Published:Updated:

தண்டோரா

கறவை மாடு வளர்ப்பு
பிரீமியம் ஸ்டோரி
கறவை மாடு வளர்ப்பு

அறிவிப்பு

தண்டோரா

அறிவிப்பு

Published:Updated:
கறவை மாடு வளர்ப்பு
பிரீமியம் ஸ்டோரி
கறவை மாடு வளர்ப்பு

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களைத் தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும்.

- ஆசிரியர்

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இலவசப் பயிற்சிகள்

சாண எரிவாயு பயிற்சி

கோயம்புத்தூர் மாவட்டம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திலுள்ள புதுப்பிக்கவல்ல ஆற்றல் பொறியியல் துறை சார்பில் டிசம்பர் 16-ம் தேதி முதல் ஜனவரி 4-ம் தேதி வரை 15 நாள்களுக்கு ‘சுழற்சாவி முகவர்கள் மற்றும் சாண எரிவாயு திறன் மேம்பாட்டுப் பயிற்சி’ நடைபெற உள்ளது.

பன்னிரண்டாம் வகுப்பு முடித்தவர்கள் கலை, அறிவியல், பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கு வந்துசெல்ல பயணப்படி வழங்கப்படும். அனுமதி இலவசம். முன்பதிவு முக்கியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 0422 6611276, செல்போன்: 98429 49995.

பூச்சி நிர்வாகம்

நாமக்கல் வேளாண் அறிவியல் மையத்தில் டிசம்பர் 18-ம் தேதி ‘மீன்களில் நோய் பாதுகாப்பு’, 19-ம் தேதி ‘கத்திரி, மிளகாய், வெண்டை மற்றும் தக்காளி ஆகிய பயிர்களில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் நிர்வாகம்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04286 266345/ 266144.

பால் மதிப்புக்கூட்டல்

சென்னையை அடுத்த அலமாதி, கொடுவேளியில் உள்ள தமிழ்நாடு உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரியில் டிசம்பர் 18 முதல் 20-ம் தேதி வரை மூன்று நாள்களில் ‘மதிப்பூட்டிய பால் பொருள்கள் தயாரித்தல்’ பயிற்சி நடைபெற உள்ளது. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 044 27680214/15. செல்போன்: 99949 36544

நாட்டுக்கோழி வளர்ப்பு

கடலூர், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் டிசம்பர் 17-ம் தேதி ‘பன்றி வளர்ப்பு’, 23-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, 30-ம் தேதி ‘கறவை மாடு வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04142 290249.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கட்டணப் பயிற்சிகள்

பூச்சிவிரட்டி தயாரிப்பு

கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்த கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில் டிசம்பர் 28-ம் தேதி ‘வளர்ச்சி ஊக்கிகள், பூச்சிவிரட்டிகள் தயாரித்தல்’, ‘சமையலறைக் கழிவுகளிலிருந்து எரிவாயு தயாரித்தல்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. கட்டணம் ரூ.200. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04652 246296.

கறவை மாடு வளர்ப்பு
கறவை மாடு வளர்ப்பு

கறவை மாடு வளர்ப்பு

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலையத்தில் டிசம்பர் 13-ம் தேதி ‘மல்லிகையில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை’, 16-ம் தேதி ‘நன்னீர் மீன் வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் இலவசப் பயிற்சிகளாக நடைபெற உள்ளன.

முன்பதிவு செய்துகொள்ளவும்.

மேலும், டிசம்பர் 17-ம் தேதி ‘அலங்கார மீன் வளர்ப்பு’, 18-ம் தேதி ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, 20-ம் தேதி ‘சிப்பிக் காளான் வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. பயிற்சிக் கட்டணம் ரூ.100. முன்பதிவு செய்துகொள்ளவும்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04577 264288.

மூலிகை முற்றம்

திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் தெப்பக்குளம் அருகிலுள்ள சித்தர் அறிவியல் கலைக்கூடத்தில் டிசம்பர் 14, 15 ஆகிய தேதிகளில் ‘மூலிகை முற்றம்’ பயிற்சி நடைபெற உள்ளது.

மூலிகைகளை அடையாளம் காணல், கைமருந்து செய்முறை, மூலிகைத்தோட்டம் அமைத்தல், அஞ்சறைப்பெட்டிக்கடை (நாட்டு மருந்துக்கடை) நடத்துதல் போன்றவை குறித்துச் சித்த மருத்துவர் மைக்கேல் செயராசு பயிற்சி கொடுக்கவிருக்கிறார். பயிற்சிக் கட்டணம் ரூ.200 மட்டும். தங்குமிடம் இலவசம். முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, செல்போன்: 98421 66097.

அங்கக வேளாண்மை

தூத்துக்குடி மாவட்டம், வாகைகுளம் ஸ்காட் வேளாண்மை அறிவியல் மையத்தில் டிசம்பர் 19-ம் தேதி ‘பாலில் மதிப்புக்கூட்டல்’, 21-ம் தேதி ‘தோட்டக்கலைப் பண்ணையத்தில் அங்கக வேளாண்மை’, 30-ம் தேதி ‘விவசாயிகளுக்கான வேளாண் இணையதளங்கள் மற்றும் அலைபேசிப் பயிற்சி’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. பயிற்சிக் கட்டணம் ரூ.150. முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 0461 2269306, செல்போன்: 75983 75871.

மதிப்புக்கூட்டல்

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம், மைராடா வேளாண் அறிவியல் நிலையத்தில் டிசம்பர் 24-ம் தேதி ‘வெள்ளாடு வளர்ப்பு’, 26-ம் தேதி ‘இயற்கை விவசாயத்தில் புதிய தொழில்நுட்பம்’, 27-ம் தேதி ‘காளான் வளர்ப்பு’, 30-ம் தேதி ‘பாலில் மதிப்புக்கூட்டல்’ ஆகிய பயிற்சி நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம். பயிற்சிக் கட்டணம் ரூ.150.

தொடர்புக்கு, தொலைபேசி: 04285 241626.

அறிவிப்பு

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவசாயிகள், நிகழ்ச்சிகள் குறித்த நிறைகுறைகளை உடனுக்குடன் தெரிவிக்க 044 66802927 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுங்கள். அங்கே கணினிக் குரல் வழிகாட்டும். அதற்கேற்ப 3 நிமிடங்களுக்குள், உங்கள் கருத்தைப் பதிவுசெய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த 3 நிமிடங்கள் முழுக்க முழுக்க உங்களுக்கே! அவசியமென்றால், நாங்களே உங்களைத் தொடர்புகொண்டு, மேலும் விவரங்களைப் பெற்றுக்கொள்வோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism