Published:Updated:

தண்டோரா

பசுமை விகடன்
பிரீமியம் ஸ்டோரி
பசுமை விகடன்

அறிவிப்பு

தண்டோரா

அறிவிப்பு

Published:Updated:
பசுமை விகடன்
பிரீமியம் ஸ்டோரி
பசுமை விகடன்

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களைத் தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும்.

- ஆசிரியர்

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இலவசப் பயிற்சிகள்

நாட்டுக்கோழி வளர்ப்பு

கடலூர், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் டிசம்பர் 10-ம் தேதி ‘வெள்ளாடு வளர்ப்பு’, 17-ம் தேதி ‘பன்றி வளர்ப்பு’, 23-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, 30-ம் தேதி ‘கறவை மாடு வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04142 290249.

அசோலா தயாரிப்பு

சிவகங்கை மாவட்டம், அமராவதிபுதூரிலுள்ள கிராமியப் பயிற்சி மையத்தில், டிசம்பர் 2-ம் தேதி ‘மண்புழு உரம் தயாரிப்பு’, 3-ம் தேதி ‘ஆடு வளர்ப்பு’, 4-ம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு’, டிசம்பர் 9-ம் தேதி ‘சுருள்பாசி மற்றும் அசோலா தயாரிப்பு’, 10-ம் தேதி ‘தீவனப் பயிர் சாகுபடி’ ஆகிய பயிற்சிகள் நடைபெறவிருக்கின்றன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, செல்போன்: 04565 250651, 94438 44651.

ஆடு வளர்ப்பு

திண்டுக்கல் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நவம்பர் 28-ம் தேதி ‘ஆடு வளர்ப்பு’ பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 0451 2460141.

சாண எரிவாயு பயிற்சி

கோயம்புத்தூர் மாவட்டம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திலுள்ள புதுப்பிக்கவல்ல ஆற்றல் பொறியியல் துறை சார்பில் டிசம்பர் 16-ம் தேதி முதல் ஜனவரி 4-ம் தேதி வரை 15 நாள்களுக்கு ‘சுழற்சாவி முகவர்கள் மற்றும் சாண எரிவாயு திறன் மேம்பாட்டுப் பயிற்சி’ நடைபெற உள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்கள் கலை, அறிவியல், பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கு வந்துசெல்ல பயணப்படி வழங்கப்படும். அனுமதி இலவசம். முன்பதிவு முக்கியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 0422 6611276, செல்போன்: 98429 49995.

கட்டணப் பயிற்சிகள்

பூச்சிவிரட்டி தயாரிப்பு

கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்த கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில் டிசம்பர் 7-ம் தேதி ‘இயற்கை உரங்கள் தயாரித்தல்’, 28-ம் தேதி ‘வளர்ச்சி ஊக்கிகள், பூச்சிவிரட்டிகள் தயாரித்தல்’, ‘சமையலறைக் கழிவுகளிலிருந்து எரிவாயு தயாரித்தல்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. ஒவ்வொரு பயிற்சிக்கும் கட்டணம் ரூ.200. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04652 246296.

கறவை மாடு வளர்ப்பு

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில் டிசம்பர் 3-ம் தேதி ‘இயற்கை முறையில் நெல் சாகுபடி’, 6-ம் தேதி ‘உணவுப் பதப்படுத்தும் இயந்திரங்கள்’, 11-ம் தேதி ‘கறவை மாடு வளர்ப்பு’, 13-ம் தேதி ‘மல்லிகையில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை’, 16-ம் தேதி ‘நன்னீர் மீன் வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் இலவசப் பயிற்சிகளாக நடைபெற உள்ளன.

முன்பதிவு செய்துகொள்ளவும்.

மேலும், நவம்பர் 28-ம் தேதி ‘அலங்கார மீன் வளர்ப்பு’, டிசம்பர் 9-ம் தேதி ‘தினைச் சாகுபடியில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை’, 10-ம் தேதி ‘மகளிருக்கான உணவுப் பதப்படுத்துதல்’, 17-ம் தேதி ‘அலங்கார மீன் வளர்ப்பு’, 18-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, 20-ம் தேதி ‘சிப்பிக் காளான் வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. பயிற்சிக் கட்டணம் ரூ.100. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04577 264288.

மண்புழு உரம்

தூத்துக்குடி மாவட்டம், வாகைகுளம் ஸ்காட் வேளாண்மை அறிவியல் மையத்தில் நவம்பர் 30-ம் தேதி ‘மண்புழு உரம் தயாரித்தல்’ பயிற்சி நடைபெற உள்ளது. பயிற்சிக் கட்டணம் ரூ.200. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 0461 2269306, செல்போன்: 75983 75871.

தண்டோரா

மூலிகை முற்றம்

திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் தெப்பக்குளம் அருகிலுள்ள சித்தர் அறிவியல் கலைக்கூடத்தில் டிசம்பர் 14, 15 ஆகிய தேதிகளில் ‘மூலிகை முற்றம்’ பயிற்சி நடைபெற உள்ளது.

மூலிகைகளை அடையாளம் காணல், கைமருந்து செய்முறை, மூலிகைத்தோட்டம் அமைத்தல், அஞ்சறைப்பெட்டிக்கடை (நாட்டு மருந்துக்கடை) நடத்துதல் போன்றவை குறித்து சித்த மருத்துவர் மைக்கேல் செயராசு பயிற்சி கொடுக்கவிருக்கிறார். பயிற்சிக் கட்டணம் ரூ.200 மட்டும். தங்குமிடம் இலவசம். முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, செல்போன்: 98421 66097.

நாட்டுக்கோழி வளர்ப்பு

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம், மைராடா வேளாண் அறிவியல் நிலையத்தில் நவம்பர் 28-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’ பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு அவசியம். பயிற்சிக் கட்டணம் ரூ.150.

தொடர்புக்கு, தொலைபேசி: 04285 241626.

அறிவிப்பு

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவசாயிகள், நிகழ்ச்சிகள் குறித்த நிறைகுறைகளை உடனுக்குடன் தெரிவிக்க 044 66802927 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுங்கள். அங்கே கணினிக் குரல் வழிகாட்டும். அதற்கேற்ப 3 நிமிடங்களுக்குள், உங்கள் கருத்தைப் பதிவுசெய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த 3 நிமிடங்கள் முழுக்க முழுக்க உங்களுக்கே! அவசியமென்றால், நாங்களே உங்களைத் தொடர்புகொண்டு, மேலும் விவரங்களைப் பெற்றுக்கொள்வோம்.