 290249.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கட்டணப் பயிற்சிகள்

காளான் வளர்ப்பு

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம், மைராடா வேளாண் அறிவியல் நிலையத்தில் அக்டோபர் 24-ம் தேதி ‘மாடித்தோட்டம் அமைத்தல்’, 25-ம் தேதி ‘காளான் வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம். பயிற்சிக் கட்டணம் ரூ.150.

தொடர்புக்கு, தொலைபேசி: 04285 241626.

இயற்கை உரம்

கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்த கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில் அக்டோபர் 19-ம் தேதி ‘இயற்கை உரங்கள், சமையல் கழிவுகளிலிருந்து எரிவாயு தயாரித்தல்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. ஒவ்வொரு பயிற்சிக்கும் கட்டணம் ரூ.200. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04652 246296.

வெள்ளாடு வளர்ப்பு
வெள்ளாடு வளர்ப்பு

ஒருங்கிணைந்த பண்ணை

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் ஒடுகம்பட்டி அருகே உள்ள குடும்பம் - கொழிஞ்சிப் பண்ணையில் அக்டோபர் 18, 19, 20 ஆகிய தேதி களில் ‘ஒருங்கிணைந்த பண்ணையம்’ பயிற்சி நடைபெற உள்ளது. முன்னோடி இயற்கை விவசாயிகள், வல்லுநர்கள் பயிற்சி வழங்க உள்ளனர். தங்குமிடம், உணவு, களப்பயணமும் உண்டு. முன்பதிவு அவசியம். மூன்று நாள்களுக்கான கட்டணம் ரூ.600.

தொடர்புக்கு: 0431 2331879, 98424 33187.

வெள்ளாடு வளர்ப்பு

தூத்துக்குடி மாவட்டம், வாகைகுளம் ஸ்காட் வேளாண்மை அறிவியல் அக்டோபர் 16-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, 23-ம் தேதி ‘வெள்ளாடு வளர்ப்பு’, 30-ம் தேதி ‘கால்நடைகளில் நோய்த்தடுப்பு முறைகள்’, நவம்பர் 6-ம் தேதி ‘பசுங்கன்று மற்றும் ஆட்டுக்குட்டிகள் வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. பயிற்சிக் கட்டணம் ரூ.200. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 0461 2269306, செல்போன்: 75983 75871.

அறிவிப்பு

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவசாயிகள், நிகழ்ச்சிகள் குறித்த நிறைகுறைகளை உடனுக்குடன் தெரிவிக்க 044 66802927 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுங்கள். அங்கே கணினிக் குரல் வழிகாட்டும். அதற்கேற்ப 3 நிமிடங்களுக்குள், உங்கள் கருத்தைப் பதிவுசெய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த 3 நிமிடங்கள் முழுக்க முழுக்க உங்களுக்கே! அவசியமென்றால், நாங்களே உங்களைத் தொடர்புகொண்டு, மேலும் விவரங்களைப் பெற்றுக்கொள்வோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism